Today Special Historical Events In Tamil | 08-10 | October 08
October 08 Today Special | October 08 What Happened Today In History. October 08 Today Whose Birthday (born) | October -08th Important Famous Deaths In History On This Day 08/10 | Today Events In History October-08th | Today Important Incident In History | ஐப்பசி 08 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 08-10 | ஐப்பசி மாதம் 08ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 08.10 Varalatril Indru Nadanthathu Enna| October 08 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 08/10 | Famous People Born Today October 08 | Famous People died Today 08-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 08-10 | October 08
உலக விண்வெளி வார நாளாக கொண்டாடப்படுகிறது. (அக்டோபர் 4–10)
இந்திய வான்படை நாளாக கொண்டாடப்படுகிறது.
மர நாளாக கொண்டாடப்படுகிறது. (நமீபியா)
குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (ஈரான்)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (குரோவாசியா, யுகோசுலாவியாவிடம் இருந்து, 1991)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 08-10 | October 08
314ல் உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான்.
1573ல் எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது.
1582ல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1813ல் பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1821ல் பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது.
1836ல் இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு வரி விதிப்பு அமுலாக்கப்பட்டது.
1856ல் சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது.
1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தின.
1871ல் சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1879ல் பசிபிக் போர்: சிலியின் கடற்படை அங்காமொசு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பெருக் கடற்படையைத் தோற்கடித்தது.
1895ல் கொரியாவின் கடைசிப் பேரரசி மெயோங்சியோங் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சப்பானியப் படைகளால் கியாங்பொக் அரண்மனையில் வைத்து எரிக்கப்பட்டது.
1912ல் முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.
1918ல் இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.
1932ல் இந்திய வான்படை நிறுவப்பட்டது.
1939ல் இரண்டாம் உலகப் போர்: செருமனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: ரசுத்தோவ் சண்டயின் ஆரம்பத்தில் செருமனியப் படைகள் அசோவ் கடலை அடைந்து மரியுபோல் நகரைக் கைப்பற்றின.
1944ல் இரண்டாம் உலகப் போர்: குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் நகருக்க்கருகில் இடம்பெற்றது.
1952ல் லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்..
1962ல் அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1967ல் கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர்.
1970ல் வியட்நாம் போர்: பாரிசில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், பொதுவுடைமைவாதிகள் அமெரிக்கத் தலைவர் நிக்சனின் அமைதி முன்மொழிவை நிராகரித்தனர்.
1973ல் சூயசுக் கால்வாயின் இசுரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இசுரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.
1982ல் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.
1987ல் விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1990ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: எருசலேமில் இசுரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலத்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1991ல் குரோவாசியா, சுலோவீனியா மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2001ல் இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.
2005ல் காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாக்கித்தான், இந்தியா, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
2006ல் காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.
2016ல் மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 900 ஐத் தாண்டியது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 08-10 | October 08
1552ல் இத்தாலிய இயேசுசபை மதப்பரப்புனரான மத்தேயோ ரீச்சி பிறந்த நாள். (இறப்பு-1610)
1872ல் அமெரிக்க வேதியியலாளரும் பொறியியலாளருமான மேரி பென்னிங்டன் பிறந்த நாள். (இறப்பு-1952)
1873ல் தென்மார்க்கு வேதியியலாளருமான வானியலாளருமான எய்னார் எர்ட்சுபிரங்கு பிறந்த நாள். (இறப்பு-1967)
1908ல் இலங்கை அரசியல்வாதியான என். ஆர். இராசவரோதயம் பிறந்த நாள். (இறப்பு-1963)
1908ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியான கரோலின் அந்தோனிப்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-2009)
1920ல் அமெரிக்க ஊடகவியலாளரும் படப்பிடிப்பாளருமான பிராங்க் எர்பெர்ட் பிறந்த நாள். (இறப்பு-1986)
1922ல் இந்திய அறிவியலாளரான கோ. நா. இராமச்சந்திரன் பிறந்த நாள். (இறப்பு-2001)
1924ல் இந்தியக் கவிஞரான திருநல்லூர் கருணாகரன் பிறந்த நாள். (இறப்பு-2006)
1926ல் இந்தித் திரைப்பட நடிகரான ராஜ்குமார் பிறந்த நாள். (இறப்பு-1996)
1932ல் அமெரிக்கக் கணிதவியலாளரான கென்னத் அப்பெல் பிறந்த நாள்.
1935ல் இந்திய தடகள விளையாட்டு வீரரான மில்கா சிங் பிறந்த நாள்.
1944ல் இந்தி திரைப்பட நடிகையான ராஜ்ஸ்ரீ பிறந்த நாள்.
1949ல் அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான சிகர்னி வேவர் பிறந்த நாள்.
1950ல் தமிழக எழுத்தாளரான சு. கலிவரதன் பிறந்த நாள்.
1969ல் கனடிய-அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான டைலன் நீல் பிறந்த நாள்.
1971ல் தமிழக எழுத்தாளருமான பா. ராகவன் பிறந்த நாள்.
1977ல் இந்திய-அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகையான லட்சுமி மஞ்சு பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 08-10 | October 08
1638ல் மைசூர் மன்னரான இரண்டாம் இராச உடையார் இறப்பு நாள். (பிறப்பு-1612)
1936ல் இந்திய உருது எழுத்தாளரான பிரேம்சந்த் இறப்பு நாள். (பிறப்பு-1880)
1958ல் தமிழகத் தவில் கலைஞரான திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1879)
1959ல் கவிஞரும் பாடலாசிரியருமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1930)
1967ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான கிளமெண்ட் அட்லீ இறப்பு நாள். (பிறப்பு-1883)
1974ல் தென்னிந்திய இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான பி. ஆர். பந்துலு இறப்பு நாள். (பிறப்பு-1911)
1979ல் இந்திய அரசியல்வாதியான ஜெயபிரகாஷ் நாராயண் இறப்பு நாள். (பிறப்பு-1902)
2003ல் ஈழத்துக் கவிஞரான வீரமணி ஐயர் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2010ல் அமெரிக்க வானியலாளரான ஜான் பீட்டர் அக்ரா இறப்பு நாள். (பிறப்பு-1948)
2010ல் மலேசியக் கவிஞரான ரெ. சண்முகம் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2011ல் இலங்கை அரசியல்வாதியான பாரத லக்சுமன் பிரேமச்சந்திர இறப்பு நாள். (பிறப்பு-1956)
2020ல் இந்திய அரசியல்வாதியான அமைச்சர் இராம் விலாசு பாசுவான் இறப்பு நாள். (பிறப்பு-1946)
2020ல் தமிழக எழுத்தாளரும் இதழாளரும் நூலாசிரியருமான அ. மா. சாமி இறப்பு நாள். (பிறப்பு-1935)
2021ல் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் நடிகருமான பிறைசூடன் இறப்பு நாள். (பிறப்பு-1956)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan