Today Special Historical Events In Tamil | 20-09 | September 20
September 20 Today Special | September 20 What Happened Today In History. September 20 Today Whose Birthday (born) | September-20th Important Famous Deaths In History On This Day 20/09 | Today Events In History September-20th | Today Important Incident In History | புரட்டாதி 20 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 20-09 | புரட்டாதி மாதம் 20ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 20.09 Varalatril Indru Nadanthathu Enna| September 20 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 20/09 | Famous People Born Today September 20 | Famous People died Today 20-09.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 20-09 | September 20
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (தெற்கு ஒசேத்தியா)
குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (செருமனி)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 20-09 | September 20
1187ல் சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான்.
1378ல் கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது.
1498ல் சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.
1519ல் பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
1697ல் ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்சு, இங்கிலாந்து, எசுப்பானியா, புனித உரோமைப் பேரரசு இடச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1847ல் நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.
1854ல் கிரிமியப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் ஆல்மா நகரில் இடம்பெற்ற போரில் உருசியரைத் தோற்கடித்தன.
1857ல் கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1878ல் தி இந்து முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1893ல் அமெரிக்காவில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட பெட்ரோலினால் இயங்கும் தானுந்து சோதிக்கப்பட்டது.
1909ல் நன்னம்பிக்கை முனை, நட்டால், ஒரேஞ்சு, திரான்சுவால் ஆகிய பிரித்தானியக் குடியேற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தென்னாபிரிக்க ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
1932ல் மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1941ல் லித்துவேனியாவில் 403 யூதர்கள் (128 ஆண்கள், 176 பெண்கள், 99 குழந்தைகள்) கொல்லப்பட்டனர்.
1942ல் உக்ரைனில் நாட்சி ஜெர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: கனடாவின் போர்க்கப்பல் ஒன்று ஐசுலாந்தின் தெற்கே தாக்கி அழிக்கப்பட்டதில் 145 பேர் கொல்லப்பட்டனர்.
1945ல் மகாத்மா காந்தியும் சவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
1946ல் போரினால் 7 ஆண்டுகள் நடத்தப்படாதிருந்த கான் திரைப்பட விழா இடம்பெற்றது.
1946ல் பொது வாக்கெடுப்பு நடைபெற்று ஆறு நாட்களின் பின்னர், டென்மார்க் மன்னர் பத்தாம் கிறித்தியான் பரோயே தீவுகளின் விடுதலைப் பிரடனத்தை ரத்துச் செய்தார்.
1955ல் சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1966ல் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.
1977ல் வியட்நாம் ஐநாவில் இணைந்தது.
1979ல் பிரான்சின் ஆதரவுடன் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து முதலாம் பொக்காசா பேரரசர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1984ல் லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1990ல் சவுக்கடி படுகொலைகள்: இலங்கை, மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றில் சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டப்பட்டனர்.
1990ல் தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
1993ல் துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.
2001ல் அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை” அறிவித்தார்.
2003ல் மாலைத்தீவுகளில் கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம் வெடித்தது.
2017ல் சூறாவளி மரியா புவேர்ட்டோ ரிக்கோவைத் தாக்கியதில் 2,975 பேர் உயிரிழந்தனர்.
2018ல் தன்சானியா, விக்டோரியா ஏரியில் உக்காரா தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 161 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 20-09 | September 20
1870ல் தமிழக நூலாசிரியரும் உரையாசிரியரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் இரா. இராகவையங்கார் பிறந்த நாள். (இறப்பு-1946)
1908ல் இந்திய மார்க்சிய அரசியல்வாதியான ப. ராமமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-1987)
1920ல் இந்திய-அமெரிக்க கணிதவியலாளரும் புள்ளியியலாளருமான சி. ஆர். ராவ் பிறந்த நாள்.
1923ல் தென்னிந்திய நடிகரும் தயாரிப்பாளருமான நாகேசுவரராவ் பிறந்த நாள். (இறப்பு-2014)
1940ல் சப்பானின் 92வது பிரதமரான டாரோ ஆசோ பிறந்த நாள்.
1946ல் இந்திய நீதிபதியும் வழக்கறிஞருமான மார்க்கண்டேய கட்சு பிறந்த நாள்.
1948ல் அமெரிக்க எழுத்தாளரான ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் பிறந்த நாள்.
1949ல் இந்திய இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேசு பட் பிறந்த நாள்.
1952ல் ஒந்துராசின் அரசுத்தலைவரான மனுவேல் செலாயா பிறந்த நாள்.
1971ல் தமிழகத் திரைப்பட இயக்குனரான மிஷ்கின் பிறந்த நாள்.
1984ல் தமிழ்த் திரைப்பட வரைகலை வடிவமைப்பாளரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் பிறந்த நாள்.
1991ல் அமெரிக்க நடிகையான ஸ்பென்சர் லோக்கே பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 20-09 | September 20
1796ல் எசுப்பானிய வேதியியலாளரும் கனிமவியலாளருமான யுவான் ஒசே எலுயார் இறப்பு நாள். (பிறப்பு-1754)
1840ல் பரகுவே அரசியல்வாதியான யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா இறப்பு நாள். (பிறப்பு-1766)
1863ல் செருமானிய பண்பாட்டு ஆய்வாளரான ஜேக்கப் கிரிம் இறப்பு நாள். (பிறப்பு-1785)
1927ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் எழுத்தாளருமான பர்கதுல்லா இறப்பு நாள். (பிறப்பு-1854)
1928ல் இந்திய ஆன்மிகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான நாராயணகுரு இறப்பு நாள். (பிறப்பு-1855)
1933ல் ஆங்கிலேய பிரம்மஞானியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான அன்னி பெசண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1847)
1996ல் அங்கேரிய-போலந்து கணிதவியலாளரான பால் ஏர்டோசு இறப்பு நாள். (பிறப்பு-1913)
1999ல் தமிழ்த் திரைப்பட நடிகையான டி. ஆர். ராஜகுமாரி இறப்பு நாள். (பிறப்பு-1922)
2011ல் ஆப்கானித்தானின் 10வது அரசுத்தலைவரான புர்கானுத்தீன் ரப்பானி இறப்பு நாள். (பிறப்பு-1940)
2015ல் இந்தியத் தொழிலதிபரான ஜக்மோகன் டால்மியா இறப்பு நாள். (பிறப்பு-1940)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan