Today Special Historical Events In Tamil | 05-09 | September 05
September 05 Today Special | September 05 What Happened Today In History. September 05 Today Whose Birthday (born) | September-05th Important Famous Deaths In History On This Day 05/09 | Today Events In History September-05th | Today Important Incident In History | புரட்டாதி 05 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 05-09 | புரட்டாதி மாதம் 05ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 05.09 Varalatril Indru Nadanthathu Enna| September 05 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 05/09 | Famous People Born Today September 05 | Famous People died Today 05-09.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 05-09 | September 05
பன்னாட்டு ஈகை நாளாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.(இந்தியா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 05-09 | September 05
917ல் லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார்.
1661ல் பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார்.
1666ல் இலண்டனில் பரவிய பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 8 பேர் உயிரிழந்தனர்.
1697ல் பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது.
1698ல் உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார்.
1725ல் பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னருக்கும் மரியா லெசுச்சின்சுகாவுக்கும் திருமணம் நடந்தது.
1781ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: யோர்க்டவுன் முற்றுகையில் பிரித்தானியக் கடற்படை பிரான்சியக் கடற்படையிடம் சரணடைந்தது.
1793ல் பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சிய தேசிய மாநாடு பயங்கர ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
1798ல் பிரான்சில் இராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டது.
1799ல் பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
1803ல் இலங்கையில் முதலாவது கண்டிப் போர்க் காலத்தில், அங்வெல்லையில் பிரித்தானியப் படைகளினால் கண்டி மன்னன் விக்கிரம ராஜசிங்கனின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1839ல் ஐக்கிய இராச்சியம் சீனாவின் சிங் அரசுக்கு எதிராக அபினிப் போரை ஆரம்பித்தது.
1880ல் உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1882ல் முதலாவது அமெரிக்கத் தொழிலாளர் நாள் ஊர்வலம் நியூயார்க்கில் இடம்பெற்றது.
1887ல் இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் உயிரிழந்தனர்.
1902ல் இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.[2]
1905ல் உருசிய-சப்பானியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட்டின் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்சயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
1914ல் முதலாம் உலகப் போர்: பாரிசின் வடகிழக்கே பிரான்சியப் படைகள் செருமனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.
1932ல் பிரான்சிய மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரான்சிய சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
1937ல் எசுப்பானிய உள்நாட்டுப் போர்: லேன்சு நகரம் தேசியவாதிகளின் பிடியில் வீழ்ந்தது.
1938ல் சிலியில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியை அடுத்து சரணடைந்த பாசிச தேசிய சோசலிச இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: எசுத்தோனியா முழுமையாக நாட்சி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1945ல் பனிப்போர்: சோவியத் தூதரக ஊழியர் ஈகர் கௌசென்கோ கனடாவுக்குத் தப்பியோடி, வட அமெரிக்காவில் சோவியத் உளவுகளை வெளிப்படுத்தினார். பனிப்போர் ஆரம்பத்துக்கு இது வழிவகுத்தது.
1957ல் கியூபப் புரட்சி: புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசு கியூபாவின் சியென்புவேகோசு நகரில் எழுந்த கிளர்ச்சியை அடக்க அங்கு குண்டுகளை வீசியது.
1969ல் மை லாய் படுகொலைகள்: அமெரிக்க இராணுவ அதிகாரி வில்லியம் கலி 109 வியட்நாமியப் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
1972ல் செருமனியில் மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இசுரேலிய வீரர்களின் மீது பாலத்தீனப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
1975ல் சேக்ரமெண்டோ நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.
1977ல் அமெரிக்கா வொயேஜர் 1 விண்கலத்தை ஏவியது.
1978ல் காம்ப் டேவிட் ஒப்பந்தம்: இசுரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத்துக்கும் இடையில் மேரிலாந்தில் அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.
1980ல் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1984ல் டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பியது.
1984ல் மேற்கு ஆஸ்திரேலியா மரணதண்டனையை நிறுத்திய ஆத்திரேலியாவின் கடைசி மாநிலமானது.
1986ல் மும்பையில் இருந்து சென்ற அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
1990ல் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்: மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1991ல் பழங்குடியினரைப் பாதுகாக்கும் பன்னாட்டு உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
1996ல் பிரான் சூறாவளி அமெரிக்காவில் வட கரொலைனா மாநிலத்தைத் தாக்கியதில், 27 பேர் உயிரிழந்தனர்.
2005ல் சுமாத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் உயிரிழந்தனர்.
2008ல் கரிபியன் தீவான எயிட்டியில் சூறாவளி ஹன்னாவின் தாக்கத்தில் சிக்கி 500 பேர் இறந்தனர்.
2012ல் துருக்கியில் இராணுவக் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 25 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 05-09 | September 05
1568ல் இத்தாலியக் கலைஞரும் மெய்யியலாளரும் இறையியலாளரருமான தொம்மாசோ கம்பனெல்லா பிறந்த நாள். (இறப்பு-1639)
1638ல் பிரான்சின் பதினான்காம் லூயி பிறந்த நாள். (இறப்பு-1715)
1774ல் செருமானிய ஓவியரான காஸ்பர் டேவிட் பிரடெரிக் பிறந்த நாள். (இறப்பு-1840)
1872ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1936)
1888ல் இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். (இறப்பு-1975)
1903ல் தமிழகத் தமிழறிஞரான ஔவை துரைசாமி பிறந்த நாள். (இறப்பு-1981)
1909ல் தமிழக உரை, நாடகாசிரியரான பொ. வே. சோமசுந்தரனார் பிறந்த நாள். (இறப்பு-1972)
1910ல் இந்தியத் துடுப்பாளரான பிரோஸ் பாலியா பிறந்த நாள். (இறப்பு-1981)
1915ல் தமிழகத் தமிழறிஞரான வீ. ப. கா. சுந்தரம் பிறந்த நாள். (இறப்பு-2003)
1935ல் இலங்கை மலையக எழுத்தாளரான ரூபராணி ஜோசப் பிறந்த நாள். (இறப்பு-2009)
1945ல் தமிழகக் கவிஞரும் பாடலாசிரியருமான மு. மேத்தா பிறந்த நாள்.
1946ல் தென் கொரிய வானியலாளரான சாங் கியோங்கே பிறந்த நாள்.
1948ல் தமிழக கருநாடக இசைப் பாடகரான டி. என். சேசகோபாலன் பிறந்த நாள்.
1960ல் ஆப்கானிய அரசியல்வாதியான அப்துல்லா அப்துல்லா பிறந்த நாள்.
1960ல் இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஆர். எம். நௌசாத் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 05-09 | September 05
1857ல் பிரான்சிய மெய்யியாலாளரான ஆகஸ்ட் கோம்ட் இறப்பு நாள். (பிறப்பு-1798)
1906ல் ஆத்திரிய இயற்பியலாளரும் மெய்யியலாளருமான லுட்விக் போல்ட்ஸ்மான் இறப்பு நாள். (பிறப்பு-1844)
1982ல் ஆங்கிலேய விமானியான டக்ளஸ் பேடர் இறப்பு நாள். (பிறப்பு-1910)
1986ல் இந்திய விமானப் பணிப்பெண்ணான நீரஜா பனோட் இறப்பு நாள். (பிறப்பு-1963)
1991ல் உருசிய, சோவியத் ஓவியரான அலெக்சாண்டர் புஷ்னின் இறப்பு நாள். (பிறப்பு-1921)
1995ல் இந்திய இசையமைப்பாளரும் கவிஞரும் எழுத்தாளருமான சலில் சௌதுரி இறப்பு நாள். (பிறப்பு-1923)
1997ல் அல்பேனிய-இந்திய புனிதரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரேசா இறப்பு நாள். (பிறப்பு-1910)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan