Today Special Historical Events In Tamil | 12-10 | October 12
October 12 Today Special | October 12 What Happened Today In History. October 12 Today Whose Birthday (born) | October -12th Important Famous Deaths In History On This Day 12/10 | Today Events In History October-12th| Today Important Incident In History | ஐப்பசி 12 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 12-10 | ஐப்பசி மாதம் 12ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 12.10 Varalatril Indru Nadanthathu Enna| October 12 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 12/10 | Famous People Born Today October 12 | Famous People died Today 12-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 12-10 | October 12
கொலம்பசு நாளாக கொண்டாடப்படுகிறது. (எல் சால்வடோர், உருகுவை, வெனிசுவேலா, பெலீசு, கோஸ்ட்டா ரிக்கா)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (எக்குவடோரியல் கினி, எசுப்பானியாவிடம் இருந்து 1968)
குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (பிரேசில்)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 12-10 | October 12
கிமு 539ல் பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது.
1492ல் கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார்.
1582ல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1654ல் நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1748ல் பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன.
1785ல் ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.
1792ல் கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது.
1798ல் பிளம்மிய, லக்சம்பர்க் விவசாயிகள் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1798ல் இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1822ல் முதலாம் பேதுரு பிரேசில் பேரரசராக முடிசூடினார்.
1823ல் சார்லசு மேகிண்டோச் தான் தயாரித்த முதலாவது மழையங்கியை விற்பனைக்கு விட்டார்.
1871ல் பிரித்தானிய இந்தியா குற்றப் பரம்பரைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 160 இற்கும் மேற்பட்ட உள்ளூர் குழுக்கள் ‘குற்ற சமூகங்களாக’ அறிவிக்கப்பட்டன. 1949 இல் இச்சட்டம் விலக்கப்பட்டது.
1901ல் அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் “செயலாட்சி மாளிகை” என்ற பெயரை வெள்ளை மாளிகை என அதிகாரபூர்வமாக மாற்றினார்.
1915ல் முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் செருமனியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1918ல் மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: ஏதென்சு நகரம் அச்சு நாடுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது.
1960ல் சப்பான் சோசலிசக் கட்சித் தலைவர் இனசீரோ அசனூமா குத்திப் படுகொலை செய்யப்பட்டமை நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.
1963ல் சோவியத் ஒன்றியத்தில் 23 ஆண்டுகளாக சிறை வக்கப்பட்டிருந்த இயேசு சபை மதப்பரப்புனர் வால்டர் சிசெக் விடுதலை செய்யப்பட்டார்.
1964ல் சோவியத் ஒன்றியம் வசுகோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது விண்கலமும், விண் உடைகள் இல்லாமல் விண்ணுக்குச் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்..
1968ல் எக்குவட்டோரியல் கினி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1970ல் வியட்நாம் போர்: கிறித்துமசுக்கு முன்னதாக 40,000 அமெரிக்கப் படையினர் வெளியேறவிருப்பதாக அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.
1971ல் பாரசீகப் பேரரசின் 2,500 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
1976ல் மும்பையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன்சு விமானம் 171 மும்பை வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கும்போது வெடித்ததில், திரைப்பட நடிகை ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.
1984ல் ஐரியக் குடியரசுப் படையினரின் குண்டுவெடிப்பில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டனர், 31 பேர் காயமடைந்தனர்.
1986ல் மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
1986ல் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்
1992ல் எகிப்தில் கெய்ரோ நகரில் 5.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 510 பேர் உயிரிழந்தனர்.
1993ல் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
1994ல் மெகல்லன் விண்ணுளவி வெள்ளியின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை நாசா இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
1999ல் முன்னாள் சோவியத் தன்னாட்சிக் குடியரசு அப்காசியா சியார்சியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1999ல் பாகித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பெர்வேசு முசாரப் நவாசு செரீபை ஆட்சியில் இருந்து அகற்றி அரசுத்தலைவரானார்.
1999ல் உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.
2000ல் ஏடனில் அமெரிக்காவின் கோல் கப்பல் இரண்டு தற்கொலைக் குண்டுகளால் சேதமடைந்தது. 17 மாலுமிகள் கொல்லப்பட்டனர், 39 பேர் உயிரிழந்தனர்.
2001ல் அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
2002ல் பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
2003ல் பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.
2005ல் சீனாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்பு விண்கலம் சென்சூ 6 இரண்டு வீரர்களுடன் ஏவப்பட்டது.
2017ல் யுனெசுக்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது. தொடர்ந்து இசுரேலும் வெளியேறியது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 12-10 | October 12
1537ல் இங்கிலாந்து மன்னரான ஆறாம் எட்வர்டு பிறந்த நாள். (இறப்பு-1553)
1798ல் பிரேசில் பேரரசரான முதலாம் பேதுரு பிறந்த நாள். (இறப்பு-1834)
1811ல் பிரித்தானிய விலங்கியளாளரரும் தாவரவியளாளரும் மருத்துவருமான தாமஸ் சி. ஜெர்டன் பிறந்த நாள். (இறப்பு-1872)
1864ல் வங்காளக் கவிஞரும் சமூகப் பணியாளருமான காமினி ராய் பிறந்த நாள். (இறப்பு-1933)
1891ல் செருமானிய-யூத மெய்யியலாளரான இதித் ஸ்டைன் பிறந்த நாள். (இறப்பு-1942)
1891ல் தமிழறிஞரும் பதிப்பாளருமான எஸ். வையாபுரிப்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1956)
1896ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலியக் கவிஞரான எயுஜேனியோ மொண்டாலே பிறந்த நாள். (இறப்பு-1981)
1906ல் இந்திய புதின எழுத்தாளரான முல்க் ராஜ் ஆனந்த் பிறந்த நாள். (இறப்பு-2004)
1911ல் இந்தியத் துடுப்பாளரான விஜய் மேர்ச்சன்ட் பிறந்த நாள். (இறப்பு-1987)
1912ல் தமிழகத் தமிழறிஞரும் கல்வியாளருமான நெ. து. சுந்தரவடிவேலு பிறந்த நாள். (இறப்பு-1993)
1913ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான தம்பையா ஏகாம்பரம் பிறந்த நாள். (இறப்பு-1961)
1918ல் தமிழகத் தொழிலதிபரான மு. அ. சிதம்பரம் பிறந்த நாள். (இறப்பு-2000)
1918ல் இந்தியத் தொழிலதிபரான கே. கே. பிர்லா பிறந்த நாள். (இறப்பு-2008)
1921ல் களிமண்ணால் செய்யப்படும் இயங்குபடங்களின் முன்னோடியான ஆர்ட் குலொக்கி பிறந்த நாள். (இறப்பு-2010)
1935ல் இந்திய அரசியல்வாதியான சிவ்ராஜ் பாட்டீல் பிறந்த நாள்.
1935ல் இத்தாலியப் பாடகரும் நடிகருமான லூசியானோ பாவ்ராட்டி பிறந்த நாள். (இறப்பு-2007)
1942ல் இலங்கையின் மலையக ஓவியரும் சிற்பியும் எழுத்தாளருமான எஸ். இராமச்சந்திரன் பிறந்த நாள். (இறப்பு-2009)
1950ல் தாய்வான் அரசியல்வாதியான சென் சூயி-பியான் பிறந்த நாள்.
1952ல் மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயரான யோசப் பொன்னையா பிறந்த நாள்.
1968ல் ஆத்திரேலிய நடிகரும் பாடகருமான ஹியூ ஜேக்மன் பிறந்த நாள்.
1981ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான சினேகா பிறந்த நாள்.
1991ல் இந்தியத் திரைப்பட நடிகையான அக்சரா ஹாசன் பிறந்த நாள்.
1992ல் அமெரிக்க நடிகரான ஜோஷ் ஹட்சர்சன் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 12-10 | October 12
1845ல் ஆங்கிலேயத் தாதியும் சமூக சேவகருமான எலிசபெத் ஃபிரை இறப்பு நாள். (பிறப்பு-1780)
1870ல் அமெரிக்க இராணுவத் தளபதியும் பொறியியலாளருமான ராபர்ட் ஈ. லீ இறப்பு நாள். (பிறப்பு-1807)
1914ல் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான மார்கரெட் ஈ. நைட் இறப்பு நாள். (பிறப்பு-1838)
1946ல் தமிழகக் கால்நடை மருத்துவரும் நூலாசிரியரும் கவிஞருமான வெ. ப. சுப்பிரமணிய முதலியார் இறப்பு நாள். (பிறப்பு-1857)
1967ல் இந்திய அரசியல்வாதியான ராம் மனோகர் லோகியாஇறப்பு நாள். (பிறப்பு-1910)
1976ல் மலையாளத் திரைப்பட நடிகையான ராணி சந்திரா இறப்பு நாள். (பிறப்பு-1949)
1979ல் மலேசிய அரசியல்வாதியான வி. மாணிக்கவாசகம் இறப்பு நாள். (பிறப்பு-1926)
1993ல் தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான வ. சுப்பையா இறப்பு நாள். (பிறப்பு-1911)
1997ல் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான ஜான் டென்வர் இறப்பு நாள். (பிறப்பு-1943)
2011ல் சி நிரலாகக் மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கரான தென்னிசு இரிட்சி இறப்பு நாள். (பிறப்பு-1941)
2013ல் அமெரிக்க வானியலாளரான ஜார்ஜ் எர்பிக் இறப்பு நாள். (பிறப்பு-1920)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan