அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்
மன்னு புகழ் நாளிதுவே!
நம்மேல் கொடுங்கோல் செலுத்துவோர்
நாட்டினார் உதிரக் கொடி தனை!
கேட்டீர்களா! கிராமங்களில்
வீரிடும் அரக்கப் படைகள்
அணுகி நம் மடிகளிலேயே
நம் மக்கள் பெண்டிரைக் கொல்லத் துணிவார்
போர்க் கோலம் பூணுவீர்! வகுப்பீர் அணிகளை!
செல்வோம் செல்வோம்!
நாம் போம் பாதையில்
பாய்ச்சுவோம் அவரிரத்தத்தை!
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: