21-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 21-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 21-07-2020

Today Live News Srilanka

அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி 2ம் தவணைக்காக மூடப்பட்டு பின்னர் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும். — கல்வி அமைச்சு அறிவிப்பு.

“பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு.

“தமிழர்களின் ஜனநாயக பலம் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, சர்வதேசத்தின் உதவியை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும்” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து.

“ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும், அந்த கட்சிக்கு கொள்கைகள் கிடையாது” ஐக்கிய தேசியக் கட்சி நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு.

“எனது ஒளிப்படங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்” – கொழும்பு பேராயார் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை.

இலங்கையில் 6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கிளிநொச்சியில் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி.

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் திங்கட்கிழமை பிதிர்க் கடன்களை நிறைவேற்றினர்.

Today Tamil News India

கொரோனா தொற்றினால் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் சிகிச்சைப் பலனின்றி உயி(ரிழ)ப்பு.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து திங்கட்கிழமை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவி ஒருவர், கூட்டு பா(லி)யல் வன்கொ(டு)மைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்மு(றை)யாக மாறியுள்ளது.

அஸாமில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயி(ரிழ)ந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு.

Today News World

செவ்வாய் கிரகம் செல்லும் வரலாற்று சிறப்பு மிக்க “ஹோப்” விண்கலத்தை ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவியுள்ளது.

சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ்(84) பித்தப்பை வீக்கத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் நன்டெஸ் நகரில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து, 39 வயதுடைய ஒருவர் கைது.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் MINK எனப்படும் கீரிவகை வளர்க்கப்படும் பண்ணையில் கொரோனா வைரஸ்.. இதனால் அங்குள்ள ஒரு லட்சம் கீரிகளைக் கொல்ல உத்தரவு.

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முன்பாக சீன அரசை கண்டித்து இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் போராட்டம்..

இத்தாலியில் தலையொட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளை 30 பேர் கொண்ட மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.

அழிந்துவரும் காட்டு தேனீக்களை காப்பாற்ற உதவுமாறு யோர்க் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியரும் காட்டு தேனீ மரபியல் நிபுணர் சாண்ட்ரா ரெஹான், கனேடியர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Today News Live

தீபிகா படுகோனுடன் பிரபாஸ் இணைந்து திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்.

நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil News Today 21-07-2020, Today News In Tamil 21.07.2020, Tamil News Live 21 07 2020, Today Popular News Tamil 21.7.20, Today Trending News Tamil 21-07-20, Today News In Tamil Live 21/07/2020, Today Tamil News In Sri Lanka 21.07.20, Today Tamil News In India 21-07-20, Indraya Mukkiya Seithigal 21/07/20, Indraya Thalaippu Seithigal 21.07.2020, Today Cinema News Tamil 21/7/20, Today Breaking News In Tamil 21 07 2020, Today Headlines Tamil July-21-20, News Live Today Tamil 21-7-20, Daily Live News Update 21-07-21, 21-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 21, இன்றைய முக்கிய செய்திகள் 21-07-2020, செய்திகள் 21-07-20, தமிழ் நியூஸ் 21.07.20.

Today News Tamil – Tamil News Today 21-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 21.07.2020 Today Rasi Palan 21-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article22-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 22-07-2020 Today News in Tamil – Tamil News Live