October 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil October 16

0

Today Special Historical Events In Tamil | 16-09 | October 16

October 16 Today Special | October 16 What Happened Today In History. October 16 Today Whose Birthday (born) | October-16th Important Famous Deaths In History On This Day 16/10 | Today Events In History October 16th | Today Important Incident In History | ஐப்பசி 16 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 16-10 | ஐப்பசி மாதம் 16ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 16.10 Varalatril Indru Nadanthathu Enna| October 16 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 16/10 | Famous People Born Today 16.10 | Famous People died Today 16-10.

Today Special in Tamil 16-10
Today Events in Tamil 16-10
Famous People Born Today 16-10
Famous People died Today 16-10

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 16-10 | October 16

ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சிலி)
மயக்கவியல் நாளாக‌ கொண்டாடப்படுகிறது.
உலக உணவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 16-10 | October 16

690ல் வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார்.
1384ல் யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார்.
1590ல் வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார்.
1736ல் வால்வெள்ளி பூமியைத் தாக்குவதில் தோல்வி கண்டது என வில்லியம் உவிசுட்டன் என்ற கணிதவியலாளர் எதிர்வு கூறினார்.
1780ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய இங்கிலாந்தில் அமெரிக்கப் பழங்குடிகள் மீதான கடைசி பிரித்தானியரின் கடைசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
1780ல் 1780 இன் மிகப்பெரும் சூறாவளி ஆறாவது நாளில் முடிவுக்கு வந்தது, சிறிய அந்திலீசில் 20,000 முதல் 24,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1793ல் பிரெஞ்சுப் புரட்சியின் உச்சக் கட்டத்தில் பதினாறாம் லூயி மன்னரின் மனைவி மரீ அன்டோனெட் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
1793ல் வாட்டிக்னீசு போரில் பிரான்சு வெற்றி பெற்றது.
1799ல் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
1813ல் ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.
1834ல் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.
1846ல் வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் ஈதர் மயக்க மருந்தை முதற்தடவையாக மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பரிசோதித்தார்.
1859ல் கண்டி திருமணச் சட்டத்தில் பலகணவர் மணம் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.
1869ல் இங்கிலாந்தில் பெகளுக்கான முதலாவது விடுதியுடன் கூடிய கல்லூரி கேம்பிரிட்ச் கிர்ட்டன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1905ல் உருசிய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
1905ல் பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.
1916ல் மார்கரெட் சாங்கர் அமெரிக்காவின் முதலாவது குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனையை நியூயார்க் புரூக்ளினில் ஆரம்பித்தார்.
1919ல் இட்லர் முதல்தடவையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
1923ல் வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1934ல் குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.
1939ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான செருமனிய வான்படையின் முதலாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1942ல் பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
1946ல் நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: போர்க் குற்றம் சாட்டப்பட்ட நாட்சி தலைவர்களின் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
1949ல் கிரேக்கக் கம்யூனிசத் தலைவர் நிக்கலாசு சக்காரியாடிசு தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1951ல் பாக்கித்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் இராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடி தொடங்கியது.
1964ல் சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் பிரதமராகவும் பதவியேற்றனர்.
1964ல் சீனா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
1968ல் யசுனாரி கவபட்டா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது சப்பானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1973ல் என்றி கிசிஞ்சர், வியட்நாம் கயூனிஸ்டுக் கட்சித் தலைவர் லே டூக் தோ ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1975ல் ஆத்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐவர் போர்த்துக்கீசத் திமோரில் இந்தோனேசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1975ல் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற 2-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டாள்.
1978ல் கரோல் வொச்தீலா இரண்டாம் அருள் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984ல் தென்னாபிரிக்காவின் டெசுமான்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
1986ல் அனைத்து 14 எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகளிலும் ஏறிய முதல் மனிதராக ரைன்ஹோல்ட் மெஸ்னெர் சாதனை புரிந்தார்.
1987ல் தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில் 23 பேர் உயிரிழந்தனர்.
1993ல் இங்கிலாந்தில் நாட்சிகளுக்கெதிரான கலவரம் வெடித்தது.
1996ல் குவாத்தமாலாவில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் உயிரிழந்தனர்.
1998ல் சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்தோ பினோசெட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
2002ல் பண்டைய அலெக்சாந்திரியா நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது.
2003ல் தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.
2006ல் ஈழப்போர்: இலங்கை, அபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2006ல் இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2013ல் லாவோசில் லாவோ ஏர்லைன்சு விமானம் ஒன்று தரையில் மோதியதில் 49 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 16-10 | October 16

1700ல் கருநாடக இசைக் கலைஞரான‌ ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பிறந்த நாள். (இறப்பு-1765)
1758ல் அமெரிக்க அகராதியியலாளரான‌ நோவா வெப்ஸ்டர் பிறந்த நாள். (இறப்பு-1843)
1854ல் ஐரிய எழுத்தாளரான‌ ஆஸ்கார் வைல்டு பிறந்த நாள். (இறப்பு-1900)
1873ல் உருசிய வேதியியலாளரான‌ இலெவ் சுகாயெவ் பிறந்த நாள். (இறப்பு-1922)
1878ல் மலையாள எழுத்தாளரான‌ வள்ளத்தோள் நாராயண மேனன் பிறந்த நாள். (இறப்பு-1958)
1881ல் தமிழகத் தமிழறிஞரான‌ மு. கதிரேசச் செட்டியார் பிறந்த நாள். (இறப்பு-1953)
1886ல் இசுரேலின் 1வது பிரதமரான‌ டேவிட் பென்-குரியன் பிறந்த நாள். (இறப்பு-1973)
1890ல் இத்தாலியப் புனிதரான‌ மரியா கொரெற்றி பிறந்த நாள். (இறப்பு-1902)
1916ல் மலையாளத் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான‌ திக்குறிசி சுகுமாரன் பிறந்த நாள். (இறப்பு-1997)
1918ல் அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளரான‌ லூயி அல்தூசர் பிறந்த நாள். (இறப்பு-1990)
1923ல் தனித்தமிழ் எழுத்தாளரும் உரையாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் இதழாளரும் சொற்பொழிவாளருமான‌ புலியூர்க் கேசிகன் பிறந்த நாள். (இறப்பு-1992)
1923ல் இலங்கை அறிவியலாளரும் வேதியியலாளருமான‌ சிறில் பொன்னம்பெரும பிறந்த நாள். (இறப்பு-1994)
1925ல் அமெரிக்க-ஆங்கிலேய நடிகையான‌ ஏஞ்சலா லேன்சுபரி பிறந்த நாள்.
1927ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளரான‌ கூன்டர் கிராசு பிறந்த நாள். (இறப்பு-2015)
1946ல் ஒரிய இந்திய அரசியல்வாதியான‌ நவீன் பட்நாய்க் பிறந்த நாள்.
1948ல் இந்திய நடிகையும் இயக்குநரும் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான‌ ஹேம மாலினி பிறந்த நாள்.
1949ல் தென்னிந்திய நடிகரும் நாடகாசிரியருமான‌ கிரேசி மோகன் பிறந்த நாள். (இறப்பு-2019)
1963ல் கடற்புலிகளின் தலைவரான‌ சூசை பிறந்த நாள். (இறப்பு-2009)
1975ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாளரான‌ ஜாக் கலிஸ் பிறந்த நாள்.
1977ல் அமெரிக்கப் பாடகரும் இசைக் கலைஞருமான‌ ஜான் மேயர் பிறந்த நாள்.
1982ல் இந்திய நடிகரும் பாடகருமான‌ பிரித்விராஜ் சுகுமாரன் பிறந்த நாள்.
1990ல் இந்திய நடிகர், பாடகர் அனிருத் ரவிச்சந்திரன் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 16-10 | October 16

1799ல் பாஞ்சாலங்குறிச்சி மன்னனும் விடுதலைப் போராட்ட வீரருமான கட்டபொம்மன் இறப்பு நாள். (பிறப்பு-1760)
1946ல் எசுத்தோனிய அரசியல்வாதியும் நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தினால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவருமான‌ ஆல்பிரட் ரோசன்பெர்க் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1951ல் பாக்கித்தானின் 1வது பிரதமரான‌ லியாகத் அலி கான் இறப்பு நாள். (பிறப்பு-1895)
1956ல் பிரான்சியத் தொழிலதிபரான‌ ஜூல்ஸ் ரிமெட் இறப்பு நாள். (பிறப்பு-1873)
1974ல் கருநாடக இசைப் பாடகரான‌ செம்பை வைத்தியநாத பாகவதர் இறப்பு நாள். (பிறப்பு-1895)
1981ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ ஆர். முத்துராமன் இறப்பு நாள். (பிறப்பு-1929)
1983ல் இந்திய-அமெரிக்க கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ ஹரிஷ்-சந்திரா இறப்பு நாள். (பிறப்பு-1923)
1998ல் அமெரிக்கக் கணினியியலாளரான‌ ஜான் பாஸ்டல் இறப்பு நாள். (பிறப்பு-1943)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 20.09.2022 Today Rasi Palan 20-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleOctober 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 17