Today Special Historical Events In Tamil | 02-10 | October 02
October 02 Today Special | October 02 What Happened Today In History. October 02 Today Whose Birthday (born) | October -02nd Important Famous Deaths In History On This Day 02/10 | Today Events In History October-02nd | Today Important Incident In History | ஐப்பசி 02 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 02-10 | ஐப்பசி மாதம் 02ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 02.10 Varalatril Indru Nadanthathu Enna| October 02 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 02/10 | Famous People Born Today October 02 | Famous People died Today 02-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 02-10 | October 02
காந்தி ஜெயந்தி நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
அனைத்துலக வன்முறையற்ற நாளாக கொண்டாடப்படுகிறது.
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (கினி, பிரான்சிடம் இருந்து, 1958)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 02-10 | October 02
829ல் தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1187ல் 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான்.
1263ல் நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1470ல் ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினார்.
1535ல் ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார்.
1552ல் உருசியப் படைகள் கசானை ஊடுருவின.
1608ல் டச்சு வில்லைத் தயாரிப்பாளர் ஆன்சு லிப்பர்சி முதலாவது தொலைநோக்கியை டச்சு நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தினார்.
1780ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: உளவாளி என்ற சந்தேகத்தில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜான் அந்திரே அமெரிக்க விடுதலைப் படையால் தூக்கிலிடப்பட்டார்.
1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படையினர் வர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
1865ல் இலங்கையின் முதலாவது தொடருந்து போக்குவரத்து சேவை கொழும்புக்கும் அம்பேபுசைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது.
1903ல் யாழ்ப்பாணம் ஸ்டீம் நெவிகேசன் கம்பனிக்குச் சொந்தமான “ஜாஃப்னா” என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
1919ல் அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
1925ல் தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார்.
1937ல் டொமினிக்கன் குடியரசில் வசிக்கும் எயிட்டிய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டை: நாட்சி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தன.
1942ல் இரண்டாம் உலகப் போர்: குயீன் மேரி கப்பல் தவறுதலாகத் தனது பாதுகாப்புப் படகு குரக்கோவாவை மோதி மூழ்கடித்ததில் 337 மாலுமிகள் உயிரிழந்தனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் வார்சாவா கிளர்ச்சியை அடக்கின.
1955ல் ஆரம்பகாலக் கணினிகளில் ஒன்றான எனியாக் மூடப்பட்டது.
1958ல் கினி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது..
1968ல் மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
1970ல் அமெரிக்கா, கொலராடோவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விச்சிட்டா அரசுப் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.
1972ல் இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகம் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.
1990ல் சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
1992ல் பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
1996ல் பெரு விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 70 பேரும் உயிரிழந்தனர்.
2006ல் பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
2007ல் தென் கொரிய அரசுத்தலைவர் ரோ மூ-இயூன் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு எல்லை தாண்டி வட கொரியா சென்றார்.
2016ல் எத்தியோப்பியாவில் பண்டிகை ஒன்றின் போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டனர்.
2018ல் சவூதி ஊடகவியலாளர் ஜமால் காசோகி இசுதான்புல்லில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்கு சென்றதை அடுத்து அவர் காணாமல் போனார்..
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 02-10 | October 02
1452ல் இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு பிறந்த நாள். (இறப்பு-1485)
1538ல் இத்தாலியப் புனிதரான சார்லஸ் பொரோமெயோ பிறந்த நாள். (இறப்பு-1584)
1746ல் சுவீடன் வேதியியலாளரான பீட்டர் சாக்கப் இச்செலம் பிறந்த நாள். (இறப்பு-1813)
1800ல் அமெரிக்க அடிமையும் கிளர்ச்சித் தலைவருமான நாட் டர்னர் பிறந்த நாள். (இறப்பு-1831)
1848ல் ஈழத்துத் தமிழறிஞரும் புலவருமான காசிவாசி செந்திநாதையர் பிறந்த நாள். (இறப்பு-1924)
1866ல் சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான சுவாமி அபேதானந்தர் பிறந்த நாள். (இறப்பு-1939)
1869ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் மெய்யியலாளருமான மகாத்மா காந்தி பிறந்த நாள். (இறப்பு-1948)
1896ல் பாக்கித்தானின் 1-வது பிரதமரான லியாகத் அலி கான் பிறந்த நாள். (இறப்பு-1951)
1904ல் ஆங்கிலேய எழுத்தாளரான கிரஃகாம் கிரீன் பிறந்த நாள். (இறப்பு-1991)
1904ல் இந்தியாவின் 2வது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள். (இறப்பு-1966)
1904ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான அ. சிவசுந்தரம் பிறந்த நாள்.
1908ல் தமிழகப் பத்திரிகையாளரும் தொழிலதிபருமான டி. வி. இராமசுப்பையர் பிறந்த நாள். (இறப்பு-1984)
1913ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான எல். கே. பி. லகுமையா பிறந்த நாள். (இறப்பு-2013)
1916ல் தமிழ்த் திரைப்பட இயக்குனரான ப. நீலகண்டன் பிறந்த நாள். (இறப்பு-1992)
1925ல் ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளரான ஆன் றணசிங்க பிறந்த நாள்.
1930ல் தமிழக கல்வெட்டு ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன் பிறந்த நாள். (இறப்பு-2018)
1933ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளரான சான் பி. குர்தோன் பிறந்த நாள்.
1939ல் இந்தியத் துடுப்பாளரான புத்தி குந்தேரன் பிறந்த நாள். (இறப்பு-2006)
1945ல் அமெரிக்க குறியாக்கவியலாளரான மார்ட்டின் எல்மேன் பிறந்த நாள்.
1959ல் தமிழகத் திரைப்பட மற்றும் மேடை நாடக நடிகரான பாண்டியராஜன் பிறந்த நாள்.
1965ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான டொம் மூடி பிறந்த நாள்.
1974ல் இந்திய நடிகையான ரச்சநா பானர்ஜி பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 02-10 | October 02
1588ல் இத்தாலிய மெய்யியலாளரும் இயற்கை அறிவியலாளருமான பெர்னாடினோ தெலெசியோ இறப்பு நாள். (பிறப்பு-1509)
1803ல் அமெரிக்க மெய்யியலாளரும் அரசியல்வாதியுமான சாமுவேல் ஆடம்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1722)
1906ல் இந்திய ஓவியரான ராஜா ரவி வர்மா இறப்பு நாள். (பிறப்பு-1848)
1927ல் நோபல் பரிசு பெற்ற சுவீடிய வேதியியலாளரான சுவாந்தே அறீனியசு இறப்பு நாள். (பிறப்பு-1859)
1975ல் சென்னை மாநிலத்தின் 3-வது முதலமைச்சரான காமராசர் இறப்பு நாள். (பிறப்பு-1903)
1980ல் இலங்கைப் படைத்துறை அதிகாரியும் அரசியல்வாதியுமான ஜோன் கொத்தலாவலை இறப்பு நாள். (பிறப்பு-1895)
1992ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் பாடகருமான ஹொன்னப்ப பாகவதர் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2014ல் தமிழகத் தொழிலதிபரும் மக்கள் சேவையாளருமான பொள்ளாச்சி நா. மகாலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1923)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan