காற்று வாங்க போனேன்! Kaatru Vaanga Ponen – (Tamilpiththan kavithai-10)

0
1338

காற்று வாங்க போனேன்

Kaatru Vaanga Ponen

சும்மா காற்று வாங்கி விட்டு வருவதாக‌
அப்பாவிடம் பொய் கூறிச் சென்றேன்
வழியோரம் நடந்து சென்றேன்
பல விழியோரக் கவிதைகள்
தென்றல் வீசிக் கடந்து சென்றன‌
இளமையின் துடிப்பில் எதிரில் வந்த
புயலில் சிக்கிக்கொண்டேன்
புயலில் முக்குளித்து கண்டெடுத்தேன்
இரண்டு முத்துக்கள்,
அவையிரண்டும் இன்று
சும்மா காற்று வாங்கி விட்டு வருவதாக
என்னிடம் கூறிவிட்டு சென்றுவிட்டன..!

அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: