சுக்கு காபி மருத்துவ பயன்கள்: sukku kaapi payangal சுக்கின் பயன்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! சுக்கு காபி மருத்துவப் பயன்கள்!

0

சுக்கு காபி மருத்துவ பயன்கள்: sukku kaapi payangal (சுக்கு காபி) சுக்கின் பயன்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! சுக்கு காபி மருத்துவப் பயன்கள்!

மருத்துவ பயன்கள்: சுக்கு காபி மருத்துவ பயன்கள்: சுக்கு இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.

தலைவலியை போக்குவதற்கு சுக்கை நீர் விட்டு அல்லது பால் விட்டு அரைத்தோ அல்லது உரசியோ நெற்றியில் பூசி வந்தால் அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும் தலை வலி ஓடிவிடும். தலையில் வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று (பத்து) போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைத்துவிடும். வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம். உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ அல்லது கழுவியோ விடலாம்.

சுக்கு காபி மருத்துவ பயன்கள்

மூட்டுக்களில் வலி ஏற்படும் நேரங்களிலும் மற்றும் அஜீரணக்கோளாறு, வயிற்றுப் பொருமல், விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், வயிற்று வலி, புளித்த ஏப்பம், ஜலதோஷம், மூக்கடைப்பு, காதில் குத்தல் வலி, நாக்கு சுவையின்மை, மார்பில் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்த 100 மில்லி கொதிக்கும் நீரில் 5 கிராம் சுக்குப்பொடியை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்து அதன் பின்னர் தேன் அல்லது சர்க்கரை கலந்து சுக்கு கஷாயத்தை காலை மாலை என தொடர்ந்து 20 முதல் 40 நாட்கள் வரை குடித்துவர வேண்டும். சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலம் என்றால் கிராம்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி செய்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் இருந்த‌ இடம் தெரியாமல் போய்விடும்.

முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாரத்தில் ஒரு நாள் சுக்குப் பொடி சேர்த்த வத்தக்குழம்பு சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம். அடிக்கடி உணவில் சுக்கை சேர்த்து வந்தால் கீல் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா என்பன‌ வராமல் காத்துக்கொள்ளலாம்.

அதிகமான‌ உடல் உழைப்பு போன்ற காரணங்களாலும், தூக்கமின்மை, மற்றும் உணவு வேறுபாடு காரணமாக‌ சிலருக்கு திடீரென வாய்வுப்பிடிப்பு மற்றும் நெஞ்சுப்பகுதியை உள்ளுக்குள் அழுத்துவது போன்ற உணர்வு, புளியேப்பம் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நேரங்களில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால்,தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

தேள், பூரான் கடி விஷம் முறிக்க சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடிக்க வேண்டும்.

தொண்டைக் கட்டு சரியாக சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாகஅரைத்துப் பூசிவர கட்டு சரியாகும்.

சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி,தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

#சுக்கு காபி மருத்துவப் பயன்கள்:

அதிகமாக மது அருந்தியவர்களுக்கு சுக்குடன் தனியா வைத்து சிறிது நீர் சேர்த்து மைய்யாக அரைத்து உண்ணக்கொடுத்தால் போதை நீங்கி இயல்பு நிலை ஏற்படும்.

ஆரம்பநிலை வாதத்தை குணமாக்க சுக்குடன் வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவரவும்.

கடுமையான சளி பிரச்சனை உள்ளவர்கள் சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வந்தால் கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

கை, கால் மூட்டுகளில் வலிகள் ஏற்பட்டால் சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும் அந்த இடங்களில் பூசிவர வலி முற்றிலும் குணமாகும்.

ஒரு வெற்றிலையை சிறிது சுக்குடன் சேர்த்து மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும்.

பித்தத்தால் அவதிப்படுபவர்கள் சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்துகுடித்தால் பித்தம் விலகும்.

வாய்துர்நாற்றம், பல்வலி மற்றும் ஈறுகளின் பலவீனத்தை போக்க சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர பலன் கிடைக்கும்.

சிறிது சுக்குப்பொடி இட்டு தயிர்சாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண்கள் ஆறும்.

மூலநோயை குணப்படுத்த சுக்குடன் கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகுவது சிறந்த பலனை தரும்.

மிளகு, கருப்பட்டி, சுக்கு என்பவற்றை சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக்குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

விஷக்காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்துகஷாயம் செய்து தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர காச்சல் குணமாகும்.

சுக்குடன் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து கஷாயம் ஆக்கி காலை, மாலை பருகிவர மாந்தம் குணமாகும்.

மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகளை அழிப்பதற்கு சின்ன வெங்காயத்துடன் சிறிது சுக்கு சேர்த்து அரைத்து சாப்பிட வேண்டும்.

சுக்குடன் அதிமதுரம் சேர்த்து தூள் செய்து, தேனில்கலந்து சாப்பிட்டுவர இருமல் குணமாகும்.

சுக்குடன் மிளகு மற்றும் சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்குத்தேய்த்துக் குளித்து வந்தால் நீர்க்கோவை நீங்கும் ஈர் மற்றும் பேன் ஒழியும்.

அதிகமாக மழைக் காலங்களில் சளி மற்றும் இருமல் பிரச்சினையால் பலர் அவதிப்படுவது வழமையான ஒன்று தான். நெஞ்சில் கபம் சேரச் சேர இந்த பிரச்சனை தீவிரமாகிறது. மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் சரிவருவதில்லை இதைக் குணப்படுத்த சிறந்த இயற்கை மருத்துவம் இந்த சுக்கு மல்லி காபியே ஆகும். இது போன்ற இயற்கை மூலிகை பானங்களை வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது அருந்துவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும். அடிக்கடி ஏற்படும் உடல் நலக்கேடுகளில் இருந்து எம்மை காப்பது எமது கடமை ஆகும்.

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொருத்தம் பார்க்காம திருமணம் செஞ்சுடாதீங்க!!
Next articleசுளீர் வெயில் பெருகும் வியர்வை என கோடையைச் சமாளிக்க சில பாரம்பரிய டிப்ஸ்!