சாமை பயன்கள் – Samai Benefits in Tamil (Little Millet)சாமை Samai Payangal Samai uses in Tamil Panicum sumatrense

0

Samai benefits in Tamil, சாமை பயன்கள் Little Millet – Samai Benefits in Tamil, Samai Payangal, Samai uses in Tamil, Samai சாமை Samai Payangal, Samai Nanmaigal, (Panicum sumatrense) Nutritional Value and Health Benefits of Little Millet சாமை பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள், சாமை நன்மைகள், சாமை அரிசி தீமைகள், சாமை சிறுதானியம், Samai Arisi Upma, Samai Arisi Dosai, Samai Arisi Biryani, Samai Arisi Pongal, Samai Rice.

Samai Benefits in Tamil

சிறுதானியங்களில் சிறப்புக்குரிய தானியமாக கருதப்படுவது சாமை ஆகும். இது மற்றைய தானியங்களை விட அளவில் சிறிதாக இருப்பதால் இதை ஆங்கிலத்தில் Little millet என அழைக்கிறார்கள்.இதன் வித்துக்கள் இளம் பழுப்பு நிறமுடைய‌, 1.8 -1.9mm அளவான, மெருதுவான கோளவடிவமாக‌ காணப்படுகிறது.

இதன் வகை(Species): P. sumatrense
குடும்பம்(Family)‎: ‎Poaceae
இனம்(Genus)‎: Panicum
இராட்சியம்(Kingdom)‎: ‎Plantae

பூஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படும் சாமை இந்தியாவில் பெருமளவில் விளைவிக்கப்படுகிறது.எமது பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் உண்ட‌ உணவு முறைகள்தான்.அந்தவகையில் சாமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த தானியத்தின் மாவு மூலம் சாமை முறுக்கு, சாமை சோறு, சாமை இடியாப்பம்,சாமை புட்டு ,சாமை ரொட்டி,கேக், பிஸ்கட் செய்யலாம். இத்தானியம் உயரமாகவும், நேராகவும் 30cm-1m வரை வளரக்கூடியது.இதன் இலையானது ஒரே அளவாக ஒடுங்கிய நீளமான‌தும் ,மேற்பரப்பில் சுணை போன்ற மயிர்களும் காணப்படும்.

சாமை தானியத்தின் வரலாறு History of Little Millet

இந்த சாமைத்தானியமானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெற்கு ஆசியக் கண்டத்தில் தோற்றம் பெற்றதாகவும், அதிலும் குறிப்பாக‌ இந்தியாவில் உருவான இத்தானியம் இந்தியன் மிலட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளின் பல பிரதேசங்களில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இத்தானியம் பயிரிடப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றும் இத்தானியம் மக்களின் உணவாக இருந்ததாக பண்டைய தழிழர்களின் கல்வெட்டுகளிலும், தொல்பொருள் ஆராட்சியாளர்களினாலும் கூறப்படுகிறது. தற்போது இது பரவலாக இந்தியா,இலங்கை ,நேபாள் ,மலேசியா, மேற்கு மியன்மார் ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. சாமை அரிசி விலை எல்லோராலும் வாங்ககூடிய வகையில் எப்போதும் காணப்படும்.

பயிர்ச்செய்கை முறை Cultivation of Little Millet

1ஏக்கர் நிலத்தில் விதைப்பதற்கு 5kg சாமை வித்துக்கள் போதுமானது.

80 முதல் 110 நாட்களில் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும்.

சாமை வித்துக்கள் முளைப்பதற்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் எடுக்கும்.

விதைக்கும் முன்னர் சாமை விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி இளநீர் கரைசலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைப்பு செய்வதால், இளநீரில் உள்ள பொட்டாசியம் சத்தின் கராணமாக வறட்சியை தாங்கி வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்கும்.

சாமைப் பயிரை பெரிதாக பூச்சிகள் தாக்குவதில்லை,அதனால் விவசாயிகளுக்கு செலவு குறைவு.

மாதம் ஒரு முறை வீதம் இரண்டு முறை மட்டும் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரோடு கலந்து விடலாம்.

சாமை கதிர்கள் நன்று முற்றி காய்ந்த பின் அறுவடை செய்து, தானியங்களை பிரித்தெடுத்து சுத்தம் செய்து காய வைத்து சேமிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ தானிய விளைச்சல் கிடைக்கும்.

இத்தானியமானது வரட்சியை தாங்கி வளரக்கூடியது. இதற்கு 300 – 350mm ஆண்டு மழைவீழ்ச்சியே போதுமானது. அதிக மழைவீழ்ச்சி இருந்தாலும் நிலையான அறுவடையை கொடுக்கக்கூடியது. இதன் காய்ந்த‌ இலை மற்றும் தண்டுப்பாகங்கள் விலங்குகளுக்குத் தீவனமாகவும்,இதன் காய்ந்த வைக்கோலுடன் சீமேந்தைக் கலந்து கட்டட வேலைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.இது கடல் மட்டத்திலிருந்து 2000m க்கு மேற்பட்ட உயரத்தில் பயிரிடப்படுகிறது.

சாமை தானியம் உலகிலேயே பெருமளவில் இந்தியாவிலும் அதிலும் குறிப்பாக மத்திய இந்தியாவில் அதிகப்படியாக பயிரிடப்படுகிறது.

சாமைத் தானியத்தை பயிரிடும் நாடுகளில் இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் ‍- Names of little millet

ஹிந்தி(Hindi): குட்கி|Kutki, ஸாவன்|Shavan.
பெங்காலி(Bengali): சாம|Sama.
தமிழ்(Tamil): சாமை|Samai.
குஜராத்தி(Gujarati): கஜ்ரோ|kajro, குரி|Kuri.
தெலுங்கு(Telugu): சாம‌லு|Samalu.
மராட்டி(Marathi): சவா, ஹல்வி|Halvi, வரி|Vari.
கன்னடா(Kannada): சாமெ|Saame (ಸಾಮೆ).
மலயாளம்(Malayalam): ஸாம|Chama (ചാമ).

சாமை தானியத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் Nutritional Value of Little Millet

புரதச்சத்து – Protein
கொழுப்புச்சத்து – Cholesterol
தாது உப்புகள் – Mineral Salts (மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம்)
நார்ச்சத்து – Fiber
மாவுச்சத்து – Carbohydrates
கால்சியம் – Calcium
பொஸ்பரஸ் – Phosphorus
இரும்புச்சத்து – Iron Supplement

சாமைத் தானியத்தின் ஆரோக்கியப் பயன்பாடுகள்Health Benefits of little Millet

(Samai Benefits in Tamil)

சர்க்கரை நோயாளிகளுக்கு இச்சாமை உணவு மிகவும் பொருத்தமானது ஏனென்றால் இது மெதுவாக உணவு செரிமானம் அடையச்செய்து, இன்சுலின் சுரத்தலையும் தூண்டி இரத்தத்தில் சக்கரையின் அளவை சரியான அளவில் பேணுவதற்கு உதவுகிறது.

இதில் உயர்ந்த அளவில் உள்ள இயற்கையான சுண்ணாம்புச்சத்தானது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்மந்தமான பிரச்சினைகளுக்கும், எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகள் வலிமைபெறவும் உதவுகிறது

ஆண்களின் விந்து: ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது மற்றும் பொண்களின் இனப்பெருக்க உறுப்புகள் பலம் பெற உதவுவதோடு,மார்பகப் புற்று நோயிலிருந்தும் காக்கும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி,தடிமன்,ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொந்தரவுகளை சரி செய்ய உதவும்.

உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால்,இதயநோய்களிலிருந்து பாதுகாத்து, மாரடைப்பு வராமல் காக்கும்.

இது சிறுநீரைப் பெருக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் ஒற்றைத் தலைவலியை நீக்கும்.

செரிமானம்: சாமை உணவு இலகுவில் செரிமானமடையக்கூடியது, மற்றும் இதில் அதிக நார்ச்சத்துகள் உள்ளதால் மலச்சிக்கலை குறைத்து, உடலில் உள்ள கழிவுகளை சரிவர வெளியேற்ற உதவும்.

இதில் இயற்கையாகவே உயர்வான இரும்புச்சத்து இருப்பதால் தசைப்பிடிப்பு மற்றும் இளம் பெண்கள் முக்கிய உணவாக சாமைஅரிசியை எடுத்துக் கொண்டு வந்தால் இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது.

இதில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும்.

இதில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதிகம் என்பதால் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல உடல் வலிமையை தரும்.

சாமை அரிசியில் செய்யக்கூடிய உணவு வகைகள் Food Recipes of Little Millet

சாமை அரிசி உப்புமா Samai Arisi Upma

Samai Arisi Upma

•சாமை அரிசி – ஒரு கப் (வேகவைத்தது)
•எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ் பூன்
•கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
•உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
•வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
•பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
•சிகப்பு குடைமிளகாய் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
•உப்பு – தேவைகேற்ப
•கறிவேப்பில்லை – சிறிதளவு

உணவு வகைகள் தேவையான பொருட்கள் செய்யும் முறை

•ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

•கடாயில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

• பின்னர் வெங்காயம்,பச்சை மிளகாய்,சிகப்பு குடைமிளகாய்,உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கிய
பிறகு, வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.

சாமை அரிசி தோசை Samai Arisi Dosai

Samai Arisi Dosai

•இட்லி அரிசி 2 டம்ளர்
•சாமை அரிசி 2 டம்ளர்
•உளுத்தம்பருப்பு 3/4 டம்ளர்
•வெந்தயம் 2 ஸ்பூன்
•உப்பு தேவையான அளவு

•இட்லி அரிசியும் சாமை அரிசியும் வெந்தயம் சேர்த்து ஒன்றாக 4மணி நேரம் ஊறவைக்கவும்.

•உளுத்தம் பருப்பு தனியாக ஊறவைக்கவும்.

•தோசைக்கு அரைப்பது போல் கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு போட்டு தோசைமாவு மாதிரி கரைத்து வைக்கவும்.

•6மணிநேரம் மாவு புளித்தால் போதும்.

•ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது தோசையாக ஊற்றிக்கொள்ளவும்.

•தொட்டுக் கொள்ள எல்லாச் சட்னியும் நன்றாக இருக்கும்.

சாமை அரிசி பிரியாணி Samai Arisi Biryani

Samai Arisi Biryani

•சாமை அரிசி – ஒரு கப்
•பூண்டு – 2 பல்
•இஞ்சி – ஒரு சிறிய துண்டு
•பட்டை – 2, ஏலக்காய்
•பிரியாணி இலை – தலா 1
•லவங்கம் – 3
•கலந்த காய்கறி துண்டுகள் (கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ்) – 2 கப்,
•பச்சைப் பட்டாணி – கால் கப்
•மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்
•மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
•எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
•நெய் – ஒரு டீஸ்பூன்
•கொத்தமல்லித் தழை
•புதினா – சிறிதளவு
•முந்திரி – 5
•பெரிய வெங்காயம் – 1
•தண்ணீர் – 3 கப்
•தக்காளி – 1
•தயிர் – சிறிதளவு
•எலுமிச்சைப் பழம் – பாதி
•உப்பு – தேவையான அளவு.

•சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும்.

•கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

•வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி, தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் மற்றும் காய்கறிகள், பச்சைப்
பட்டாணியைச் சேர்த்துக்கிளறவும்.

•மூன்று கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

•இதனுடன் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

•நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து, நெய் விட்டு, முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.

•எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

சாமை அரிசி பொங்கல் Samai Arisi Pongal

Samai Arisi Pongal

•சாமை – ஒரு கப்
•பாசிப்பருப்பு – கால் கப்
•தண்ணீர் – 3 கப்
•உப்பு – சுவைக்கேற்ப‌
•நெய் – 3 டீஸ்பூன்
•மிளகு, சீரகம்
•நறுக்கிய இஞ்சி – தலா அரை டீஸ்பூன்
•பச்சை மிளகாய் – 1
•முந்திரி – 10
•பால் – ஒரு கப்
•பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன்.

•சாமையையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக, வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

•குக்கரில் பால், தண்ணீர் விட்டு, வறுத்த சாமை, பருப்பு சேர்த்து, உப்புப் போட்டு வேகவைக்கவும்.

•நெய்யில் சீரகம், பெருங்காயம் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, முந்திரியை வறுத்து, பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Millet Benefits சிறுதானிய பயன்கள்

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடாம் அன்ட் ஜெர்ரி இயக்குனர் காலமானார். Tom and Jerry
Next articleஅப்பாவான ஜிவி பிரகாஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here