Today Special Historical Events In Tamil | 01-10 | October 01
October 01 Today Special | October 01 What Happened Today In History. October 01 Today Whose Birthday (born) | October -01st Important Famous Deaths In History On This Day 01/10 | Today Events In History October-01st | Today Important Incident In History | ஐப்பசி 01 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 01-10 | ஐப்பசி மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 01.10 Varalatril Indru Nadanthathu Enna| October 01 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/10 | Famous People Born Today October 01 | Famous People died Today 01-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 01-10 | October 01
குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (எல் சால்வடோர், குவாத்தமாலா, இலங்கை)
சீனத் தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது.
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (நைஜீரியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பலாவு, ஐக்கிய நாடுகளிடம் இருந்து, 1994)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (துவாலு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)
அனைத்துலக முதியோர் நாளாக கொண்டாடப்படுகிறது.
உலக சைவ உணவு நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 01-10 | October 01
கிமு 331ல் பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான்.
366ல் முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
959ல் முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
965ல் பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1553ல் இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது.
1730ல் உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான்.
1787ல் அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன.
1795ல் ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இசுப்பிரிமொண்ட் சமரை அடுத்து, பிரான்சு தெற்கு நெதர்லாந்தை அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியது.
1799ல் கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
1800ல் எசுப்பானியா லூசியானாவை பிரான்சிடம் தந்தது. முப்பது மாதங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா அதனை பிரான்சிடம் இருந்து வாங்கியது.
1814ல் நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.
1827ல் உருசிய-பாரசீகப் போர்: உருசிய இராணுவம் யெரெவானைக் கைப்பற்றியது. ஆர்மீனியாவில் முசுலிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
1833ல் இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.
1843ல் நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிடப்பட்டது.
1854ல் இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
1880ல் இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1887ல் பிரித்தானியா பலூசிஸ்தானைக் கைப்பற்றியது.
1892ல் இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.
1898ல் உருசியாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
1910ல் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1918ல் முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.
1936ல் பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
1939ல் இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் செருமனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.
1942ல் இரண்டாம் உலகப் போர்:: அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1943ல் நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.
1946ல் நாட்சித் தலைவர்களுக்கு நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.
1949ல் மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1953ல் சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
1960ல் நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1961ல் கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.
1964ல் சப்பானிய சின்கான்சென் அதி-வேகத் தொடருந்து சேவை டோக்கியோவில் இருந்து ஒசாக்கா வரை ஆரம்பிக்கப்பட்டது.
1966ல் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
1969ல் கான்கோர்டு விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தைத் தாண்டிப் பறந்தது.
1971ல் வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் ஆரம்பமானது.
1975ல் சீசெல்சு சுயாட்சி பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.
1977ல் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.
1978ல் துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1979ல் ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.
1982ல் சோனி நிறுவனம் முதலாவது குறுந்தகடு ஒலிபரப்பியை (சிடிபி-101) வெளியிட்டது.
1985ல் மரக்கால் நடவடிக்கை: இசுரேல் தூனிசியாவில் உள்ள பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தைத் தாக்கியது.
1989ல் தற்பால்சேர்க்கைத் திருமணத்தை உலகில் முதன் முதலாக டென்மார்க் சட்டபூர்வமாக்கியது.
1992ல் விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
1994ல் பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
2001ல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2005ல் பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 4 ஆத்திரேலியர் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
2006ல் பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது.
2012ல் ஆங்காங்கில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர், 102 பேர் காயமடைந்தனர்.
2015ல் குவாத்தமாலாவில் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 280 பேர் உயிரிழந்தனர்.
2017ல் காத்தலோனியாவில் இடம்பெற்ற விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என எசுப்பானிய நீதிமன்றம் அறிவித்தது.
2017ல் ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வேகஸ் மாநிலத்தில் இசை விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டு, 851 பேர் காயமடைந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 01-10 | October 01
1847ல் ஆங்கிலேய-இந்திய செயற்பாட்டாளரான அன்னி பெசண்ட் பிறந்த நாள். (இறப்பு-1933)
1896ல் பாக்கித்தானின் 1வது பிரதமரான லியாகத் அலி கான் பிறந்த நாள். (இறப்பு-1951)
1904ல் இந்தியக் கல்வியாளரும் அரசியல்வாதியுமான ஏ. கே. கோபாலன் பிறந்த நாள். (இறப்பு-1977)
1906ல் இந்தித் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான எஸ். டி. பர்மன் பிறந்த நாள். (இறப்பு-1975)
1912ல் ஆங்கிலேய கணிதவியலாளரும் வானியலாளரும் அரசியல்வாதியுமான கத்லீன் ஒல்லரென்ழ்சா பிறந்த நாள். (இறப்பு-2014)
1918ல் இந்தியத் தொழிலதிபரும் கண் மருத்துவருமான ஜி. வெங்கடசாமி பிறந்த நாள். (இறப்பு-2006)
1924ல் அமெரிக்காவின் 39வது அரசுத்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜிம்மி கார்ட்டர் பிறந்த நாள்.
1927ல் தமிழ்த் திரைப்பட நடிகரான சிவாஜி கணேசன் பிறந்த நாள். (இறப்பு-2001)
1928ல் சீனாவின் 5வது பிரதமரான சூ சுங்ச்சி பிறந்த நாள்.
1932ல் தமிழறிஞரும் எழுத்தாளருமான அரங்க முருகையன்ச் பிறந்த நாள். (இறப்பு-2009)
1936ல் ஈழத்து எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் பிறந்த நாள்.
1941ல் ஈழத்து வரலாற்றாய்வாளரும் கல்வியாளரும் எழுத்தாளருமான சி. க. சிற்றம்பலம் பிறந்த நாள்.
1941ல் ஈழத்து எழுத்தாளரான செ. யோகநாதன் பிறந்த நாள். (இறப்பு-2008)
1956ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான தெரசா மே பிறந்த நாள்.
1958ல் உருசிய-டச்சு இயற்பியலாளரான ஆந்தரே கெய்ம் பிறந்த நாள்.
1998ல் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவனும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகனுமான பாலச்சந்திரன் பிறந்த நாள். (இறப்பு-2009)
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 01-10 | October 01
1404ல் திருத்தந்தையான ஒன்பதாம் போனிஃபாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1356)
1973ல் கருநாடக, தமிழிசை அறிஞரான பாபநாசம் சிவன் இறப்பு நாள். (பிறப்பு-1890)
2008ல் தமிழக நாடக, திரைப்பட நடிகரான பூர்ணம் விஸ்வநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1921)
2010ல் பிரான்சிய வானியலாளரான அவுதவின் தோல்பசு இறப்பு நாள். (பிறப்பு-1924)
2012ல் எகிப்திய-ஆங்கிலேய மார்க்சிய சிந்தனையாளரும் வரலாற்றாளருமான எரிக் ஹாப்ஸ்பாம் இறப்பு நாள். (பிறப்பு-1917)
2013ல் அமெரிக்க எழுத்தாளரான டாம் கிளான்சி இறப்பு நாள். (பிறப்பு-1947)
2014ல் வெனிசுவேலாவின் அரசியல்வாதியான ராபர்ட் செரா இறப்பு நாள். (பிறப்பு-1987)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan