September 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 19

0

Today Special Historical Events In Tamil | 19-09 | September 19

September 19 Today Special | September 19 What Happened Today In History. September 19 Today Whose Birthday (born) | September-19th Important Famous Deaths In History On This Day 19/09 | Today Events In History September-19th | Today Important Incident In History | புரட்டாதி 19 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 19-09 | புரட்டாதி மாதம் 19ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 19.09 Varalatril Indru Nadanthathu Enna| September 19 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 19/09 | Famous People Born Today September 19 | Famous People died Today 19-09.

  • Today Special in Tamil 19-09
  • Today Events in Tamil 19-09
  • Famous People Born Today 19-09
  • Famous People died Today 19-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 19-09 | September 19

    விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (செயிண்ட் கிட்சும் நெவிசும், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1983)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 19-09 | September 19

    634ல் ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர்.
    1356ல் இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் “போய்ட்டியேர்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது.
    1658ல் யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.[1]
    1676ல் வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது.
    1777ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: சரட்டோகா சண்டைகள்: பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையினரை பெரும் சேதங்களுடன் வென்றன.
    1778ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
    1799ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பேர்கன் போரில் பிரெஞ்சு-இடச்சுப் படைகள் உருசிய, பிரித்தானியப் படைகளை வென்றன.
    1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் மிசிசிப்பியில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினரத் தோற்கடித்தனர்.
    1868ல் எசுப்பானியாவில் “புகழ் வாய்ந்த” புரட்சி ஆரம்பமானது. புரட்சியின் முடிவில் இரண்டாம் இசபெல்லா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
    1870ல் பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிசு நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் நான்கு மாதத்தின் பின் புருசியாவிடம் வீழ்ந்தது.
    1881ல் சூலை 2-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
    1893ல் உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
    1893ல் சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
    1916ல் முதலாம் உலகப் போர்: கிழக்கு ஆப்பிரிக்க நடவடிக்கையில், பெல்ஜிய கொங்கோவின் குடியேற்றப் படைகள் டபோரா நகரைப் பெரும் சண்டையின் பின் கைப்பற்றின.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: கேப்பா ஒக்சீவ்சுக்கா சமரில் போலந்து போரில் ஈடுபட்ட தனது 75% படையினரை இழந்தது.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: ஊர்ட்கென் காடு சண்டை ஆரம்பமானது.
    1944ல் பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
    1952ல் ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட சார்லி சாப்ளின் நாடு திரும்புவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.
    1957ல் ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.
    1970ல் கிரேக்க சர்வாதிகாரி ஜியார்ஜியசு பப்படபவுலசின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரேக்க மாணவர் ஒருவர் தீக்குளித்து மாண்டார்.
    1976ல் தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் அனைத்து 154 பேரும் கொல்லப்பட்டனர்.
    1978ல் சொலமன் தீவுகள் ஐநாவில் இணைந்தது.
    1983ல் செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
    1985ல் மெக்சிகோ நகரில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் உயிரிழந்தனர்.
    1989ல் நைஜரில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில் அனைத்து 171 பேரும் கொல்லப்பட்டனர்.
    1991ல் ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.
    1997ல் அல்ஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
    2006ல் தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
    2014ல் இலங்கையின் வடக்கே வேலணையில் நான்கு இடங்களில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன
    2017ல் மெக்சிக்கோவில் நடுப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370 பேர் உயிரிழந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 19-09 | September 19

    1749ல் பிரான்சிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர் பிறந்த நாள். (இறப்பு-1822)
    1759ல் ஆங்கிலேயப் பூச்சியியலாளரான‌ வில்லியம் கிர்பி பிறந்த நாள். (இறப்பு-1850)
    1886ல் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியான‌ பாசல் அலி பிறந்த நாள். (இறப்பு-1959)
    1911ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளரான‌ வில்லியம் கோல்டிங் பிறந்த நாள். (இறப்பு-1993)
    1921ல் பிரேசில் மெய்யியலாளரான‌ பாவ்லோ பிரையர் பிறந்த நாள். (இறப்பு-1997)
    1925ல் தென்னிந்திய இசை அமைப்பாளரான‌ எம். பி. ஸ்ரீனிவாசன் பிறந்த நாள். (இறப்பு-1988)
    1937ல் பரதநாட்டியக் கலைஞரான‌ சரோஜா வைத்தியநாதன் பிறந்த நாள்.
    1965ல் அமெரிக்க விண்வெளி வீராங்கனையான‌ சுனிதா வில்லியம்ஸ் பிறந்த நாள்.
    1976ல் இந்தியத் திரைப்பட நடிகையான இஷா கோப்பிகர் பிறந்த நாள்.
    1980ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ மேக்னா நாயுடு பிறந்த நாள்.
    1984ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ காவ்யா மாதவன் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 19-09 | September 19

    656ல் திருத்தந்தையான‌ முதலாம் மார்ட்டின் இறப்பு நாள்.
    1710ல் தென்மார்க்கு வானியலாளரரான‌ ஓலி ரோமர் இறப்பு நாள். (பிறப்பு-1644)
    1881ல் அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவரான‌ சேம்சு கார்ஃபீல்டு இறப்பு நாள். (பிறப்பு-1831)
    1935ல் உருசிய அறிவியலாளரான‌ கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி இறப்பு நாள். (பிறப்பு-1857)
    1936ல் இந்திய இசைக்கலைஞரான‌ விஷ்ணு நாராயண் பாத்கண்டே இறப்பு நாள். (பிறப்பு-1860)
    1980ல் தமிழிசை, நாடகக் கலைஞரான‌ கே. பி. சுந்தராம்பாள் இறப்பு நாள். (பிறப்பு-1908)
    2014ல் மேண்டலின் இசைக் கலைஞரான‌ உ. ஸ்ரீநிவாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1969)
    2019ல் ஈழத்துத் தமிழறிஞரும் பேராசிரியரும் வரலாற்றாளருமான‌ பொன். பூலோகசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1936)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 18
    Next articleSeptember 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 20