15-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 15-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 15-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 15.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 15/6/20, Today News in Tamil 15.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபா கொள்ளையை தடுத்த பொலிஸ் அதிகாரி வி(ப)த்தில் உயி(ரிழ)ப்பு.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை!

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 சத‌வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

யாழ், மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிளிநொச்சி பூநகரி, வெட்டுக்காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்படவிருந்த 8 இலட்சம் பெறுமதியான முதிரைமர‌க்குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர், சாரதி தப்பி ஓட்டம்.

Tamil News Today India

வெளிநாடுகளில்லிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ரயில்வே கார்டு, தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடம் குறித்த சட்டமூலம் நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இந்தியா கண்டனம்.

கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. தற்போது பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

Tamil News Today World

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், யூசுப் ராஸா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் செப்டெம்பரில் மீண்டும் திறக்கப்படுவதை தொடர்பாக‌ பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கல்வி அமைச்சர் கவின் வில்லியம்சனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தின் வென்லிங் என்ற நகரில் எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 19 பேர் உயிரி(ழந்த)துடன் 172 பேர் காயமடைந்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு சீன நீதிமன்றம் ம(ர)ண தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த மாற்றுமொருவர் அற்லான்டா பொலிஸாரின் (Atlanta police) துப்பாக்கிச் சூட்டில் உயிரி(ழந்)த நிலையில், அற்லான்டா பொலிஸ் தலைமைப் பதவியில் உள்ள அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் (Erika Shields) பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்தைத் தொடர்ந்து மத்திய பாரிஸில் சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

Tamil News Live

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை..! தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “தோனி” படத்தில் தோனியாக நடித்தவர்.

மஹாபாரத கதையை படமாக எடுக்க அமீர்கான் முடிவு…! இதன் பட்ஜெட் எப்படியும் ரூ 1000 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஈ.சி.ஆர் சாலையில் போலீசார் வாகன சோதனை..! நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல், 28 பீர் பாட்டில்கள், 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஒளிப்பதிவாளர் கண்ணன் மாரடைப்பால் மர(ண)ம்.!

Today News Tamil – Tamil News Today 15-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 14
Next articleஇன்றைய ராசி பலன் 15.06.2020 Today Rasi Palan 15-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!