September 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 29

0

Today Special Historical Events In Tamil | 29-09 | September 29

September 29 Today Special | September 29 What Happened Today In History. September 29 Today Whose Birthday (born) | September-29th Important Famous Deaths In History On This Day 29/09 | Today Events In History September-29th | Today Important Incident In History | புரட்டாதி 29 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 29-09 | புரட்டாதி மாதம் 29ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 29.09 Varalatril Indru Nadanthathu Enna| September 29 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 29/09 | Famous People Born Today September 29 | Famous People died Today 29-09.

  • Today Special in Tamil 29-09
  • Today Events in Tamil 29-09
  • Famous People Born Today 29-09
  • Famous People died Today 29-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 29-09 | September 29

    கண்டுபிடிப்பாளர்களின் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அர்கெந்தீனா)
    பன்னாட்டு காப்பி நாளாக‌ கொண்டாடப்படுகிறது.
    உலக இருதய நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 29-09 | September 29

    கிமு 522ல் முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான்.
    கிமு 480ல் தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.
    1011ல் டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர்.
    1227ல் புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரெகரி அவனை மதவிலக்கம் செய்தார்.
    1567ல் பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.
    1717ல் ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன.
    1832ல் இலங்கையில் கட்டாய வேலை ஒழிக்கப்பட்டது.
    1848ல் அங்கேரியப் படையினர் குரொவாசியர்களை பாகொஸ்த் என்ற இடத்தில் இடம்பெற்ற முதலாவது அங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.
    1850ல் இங்கிலாந்திலும் வேல்சிலும் உரோமைக் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயசு மீண்டும் அமைத்தார்.
    1864ல் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையேயான எல்லை லிஸ்பன் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டது.
    1885ல் உலகின் முதலாவது திராம் சேவை இங்கிலாந்து, பிளாக்பூல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
    1911ல் இத்தாலி உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது.
    1918ல் முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
    1923ல் கட்டளைப் பலத்தீன் நிறுவப்பட்டது.
    1940ல் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் இரண்டு அவ்ரோ விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு, இரண்டும் இணைந்து பாதுகாப்பாகத் தரையிறங்கின.
    1941ல் இரண்டாம் உலகப் போர்: உக்ரேனின் கீவ் நகரில் பாபி யார் என்ற இடத்தில் குறைந்தது 33,771 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
    1949ல் சீனப் பொதுவுடமைக் கட்சி பின்னாளைய மக்கள் சீனக் குடியரசின் பொதுத் திட்டத்தை அறிவித்தது.
    1954ல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    1971ல் ஓமான் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது.
    1972ல் சப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.
    1979ல் எக்குவடோரியல் கினியின் இராணுவத் தலைவர் பிரான்சிசுக்கோ மசியாசு மேற்கு சகாராவின் படையினரால் சுடப்பட்டார்.
    1991ல் எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
    1998ல் இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.
    2003ல் சூறாவளி ஜுவான் கனடாவின் ஆலிபாக்சு துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
    2004ல் 4179 டூட்டாட்டிசு என்ற சிறுகோள் புவியில் இருந்து நான்கு சந்திரன் தூரத்தில் புவியைத் தாண்டியது.
    2006ல் பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.
    2009ல் சமோவாவில் 8.1 அளவு நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் தாக்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
    2011ல் வாச்சாத்தி வன்முறை: தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகளும், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    2013ல் நைஜீரியாவில் வேளாண்மைக் கல்லூரியில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 29-09 | September 29

    1492ல் மைசூர் மன்னரான‌ மூன்றாம் சாமராச உடையார் பிறந்த நாள். (இறப்பு-1553)
    1547ல் எசுப்பானியக் கவிஞரான‌ மிகெல் தே செர்வாந்தேஸ் பிறந்த நாள். (இறப்பு-1616)
    1571ல் இத்தாலிய ஓவியரான‌ கரவாஜியோ பிறந்த நாள். (இறப்பு-1610)
    1725ல் ஆங்கிலேய அரசியல்வாதியும் கிழக்கிந்தியக் கம்பனி இராணுவ அதிகாரியுமான‌ ராபர்ட் கிளைவ் பிறந்த நாள். (இறப்பு-1774)
    1758ல் ஆங்கிலேயத் தளபதியான‌ ஹோரஷியோ நெல்சன் பிறந்த நாள். (இறப்பு-1805)
    1809ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான‌ வில்லியம் கிளாட்ஸ்டோன் பிறந்த நாள். (இறப்பு-1898)
    1881ல் தமிழிசை இயக்க செய்ற்பாட்டாளரான‌ இராஜா அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள். (இறப்பு-1948)
    1881ல் ஆத்திரிய-அமெரிக்க பொருளியலாளரான‌ லுட்விக் வான் மீசசு பிறந்த நாள். (இறப்பு-1973)
    1892ல் தமிழக அரசியல்வாதியும் நீதிக்கட்சித் தலைவரருமான‌ ந. சிவராஜ் பிறந்த நாள். (இறப்பு-1964)
    1901ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ என்ரிக்கோ பெர்மி பிறந்த நாள். (இறப்பு-1954)
    1904ல் சோவியத் எழுத்தாளரான‌ நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி பிறந்த நாள். (இறப்பு-1936)
    1912ல் எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான‌ சி. சு. செல்லப்பா பிறந்த நாள். (இறப்பு-1998)
    1920ல் தமிழகக் கவிஞரும் எழுத்தாளருமான‌ அரங்க. சீனிவாசன் பிறந்த நாள். (இறப்பு-1996)
    1926ல் தமிழக நாதசுவரக் கலைஞரான‌ திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1981)
    1927ல் மலையாள நாடக மற்றும் திரைக்கதை ஆசிரியரான‌ கே. டி. முகம்மது பிறந்த நாள். (இறப்பு-2008)
    1928ல் இந்தியாவின் 1-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான‌ பிரிஜேஷ் மிஸ்ரா பிறந்த நாள். (இறப்பு-2012)
    1929ல் ஜம்மு காசுமீர் அரசியல்வாதியான‌ சையது அலி கிலானி பிறந்த நாள்.
    1936ல் இத்தாலியின் 50வது பிரதமரான‌ சில்வியோ பெர்லுஸ்கோனி பிறந்த நாள்.
    1938ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும் கவிஞருமான‌ கரவை கந்தசாமி பிறந்த நாள். (இறப்பு-1994)
    1940ல் இலங்கை அரசியல்வாதியான‌ கரு ஜயசூரிய பிறந்த நாள்.
    1943ல் போலந்தின் 2வது அரசுத்தலைவரரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான‌ லேக் வலேசா பிறந்த நாள்.
    1947ல் தமிழக அரசியல்வாதியான‌ மா. சுதர்சன நாச்சியப்பன் பிறந்த நாள்.
    1951ல் சிலியின் 34வது அரசுத்தலைவரான‌ மிசெல் பாச்செலெட் பிறந்த நாள்.
    1956ல் ஆங்கிலேய தட கள விளையாட்டாளரான‌ செபாஸ்டியன் கோ பிறந்த நாள்.
    1957ல் தமிழக அரசியல்வாதியான‌ எச். ராஜா பிறந்த நாள்.
    1961ல் ஆத்திரேலியாவின் 27வது பிரதமரான‌ ஜூலியா கிலார்ட் பிறந்த நாள்.
    1970ல் கனடா நடிகரான‌ ரசல் பீட்டர்சு பிறந்த நாள்.
    1970ல் தென்னிந்திய நடிகையும் அரசியல்வாதியுமான‌ குஷ்பூ பிறந்த நாள்.
    1973ல் இலங்கை மலையகத் தமிழ்க் கவிஞரும் அரசியல்வாதியுமான‌ ம. திலகராஜா பிறந்த நாள்.
    1975ல் ஆத்திரேலியத் துடுப்பாளருமான‌ இசுட்டீவ் கிளார்க் பிறந்த நாள்.
    1986ல் இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரரான‌ நிதேந்திர சிங் ராவத் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 29-09 | September 29

    1910ல் ஈழத்துப் புலவரான‌ அ. சிவசம்புப் புலவர் இறப்பு நாள். (பிறப்பு-1830)
    1913ல் டீசல் பொறியைக் கண்டுபிடித்த பொறியியலாளரான‌ ருடோல்ப் டீசல் இறப்பு நாள். (பிறப்பு-1858)
    1961ல் தமிழக அரசியல்வாதியான‌ பி. சீனிவாசராவ் இறப்பு நாள். (பிறப்பு-1906)
    1964ல் தமிழக அரசியல்வாதியும் நீதிக்கட்சித் தலைவருமான‌ ந. சிவராஜ் இறப்பு நாள். (பிறப்பு-1892)
    1969ல் இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவரான‌ சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா இறப்பு நாள். (பிறப்பு-1884)
    1983ல் உருசிய வானியலாளரான‌ அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ் இறப்பு நாள். (பிறப்பு-1888)
    1985ல் ஆர்மீனிய-சோவியத் வானியற்பியலாளரான‌ பெஞ்சமின் மர்க்கரியான் இறப்பு நாள். (பிறப்பு-1913)
    2004ல் மலையாளக் கவிஞரான‌ பாலாமணியம்மா இறப்பு நாள். (பிறப்பு-1909)
    2014ல் அமெரிக்கத் தொழிலதிபரும் போபால் பேரழிவுக்குக் காரணமானவருமான‌ வாரன் அண்டர்சன் இறப்பு நாள். (பிறப்பு-1921)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 28
    Next articleSeptember 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 30