September 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 30

0

Today Special Historical Events In Tamil | 30-09 | September 30

September 30 Today Special | September 30 What Happened Today In History. September 30 Today Whose Birthday (born) | September-30th Important Famous Deaths In History On This Day 30/09 | Today Events In History September-30th | Today Important Incident In History | புரட்டாதி 30 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 30-09 | புரட்டாதி மாதம் 30ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 30.09 Varalatril Indru Nadanthathu Enna| September 30 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 30/09 | Famous People Born Today September 30 | Famous People died Today 30-09.

  • Today Special in Tamil 30-09
  • Today Events in Tamil 30-09
  • Famous People Born Today 30-09
  • Famous People died Today 30-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 30-09 | September 30

    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (போட்சுவானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1966)
    பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 30-09 | September 30

    1399ல் நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.
    1520ல் முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார்.
    1551ல் சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது.
    1744ல் பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர்.
    1791ல் மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது.
    1840ல் நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
    1882ல் தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
    1888ல் கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.
    1935ல் அமெரிக்காவில் அரிசோனா, நெவாடா மாநிலங்களைப் பிரிக்கும் ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.
    1938ல் செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை செருமனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்சு, செருமனி, இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன. சோவியத் ஒன்றியம், செக்கோசிலவாக்கியா ஆகியன இந்நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.
    1938ல் “பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்” நடத்தப்படுவது உலக நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: போலந்தின் நாடுகடந்த அரசின் பிரதமராக விளாதிசுலாவ் சிக்கோர்ஸ்கி தெரிவு செய்யப்பட்டார்.
    1945ல் இங்கிலாந்தில் எர்ட்ஃபோர்ட்சயர் தொடருந்து விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
    1946ல் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நேரடித் தொலைபேசி இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
    1947ல் பாக்கித்தான் ஐநாவில் இணைந்தது.
    1949ல் சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு செருமனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.
    1950ல் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
    1954ல் ஐக்கிய அமெரிக்கா நாட்டிலசு என்ற உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலை சேவைக்கு விட்டது.
    1965ல் இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.
    1966ல் பெக்குவானாலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானா குடியரசு ஆகியது.
    1967ல் இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
    1980ல் ஈதர்நெட் விவரக்கூற்றுகள் வெளியிடப்பட்டன.
    1993ல் லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.
    1995ல் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
    1999ல் சப்பான் டொக்கைமூரா அணுமின் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
    2001ல் மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர்.
    2003ல் தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
    2005ல் சர்ச்சைக்குரிய யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியானது.
    2007ல் இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.
    2008ல் ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் இறந்தனர்.
    2009ல் சுமாத்திராவை 7.6 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 1,115 பேர் உயிரிழந்தனர்.
    2016ல் ஆம்ஸ்டர்டம் அருங்காட்சியகத்தில் இருந்து 2002 டிசம்பர் 2 இல் திருடப்பட்ட வின்சென்ட் வான் கோவின் $100 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஓவியங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 30-09 | September 30

    1207ல் பாரசீகக் கவிஞரான‌ ரூமி பிறந்த நாள். (இறப்பு-1273)
    1550ல் செருமானிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ மைக்கேல் மேசுட்லின் பிறந்த நாள். (இறப்பு-1631)
    1864ல் சுவாமி இராமகிருஷ்ணரின் சீடரான‌ சுவாமி அகண்டானந்தர் பிறந்த நாள். (இறப்பு-1937)
    1870ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ சான் பத்தீட்டு பெரென் பிறந்த நாள். (இறப்பு-1942)
    1900ல் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதியான‌ எம். சி. சாக்ளா பிறந்த நாள். (இறப்பு-1981)
    1913ல் தமிழக அரசியல்வாதியும் தொழிலதிபருமான‌ ஆர். ராமநாதன் செட்டியார் பிறந்த நாள். (இறப்பு-1995)
    1922ல் இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ இருசிகேசு முகர்ச்சி பிறந்த நாள். (இறப்பு-2006)
    1928ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளரான‌ எலீ வீசல் பிறந்த நாள். (இறப்பு-2016)
    1931ல் தமிழகத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான‌ எம். ஏ. எம். ராமசாமி பிறந்த நாள். (இறப்பு-2015)
    1941ல் பொதுநலவாய நாடுகளின் 5வது பொதுச் செயலாளரான‌ கமலேஷ் சர்மா பிறந்த நாள்.
    1964ல் இத்தாலிய நடிகையான மோனிக்கா பெலூச்சி பிறந்த நாள்.
    1966ல் இந்திய-பிரித்தானிய வேதியியலாளரான‌ சங்கர் பாலசுப்பிரமணியன் பிறந்த நாள்.
    1980ல் சுவிட்சர்லாந்து டென்னிசு வீராங்கனையான‌ மார்டினா ஹிங்கிஸ் பிறந்த நாள்.
    1986ல் பிரான்சியக் கால்பந்தாட்ட வீரரான‌ ஒலிவியர் ஜிரூட் பிறந்த நாள்.
    1986ல் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரரான‌ மார்ட்டின் கப்டில் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 30-09 | September 30

    420ல் உரோமானியப் புனிதரான ஜெரோம் இறப்பு நாள். (பிறப்பு-347)
    1897ல் பிரான்சியப் புனிதரான‌ லிசியே நகரின் தெரேசா இறப்பு நாள். (பிறப்பு-1873)
    1974ல் தமிழறிஞரும் கவிஞருமான‌ இராய. சொக்கலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1898)
    1985ல் அமெரிக்க இயற்பியலாளரான‌ சார்லஸ் ரிக்டர் இறப்பு நாள். (பிறப்பு-1900)
    2001ல் இந்திய மற்றும் மத்தியப் பிரதேச அரசியல்வாதியான‌ மாதவ்ராவ் சிந்தியா இறப்பு நாள். (பிறப்பு-1945)
    2004ல் சிங்கள நடிகரும் இயக்குநரரும் அரசியல்வாதியுமான‌ காமினி பொன்சேகா இறப்பு நாள். (பிறப்பு-1936)
    2008ல் சிங்கப்பூர் அரசியல்வாதியான‌ ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1926)
    2010ல் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் நடிகருமான‌ சந்திரபோஸ் இறப்பு நாள். (பிறப்பு-
    2011ல் நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவரான‌ ரால்ஃப் ஸ்டைன்மன் இறப்பு நாள். (பிறப்பு-1943)
    2015ல் தமிழக அரசியல்வாதியான‌ கு. திருப்பதி இறப்பு நாள். (பிறப்பு-1930)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 29
    Next articleஇன்றைய ராசி பலன் 10.09.2022 Today Rasi Palan 10-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!