25-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 25-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 25-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 25.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 25/6/20, Today News in Tamil 25.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

இலங்கை வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், மழையும் காற்றும் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்பத்து காடழிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பு வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி.!

“புதிய புதிய குற்றச்சாட்டுக்களை பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது” முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு.

யாழ்ப்பாணம் அரியாலையில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ள இடத்தில் நட்சத்திர விடுதி அமைக்க அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு.!

யாழ்ப்பாணம் ,வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிப்போரிடம் நகைகளை அறுக்கும், பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது..!

“கருணாவுக்கு வாக்களிப்பதும் விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒரே முடிவையே தரும்” தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செ. மயூரன் கருத்து.

“துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை தருகிறது”- இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

Tamil News Today India

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து வருவதற்காக மேலும் 29 விமானங்கள் சேவையில், மத்திய அரசு தெரிவிப்பு.

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டரில் பிரமாண்ட மருத்துவமனை அமைக்கப்பகிறது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும்.- மத்திய அரசு.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், மாதிரி வாகனத்தில் பொருத்தப்பட்ட மிகச் சிறிய அளவிலான தெளிப்பான், அஜ்மீர் மற்றும் பிகானிரில் பரிசோதிப்பு.

சென்னையில் கொரோனா தொற்றானது ஒக்டோபரில் உச்சநிலையை அடையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 48 கடைகளுக்கு ஊரடங்கு விதிகளை மீறியதால் சீல் வைப்பு.!

Tamil News Today World

இங்கிலாந்தில் பயணச்சரிவு தொடர்ந்து வருவதால் 20 ஆயிரம் பேருக்கான வேலைகள் ஆபத்தில் இருப்பதாக விமான நிலையங்கள் எச்சரிக்கை.!

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரின் 13 ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பு.

ஜேர்மனில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 587 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புதன்கிழமை வெளியான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் தரவுகள் அறிக்கை.

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியான ஓக்சாகா நகரில் 7.4 ரிச்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.

அவுஸ்ரேலியா, விக்டோரியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸினால் ஒருவர் மர(ண)ம்.

நியூயோர்க்கில் சுதந்திர தினத்திற்கு முன்னர் அனைத்து கடற்கரைகளும் நீச்சலுக்காக திறக்கப்படும் – மேயர் பில் டி பிளேசியோ.

Tamil News Live

ஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,659 மற்றும் சவரன் ரூ.37,272-க்கு விற்பனை செய்யபடுகிறது.

தளபதி விஜய்க்கு தயிர் சாதம் என்றால் மிகவும் பிடிக்குமாம்- மாளவிகா.

ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங் மன அழுத்த‌ம் காரணமாக மாடியிலிருந்து குதித்து தற்கொ(லை) செய்துகொண்டுள்ளார்.

Today News Tamil – Tamil News Today 25-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆகா இம்புட்டு ஸ்லிம் ஆகிட்டாளே குட்டி! 30 கிலோ உடல் எடையை குறைத்து அசர வைத்த வித்யூ லேகா.
Next articleஇன்றைய ராசி பலன் 25.06.2020 Today Rasi Palan 25-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!