September 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 06

0

Today Special Historical Events In Tamil | 06-09 | September 06

September 06 Today Special | September 06 What Happened Today In History. September 06 Today Whose Birthday (born) | September-06th Important Famous Deaths In History On This Day 06/09 | Today Events In History September-06th | Today Important Incident In History | புரட்டாதி 06 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 06-09 | புரட்டாதி மாதம் 06ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 06.09 Varalatril Indru Nadanthathu Enna| September 06 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 06/09 | Famous People Born Today September 06 | Famous People died Today 06-09.

September 06
  • Today Special in Tamil 06-09
  • Today Events in Tamil 06-09
  • Famous People Born Today 06-09
  • Famous People died Today 06-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 06-09 | September 06

    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சுவாசிலாந்து, பிரித்தானியாவிடம் இருந்து 1968)
    இணைப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. (பல்கேரியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 06-09 | September 06

    394ல் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார்.
    1522ல் பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
    1620ல் வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.
    1642ல் இங்கிலாந்து லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது.
    1803ல் பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.
    1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் யுலிசீஸ் கிராண்ட் தலைமையில் கென்டக்கியின் பதூக்கா நகரைக் கைப்பற்றின.
    1863ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரொலைனாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.
    1873ல் இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.[1]
    1885ல் கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.
    1901ல் அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
    1930ல் அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் இப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்கா நாட்சி ஜெர்மனியுடன் போர் தொடுத்தது.
    1940ல் உருமேனியாவின் மன்னர் இரண்டாம் கரோல் பதவி விலகினார். அவரது மகன் முதலாம் மைக்கேல் மன்னராக முடி சூடினார்.
    1943ல் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 79 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் இப்பிரசு நகரம் கூட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் எசுத்தோனியாவின் தார்த்தூ நகரைக் கைப்பற்றின.
    1946ல் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
    1951ல் தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.
    1952ல் இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வான்காட்சி ஒன்றில் விமானம் வீழ்ந்ததில் 29 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
    1955ல் துருக்கியில் இசுதான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    1965ல் இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாக்கித்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.
    1966ல் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் டவுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
    1968ல் சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
    1970ல் ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
    1972ல் மியூனிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது பலத்தீன கறுப்பு செப்டம்பர் தீவிரவாதிகள் ஒன்பது இசுரேலிய விளையாட்டு வீரர்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டனர்.
    1976ல் பனிப்போர்: சோவியத் வான்படை விமானி விக்தர் பெலென்கோ தனது மிக்-25 போர் விமானத்தை சப்பான் ஆக்கோடேட் நகரில் தரையிறக்கு அமெரிக்காவுக்கு அகதிக் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை ஏற்கப்பட்டது.
    1986ல் யூத ஓய்வு நாளின் போது இசுதான்புலில் இரண்டு தீவிரவாதிகள் யூத தொழுகைக் கூடம் ஒன்றில் 22 பேரைக் கொன்றனர்.
    1990ல் யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
    1991ல் எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளின் விடுதலையை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
    1991ல் 1991 அக்டோபர் 1 முதல் உருசியாவின் லெனின்கிராது நகரின் பெயர் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் என மாற்றப்படுவதற்கு உருசிய நாடாளுமன்ரம் ஒப்புதல் அளித்தது.
    1997ல் டயானாவின் உடல் இலண்டனில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.
    2003ல் பலத்தீனப் பிரதமர் மகுமுது அப்பாசு பதவி விலகினார்.[2]
    2007ல் ஓச்சாட் நடவடிக்கை: சிரியாவின் அணுக்கரு உலையை அழிக்க இசுரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது.
    2009ல் பிலிப்பீன்சில் சம்பொவாங்கா தீபகற்பத்தில் 971 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பினர்.
    2012ல் துருக்கியில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தன்ர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 06-09 | September 06

    1766ல் ஆங்கிலேய வேதியியலாளரும் இயற்பியலாளருமான ஜான் டால்ட்டன் பிறந்த நாள். (இறப்பு-1844)
    1860ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க சமூகவியலாளரான‌ ஜேன் ஆடம்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1935)
    1889ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ சரத் சந்திர போசு பிறந்த நாள். (இறப்பு-1950)
    1898ல் யாழ்ப்பாண நகரின் 1வது முதல்வரான‌ சாம். அ. சபாபதி பிறந்த நாள். (இறப்பு-1964)
    1911ல் தமிழக அரசியல்வாதியான‌ ஓ. வி. அழகேசன் பிறந்த நாள். (இறப்பு-1992)
    1915ல் ஈழத்துச் சிறுகதை முன்னோடியும் இலங்கையருமான‌ கோன் பிறந்த நாள். (இறப்பு-1961)
    1919ல் அமெரிக்கப் பொறியியலாளரான‌ வில்சன் கிரேட்பாட்ச் பிறந்த நாள். (இறப்பு-2011)
    1920ல் அமெரிக்க உளவியலாளரும் கல்வியாளருமான‌ லாரன்சு லேசான் பிறந்த நாள்.
    1930ல் தமிழ்ப் பேராசிரியரும் சொற்பொழிவாளரும் எழுத்தாளாரும் அரசியற் செயற்பாட்டாளருமான‌ சாலை இளந்திரையன் பிறந்த நாள். (இறப்பு-1998)
    1937ல் தமிழக அரசியல்வாதியான‌ பாரூக் மரைக்காயர் பிறந்த நாள். (இறப்பு-2012)
    1937ல் இந்திய அரசியல்வாதியான‌ யஷ்வந்த் சின்கா பிறந்த நாள்.
    1942ல் தமிழக எழுத்தாளரான‌ சேலம் பா. அன்பரசு பிறந்த நாள். (இறப்பு-2009)
    1944ல் இலங்கை அரசியல்வாதியான‌ நிமல் சிரிபால டி சில்வா பிறந்த நாள்.
    1968ல் பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரரான‌ சாயிட் அன்வர் பிறந்த நாள்.
    1989ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ அனுயா பகவத் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 06-09 | September 06

    1566ல் உதுமானியப் பேரரசரான‌ முதலாம் சுலைமான் இறப்பு நாள். (பிறப்பு-1494)
    1907ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞரான‌ சல்லி புருதோம் இறப்பு நாள். (பிறப்பு-1839)
    1936ல் பிரித்தானிய தொழிலதிபரான‌ இராபர்ட் இசுடேன்சு இறப்பு நாள். (பிறப்பு-1841)
    1966ல் அமெரிக்கத் தாதியும் கல்வியாளருமான‌ மார்கரெட் சாங்கர் இறப்பு நாள். (பிறப்பு-1879)
    1972ல் வங்காள சரோது இசைக் கலைஞரான‌ அலாவுதீன் கான் இறப்பு நாள். (பிறப்பு-1862]])
    1979ல் இந்திய அரசியல்வாதியான‌ பா. கா. மூக்கைய்யாத்தேவர் இறப்பு நாள். (பிறப்பு-1923)
    1997ல் இந்திய அத்வைத வேதாந்தியான‌ ஹரிவான்ஷ் லால் பூன்ஜா இறப்பு நாள். (பிறப்பு-1910)
    1998ல் சப்பானிய இயக்குநரான‌ அகிரா குரோசாவா இறப்பு நாள். (பிறப்பு-1910)
    2006ல் மலேசியத் தொழிலதிபரும் அறிவியலாளருமான‌ பி. சி. சேகர் இறப்பு நாள். (பிறப்பு-1929)
    2007ல் இத்தாலியப் பாடகரான‌ லூசியானோ பாவ்ராட்டி இறப்பு நாள். (பிறப்பு-1935)
    2009ல் பஞ்சாப் அரசியல்வாதியான‌ அரிசரண் சிங் பிரார் இறப்பு நாள். (பிறப்பு-1919)
    2015ல் இலங்கை வயலின் இசைக் கலைஞரான‌ உ. இராதாகிருஷ்ணன் இறப்பு நாள். (பிறப்பு-1943)
    2019ல் சிம்பாப்வேயின் 2-வது அரசுத்தலைவரான‌ இராபர்ட் முகாபே இறப்பு நாள். (பிறப்பு-1924)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 05
    Next articleSeptember 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 07