June 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 14

0

June 14 Today Special | June 14 What Happened Today In History. June 14 Today Whose Birthday (born) | June-14th Important Famous Deaths In History On This Day 14/06 | Today Events In History June-14th | Today Important Incident In History | ஜூன் 14 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 14-06 | ஆனி மாதம் 14ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 14.06 Varalatril Indru Nadanthathu Enna.

Today Special Historical Events In Tamil | 14-06

இன்றை நாளின் சிறப்பு

  • இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக உலக இரத்த வழங்குநர் நாளாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. (உலக குருதிக் கொடையாளர் நாள் இன்று)
  • தென்கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள மலாவி தேசம் விடுதலை பெற்ற‌ நாள் இன்று.
  • தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள போக்லாந்து தீவுகள், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் விடுதலை பெற்ற‌ நாள் இன்று.

வரலாற்று நிகழ்வுகள்

  • 1158ல் மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது.
  • 1216ல் பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான்.
  • 1276ல் மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர்.
  • 1287ல் மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின் இளவரசர்களையும் தோற்கடித்தான்.
  • 1381ல் இங்கிலாந்தின் இரண்டாம் மன்னரான ரிச்சார்டு, உழவர் கிளர்ச்சித் தலைவர்களை சந்தித்தார். லண்டன் கோபுரத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர்.
  • 1404ல் இங்கிலாந்து மன்னர் நான்காம் கென்றிக்கு எதிராக வேல்சின் கிளர்ச்சித் தலைவரான‌ ஒவெயின் கிளிந்துவர் தன்னை வேல்சு இளவரசராக அறிவித்து, பிரான்சுடன் இனைந்துகொண்டார்.
  • 1618ல் இடச்சு மொழியின் முதலாவது செய்திப் பத்திரிகையானது ஆம்சுடர்டாமில் வெளியிடப்பட்டது.
  • 1645ல் இங்கிலாந்தினுடைய‌ உள்நாட்டுப் போர் காரணமாக‌ நேசுபி சமரில் 12,000 அரசுப் படைகள் நாடாளுமன்றப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • 1667ல் இரண்டாவது ஆங்கிலேய இடச்சுப் போரில் இடச்சுக் கடற்படை மெட்வே முற்றுகை முடிவுக்கு வந்தது. ஐந்து நாட்கள் நடந்த இச்சமரில் அரச கடற்படை பெரும் தோல்வியைக் கண்டது.
  • 1690ல் இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் வில்லியம் முன்னாள் மன்னர் இரண்டாம் யேம்சுடன் சமரில் ஈடுபட அயர்லாந்துக்கு வந்தார்.
  • 1775ல் அமெரிக்கப் புரட்சிப் போரில் அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது.
  • 1789ல் பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகள் கிளர்ச்சி செய்ததால் கப்பலின் தலைவனுடன் சேர்ந்து 19 பேர் சிறிய படகொன்றில் தப்பித்து 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.
  • 1800ல் நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
  • 1807ல் போலந்து பிரீத்லாந்து சமரில் உருசிய இராணுவத்தை நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
  • 1822ல் சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
  • 1830ல் அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமாகியது அங்கு 34,000 பிரெஞ்சுப் படையினர் அல்ஜியர்ஸ் நகரை அடைந்தனர்.
  • 1846ல் கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாக் குடியரசை அறிவித்தனர்.
  • 1872ல் கனடாவில் தொழிற் சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
  • 1888ல் வெள்ளை இராசா பிராந்தியங்கள் சரவாக் இராச்சியம் என்ற பெயரில் பிரித்தானியக் காப்புநாடாகியது.
  • 1900ல் க‌வாய் தீவுக்கூட்டம் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
  • 1907ல் நோர்வே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.
  • 1926ல் பிரேசில் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.
  • 1940ல் ஜேர்ம‌னி இரண்டாம் உலகப் போரில் பாரிசை கைப்பற்றியது.
  • 1940ல் போலந்துப் போர்க் கைதிகள் 728 பேர் நாட்சிகளின் அவுசுவித்சு வதைமுகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
  • 1941ல் அனைத்து ஜேர்ம‌னிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
  • 1941ல் எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்களை சோவியத் ஒன்றியத்தில் அவர்களின் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.
  • 1944ல் இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியினால் கைப்பற்றப்பட்ட கன் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் பல முறைகள் தோல்வியுற்ற‌தை அடுத்து பிரித்தானிய இராணுவம் பெர்ச் நடவடிக்கையைக் கைவிட்டது.
  • 1946ல் மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர்.
  • 1949ல் இரண்டாம் அல்பேர்ட் என்ற ஒரு செம்முகக் குரங்கு விண்வெளிக்கு சென்ற முதலாவது குரங்கு என்ற பெயரைப் பெற்றது. இந்த குரங்கு வி-2 ஏவுகணை ஒன்றில் 134 கிமீ (83 மைல்) உயரத்திற்கு சென்று பின் விண்வெளியிலேயே துரதிஸ்டவசமாக‌ உயிரிழந்தது.
  • 1959ல் ரபாயெல் துரூகிலோவின் தலைமையிலான எதேச்சாதிகார அரசைக் கவிழ்க்கும் பொருட்டு கியூபாவில் இருந்து புறப்பட்ட ஒரு தொகை டொமினிக்கன் நாட்டவர்கள் டொமினிக்கன் குடியரசுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் நால்வரைத் தவிர எஞ்சிய அனைவரும் அங்கு கொல்லப்பட்டனர்.
  • 1962ல் பாரிசில் ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.
  • 1967ல் மரைனர் 5 என்னும் விண்கலம் வீனஸ் கோளை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • 1982ல் போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த அர்கெந்தீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தன.
  • 1999ல் தென்னாபிரிக்காவினுடைய‌ அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.
  • 2002ல் புவியருகு விண்பொருள் “2002 எம்என்” 75,000 கிமீ தூரத்தில் புவியைக் கடந்து சென்று சாதனை படைத்தது.
  • 2003ல் இலங்கைக் கடற்படையினரால் விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
  • 2014ல் 49 பேர் பயணம் செய்த உக்ரைனின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அனைவரும் கொல்லப்பட்டனர்.
  • 2017ல் உயரமான குடியிருப்பு மனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் லண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் 72 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று பிறந்தவர்கள்

  • 1444ல் இந்திய வானியலாளரும் கணிதவியலாளருமான நீலகண்ட சோமயாஜி பிறந்தார். (இறப்பு 1544)
  • 1736ல் பிரான்சிய இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ சார்லசு அகஸ்டின் டெ கூலும் பிறந்த நாள் (இறப்பு 1806)
  • 1811ல் அமெரிக்க நூலாசிரியரும் செயற்பாட்டாளருமான ஹேரியட் பீச்சர் ஸ்டோவ பிறந்த நாள் (இறப்பு 1896)
  • 1864ல் ஜேர்மானிய உளவியல் நிபுணர் மருத்துவர் அலாய்ஸ் அல்சீமர் பிறந்த நாள் (இறப்பு 1915)
  • 1868ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய உயிரியலாளரும் மருத்துவருமான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் பிறந்த நாள் (இறப்பு 1943)
  • 1889ல் சுவீடிய வானியலாளர் நட் உலுண்ட்மார்க் பிறந்த நாள் (இறப்பு 1958)
  • 1928ல் தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அ. வின்சென்ட் பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1928ல் அர்ச்செந்தீன-கியூப மருத்துவர் மற்றும் மார்க்சியவாதியும் புரட்சித் தலைவரும் அரசியல்வாதியுமான சே குவேரா பிறந்த நாள் (இறப்பு 1967)
  • 1946ல் அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப் பிறந்த நாள்
  • 1948ல் தமிழக வரலாற்றுப் புதின எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1967ல் இந்தியத் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா பிறந்த நாள்
  • 1968ல் மகாராட்டிர அரசியல்வாதி ராஜ் தாக்ரே பிறந்த நாள்
  • 1986ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிந்து மாதவி பிறந்த நாள்.
  • 1969ல் ஜேர்மானிய ரென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்று இறந்தவர்கள்

  • 1801ல் அமெரிக்க இராணுவத் தலைவரும் பிரித்தானிய உளவாளியுமான பெனடிக்ட் ஆர்னோல்டு இறப்பு நாள் (பிறப்பு 1741)
  • 1920ல் ஜெர்மனிய சமூகவியலாளர் மற்றும் பொருளியலாளர் மக்ஸ் வெபர் இறப்பு நாள் (பிறப்பு 1864)
  • 1926ல் அமெரிக்க-பிரான்சிய ஓவியர் மேரி கசாட் இறப்பு நாள் (பிறப்பு 1843)
  • 1927ல் ஆங்கிலேய எழுத்தாளர் செரோம் கே. செரோம் இறப்பு நாள் (பிறப்பு 1859)
  • 1928ல் ஆங்கிலேய செயற்பாட்டாளர் எம்மலின் பான்கர்ஸ்ட் இறப்பு நாள் (பிறப்பு 1857)
  • 1936ல் ஆங்கிலேயக் கவிஞரும் கட்டுரையாளரும் புதின எழுத்தாளருமான கில்பர்ட் கெயித் செஸ்டர்டன் இறப்பு நாள் (பிறப்பு 1874)
  • 1946ல் இசுக்கொட்டிய ஆங்கிலேய இயற்பியலாளர் மற்றும் பொறியியலாளர் ஜான் லோகி பைர்டு இறப்பு நாள் (பிறப்பு 1888)
  • 1961ல் இந்திய இயற்பியலாளர் க. சீ. கிருட்டிணன் இறப்பு நாள் (பிறப்பு 1898)
  • 1965ல் ஈழத்துப்பெரியார் மூதறிஞர் கந்தமுருகேசனார் இறப்பு நாள் (பிறப்பு 1902)
  • 1986ல் அர்ச்செந்தீன எழுத்தாளர் ஓர்கே லூயிசு போர்கெசு இறப்பு நாள் (பிறப்பு 1899)
  • 2001ல் இந்தியக் கல்வியாளர், நூலாசிரியர் மற்றும் அரசியல்வாதி சிறீபதி சந்திரசேகர் இறப்பு நாள் (பிறப்பு 1918)
  • 2012ல் திரைப்பட நடிகர் காகா ராதாகிருஷ்ணன் இறப்பு நாள் (பிறப்பு 1925)
  • 2014ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகை தெலுங்கானா சகுந்தலா இறப்பு நாள் (பிறப்பு 1951)
  • 2019ல் தமிழக இந்தியவியலாளர் அ. தாமோதரன் இறப்பு நாள் (பிறப்பு 1935)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 14.06.2020 Today Rasi Palan 14-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article15-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 15-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live