September 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 24

0

Today Special Historical Events In Tamil | 24-09 | September 24

September 24 Today Special | September 24 What Happened Today In History. September 24 Today Whose Birthday (born) | September-24th Important Famous Deaths In History On This Day 24/09 | Today Events In History September-24th | Today Important Incident In History | புரட்டாதி 24 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 24-09 | புரட்டாதி மாதம் 24ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 24.09 Varalatril Indru Nadanthathu Enna| September 24 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 24/09 | Famous People Born Today September 24 | Famous People died Today 24-09.

  • Today Special in Tamil 24-09
  • Today Events in Tamil 24-09
  • Famous People Born Today 24-09
  • Famous People died Today 24-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 24-09 | September 24

    மரபு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தென்னாப்பிரிக்கா)
    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கினி-பிசாவு, போர்த்துகலிடம் இருந்து 1973)
    குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (டிரினிடாட் மற்றும் டொபாகோ)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 24-09 | September 24

    787ல் நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது.
    1645ல் முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன.
    1674ல் பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
    1789ல் அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.
    1799ல் கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    1840ல் இலங்கை வங்கி தொடங்கப்பட்டது.
    1841ல் புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார்.
    1852ல் நீராவி இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது வான்கப்பல் பாரிசில் இருந்து திராப்பெசு வரை 17 மைல் தூரம் பறந்தது.
    1853ல் மெலனீசியாவில் உள்ள நியூ கலிடோனியா தீவுகளை பிரான்சு கைப்பற்றியது.
    1869ல் ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.
    1890ல் இறுதிக்காலத் தூயோரின் இயேசு கிறித்து சபை பலதுணை மணத்தைக் கைவிட்டது.
    1898ல் அமெரிக்க மிசன் யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமைத்தது.
    1906ல் வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
    1932ல் பூனா ஒப்பந்தம்: மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.
    1946ல் கதே பசிபிக் நிறுவனம் ஆங்காங்கில் ஆரம்பிக்கப்பட்டது.
    1948ல் ஒண்டா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
    1950ல் காட்டுத்தீ கனடா, மற்றும் புதிய இங்கிலாந்தின் பெரும் பகுதியை மூடியது. நீல நிலவு ஐரோப்பா வரை தெரிந்தது.
    1960ல் அணுவாற்றலில் இயங்கும் உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் “என்டர்பிரைசு” அமைக்கப்பட்டது.
    1968ல் சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.
    1972ல் இலண்டனில் இருந்து புறப்பட்ட யப்பான் ஏர்லைன்சு 472 வானூர்தி மும்பை சாண்டாகுரூசு வானூர்தி நிலையத்தில் இறங்குவதற்குப் பதிலாக சிறிய ஜூகு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கி பெரும் சேதமடைந்தது. 11 பேர் காயமடைந்தனர்.
    1973ல் கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
    1990ல் சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.
    1993ல் கம்போடியாவில் மன்னராட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நொரடோம் சீயனூக் மன்னராக முடிசூடினார்.
    1996ல் ஐக்கிய நாடுகள் அவையில் 71 நாடுகளின் பிரதிநிதிகள் முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
    2007ல் பர்மாவில் யங்கோன் நகரில் 30,000 முதல் 100,000 வரையானோர் பர்மிய இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    2008ல் தாபோ உம்பெக்கி தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
    2013ல் தெற்குப் பாக்கித்தானில் 7.7-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 327 பேர் உயிரிழந்தனர்.
    2014ல் மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.
    2015ல் சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர், 934 பேர் காயமடைந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 24-09 | September 24

    1501ல் இத்தாலியக் கணிதவியலாளரும் மருத்துவரும் சோதிடருமான‌ கார்டானோ பிறந்த நாள். (இறப்பு-1576)
    1534ல் 4-வது சீக்கிய குருவான‌ குரு ராம் தாஸ் பிறந்த நாள். (இறப்பு-1581)
    1564ல் ஆங்கிலேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான‌ வில்லியம் ஆடம்சு பிறந்த நாள். (இறப்பு-1620)
    1777ல் தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் அரசரான‌ இரண்டாம் சரபோஜி பிறந்த நாள். (இறப்பு-1832)
    1861ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ பிகாஜி காமா பிறந்த நாள். (இறப்பு-1936)
    1887ல் இரண்டாம் லின்லித்கொ பிரபுவும் இந்தியாவின் தலைமை ஆளுநரும் பிரித்தானிய அரசியல்வாதியுமான‌ விக்டர் ஹோப் பிறந்த நாள். (இறப்பு-1952)
    1896ல் அமெரிக்க எழுத்தாளரான‌ எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட் பிறந்த நாள். (இறப்பு-1940)
    1898ல் அமெரிக்க வானியலாளரான‌ சார்லட்டி மூர் சிட்டர்லி பிறந்த நாள். (இறப்பு-1990)
    1902ல் மதத்தலைவரும் அரசியல்வாதியும் ஈரானின் 1வது அரசுத்தலைவருமான‌ அயதுல்லா கொமெய்னி பிறந்த நாள். (இறப்பு-1989)
    1929ல் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் இதழாளருமான‌ ஏ. வி. பி. ஆசைத்தம்பி பிறந்த நாள். (இறப்பு-1979)
    1930ல் அமெரிக்க விண்வெளி வீரரான‌ யோன் யங் பிறந்த நாள். (இறப்பு-2018)
    1936ல் இந்தியத் தொழிலதிபரான‌ சிவந்தி ஆதித்தன் பிறந்த நாள். (இறப்பு-2013)
    1937ல் தமிழக எழுத்தாளரும் நடிகருமான‌ பாரதி மணி பிறந்த நாள். (இறப்பு-2021)
    1941ல் தமிழ்ப் பேராசிரியரும் நூலாசிரியருமான‌ தெ. ஞானசுந்தரம் பிறந்த நாள்.
    1946ல் சிலி வானியலாளரான மரியா தெரசா உரூசு பிறந்த நாள்.
    1950ல் இந்தியத் துடுப்பாளரான‌ மொகிந்தர் அமர்நாத் பிறந்த நாள்.
    1976ல் அமெரிக்க மற்போர் வீராங்கனையான‌ ஸ்டீபனி மக்மஹோன் பிறந்த நாள்.
    1985ல் கனடிய-நியூசிலாந்து எழுத்தாளரான‌ இலினோர் காட்டன் பிறந்த நாள்.
    1989ல் பிலிப்பீனிய அழகியான‌ பியா உர்ட்சுபாக் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 24-09 | September 24

    366ல் திருத்தந்தையான‌ லிபேரியஸ் இறப்பு நாள்.
    1572ல் இன்காக்களின் கடைசிப் பேரரசரான‌ டூப்பாக் அமாரு இறப்பு நாள்.
    1834ல் பிரேசிலை நிறுவியவரும் அரசருமான‌ முதலாம் பெட்ரோ இறப்பு நாள். (பிறப்பு-1798)
    1904ல் நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவரான‌ நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் இறப்பு நாள். (பிறப்பு-1860)
    1964ல் தமிழ் நாடகாசிரியரும் வழக்கறிஞரும் மேடை நடிகரும் எழுத்தாளரும் நாடக இயக்குனருமான‌ பம்மல் சம்பந்த முதலியார் இறப்பு நாள். (பிறப்பு-1873)
    2003ல் பாலத்தீனியப் போராளியும் பத்திரிகையாளருமான‌ எட்வர்டு செயித் இறப்பு நாள். (பிறப்பு-1935)
    2004ல் இந்திய அணு அறிவியலறிஞரான‌ இராஜா இராமண்ணா இறப்பு நாள். (பிறப்பு-1925)
    2006ல் தென்னிந்திய நடிகையான‌ பத்மினி இறப்பு நாள். (பிறப்பு-1932)
    2007ல் இலங்கை இந்து ஆன்மீகவாதியான‌ முருகேசு சுவாமிகள் இறப்பு நாள். (பிறப்பு-1933)
    2009ல் இதழாசிரியரும் பகுத்தறிவாளருமான‌ நாத்திகம் இராமசாமி இறப்பு நாள். (பிறப்பு-1932)
    2012ல் மலையாளத் திரைப்பட நடிகரான‌ திலகன் இறப்பு நாள். (பிறப்பு-1938)
    2020ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ டீன் ஜோன்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1961)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 23
    Next articleSeptember 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 25