November 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 23

0

Today Special Historical Events In Tamil | 23-11 | November 23

November 23 Today Special | November 23 What Happened Today In History. November 23 Today Whose Birthday (born) | November-23rd Important Famous Deaths In History On This Day 23/11 | Today Events In History November 23rd | Today Important Incident In History | கார்த்திகை 23 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 23-11 | கார்த்திகை மாதம் 23ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 23.11 Varalatril Indru Nadanthathu Enna| November 23 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 23/11 | Famous People Born Today 23.11 | Famous People died Today 23-11.

Today Special in Tamil 23-11
Today Events in Tamil 23-11
Famous People Born Today 23-11
Famous People died Today 23-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 23-11 | November 23

திருத்தந்தை முதலாம் கிளமெண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூதரனியம்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 23-11 | November 23

800ல் திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.
1174ல் சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார்.
1248ல் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர்.
1499ல் இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன்.
1510ல் இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர்.
1857ல் ஐக்கிய இராச்சியத்தின் சிபெல்லா என்ற பயணிகள் கப்பல் கொழும்புக்கு அருகே மூழ்கியதில் நால்வர் உயிரிழந்தனர்.
1867ல் இரண்டு அயர்லாந்தர்களைச் சிறையிலிருந்து வெளியேற்ற உதவியமைக்காக மூன்று அயர்லாந்துத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
1890ல் நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்லெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
1910ல் சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1914ல் மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது.
1924ல் அந்திரொமேடா “நெபுலா” உண்மையில் நமது பால் வழிக்கு வெகுதூரத்தேயுள்ள பிறிதொரு விண்மீன் பேரடை என்ற எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்பு, முதற்தடடையாக நியூயார்க் டைம்சில் வெளியிடப்பட்டது.
1939ல் இரண்டாம் உலகப் போர்: ராவல்பிண்டி என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியப் போர்க் கப்பல்களினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
1940ல் இரண்டாம் உலகப் போர்: உருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: தரவா, மாக்கின் பவளத் தீவுகள் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தன.
1946ல் வியட்நாம், ஆய் பொங் நகர் மீது பிரெஞ்சுக் கடற்படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1955ல் கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆத்திரேலியாவுக்கு கைமாறியது.
1956ல் தமிழ்நாடு, அரியலூரில் நடந்த தொடருந்து விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.
1959ல் பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் ஸ்திராஸ்பூர்க் நகரில் “ஐரோப்பிய ஒருங்கிணைப்பு” பற்றிய தனது எண்ணங்களைத் தெரிவித்தார்.
1971ல் சீனப் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
1974ல் எத்தியோப்பியாவில் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட 60 பேர் இடைக்கால இராணுவ அரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1978ல் கிழக்கு மாகாண சூறாவளி, 1978: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வீசிய கடும் புயலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1979ல் மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1980ல் தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற 6.9 அளவு நிலநடுக்கத்தினால் 4,800 பேர் வரை உயிரிழந்தனர்.
1985ல் எகிப்தியப் பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1990ல் ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
1992ல் முதலாவது திறன்பேசி, ஐபிஎம் சைமன், லாஸ் வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1996ல் எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோசு அருகில் வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
2001ல் கணினி குற்றம் தொடர்பான சாசனம் புடாபெஸ்ட் நகரில் கையெழுத்திடப்பட்டது.
2003ல் வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சே பதவி விலகினார்.
2005ல் லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
2006ல் ஈராக்கில் சாதிர் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டு 257 பேர் காயமடைந்தனர்.
2007ல் அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
2007ல் அர்கெந்தீனாவுக்குத் தெற்கே எக்சுபுளோரர் என்ற பயணிகள் கப்பல் பனிமலை ஒன்றில் மூழ்கியதில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
2009ல் மகுயிண்டனாவோ படுகொலை: பிலிப்பீன்சில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2011ல் அரேபிய வசந்தம்: யெமனில் 11 மாதங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யேமனிய அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகினார்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 23-11 | November 23

1837ல் நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளரான‌ யோகான்னசு வான் டெர் வால்சு பிறந்த நாள். (இறப்பு-1923)
1864ல் செருமானிய-உருசிய வானியலாளரான‌ பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ பிறந்த நாள். (இறப்பு-1793)
1869ல் தென்மார்க்குப் பொறியியலாளரான‌ வால்டெமர் பவுல்சன் பிறந்த நாள். (இறப்பு-1942)
1872ல் பிரித்தானிய அரசியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளரும் நீதிபதியுமான‌ ஆஷ் துரை பிறந்த நாள். (இறப்பு-1911)
1897ல் வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளரும் எழுத்தாளருமான‌ நீரத் சந்திர சவுத்ரி பிறந்த நாள். (இறப்பு-1999)
1908ல் சோவியத் குழந்தைகள் எழுத்தாளரான‌ நிக்கலாய் நோசவ் பிறந்த நாள். (இறப்பு-1976)
1916ல் ஆங்கிலேய-கனடிய கவிஞரான‌ பி. கே. பேஜ் பிறந்த நாள். (இறப்பு-2010)
1921ல் தமிழகக் கவிஞரும் எழுத்தாளருமான‌ சுரதா பிறந்த நாள். (இறப்பு-2006)
1923ல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரான‌ ஏ. எல். சீனிவாசன் பிறந்த நாள். (இறப்பு-1977)
1926ல் தென்னிந்தியத் துறவியும் இந்து மெய்யியலாளருமான சத்திய சாயி பாபா பிறந்த நாள். (இறப்பு-2011)
1926ல் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் இதழாளருமான‌ தி. சு. கிள்ளிவளவன் பிறந்த நாள். (இறப்பு-2015)
1932ல் தமிழக மொழியியலாளரும் கல்வெட்டாய்வாளருமான‌ செ. வை. சண்முகம் பிறந்த நாள்.
1939ல் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான‌ ஜீவா ஜீவரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-1997)
1953ல் பிரான்சியப் பாடகரான‌ பிரான்சீஸ் காப்ரே பிறந்த நாள்.
1962ல் வெனிசுவேலா அரசுத்தலைவரான‌ நிக்கோலசு மதுரோ பிறந்த நாள்.
1972ல் இலங்கை அரசியல்வாதியான‌ விஜயகலா மகேசுவரன் பிறந்த நாள்.
1977ல் சமற்கிருத அறிஞரும் அரசியல்வாதியுமான‌ பிரகாஷ் வீர் சாஸ்திரி பிறந்த நாள். (இறப்பு-1923)
1979ல் ஆங்கிலேய நடிகையான‌ கெல்லி புரூக் பிறந்த நாள்.
1986ல் தெலுங்குத் திரைப்பட நடிகரான‌ நாக சைதன்யா பிறந்த நாள்.
1990ல் தென்னிந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான‌ பூர்ணிதா பிறந்த நாள்.
1992ல் அமெரிக்க நடிகையான‌ மைலே சைரஸ் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 23-11 | November 23

1826ல் செருமானிய வானியலாளரான‌ யோகான் எலர்ட் போடே இறப்பு நாள். (பிறப்பு-1747)
1844ல் இசுக்காட்டிய வானியலாளரும் கணிதவியலாளருமான தாமசு ஜேம்சு எண்டர்சன் இறப்பு நாள். (பிறப்பு-1798)
1910ல் அமெரிக்க கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடியுமான‌ ஆக்டேவ் சானுட் இறப்பு நாள். (பிறப்பு-1832)
1937ல் வங்காளதேச-இந்திய இயற்பியலாளரும் உயிரியலாளரும் தொல்லியலாளருமான‌ ஜகதீஷ் சந்திர போஸ் இறப்பு நாள். (பிறப்பு-1858)
1976ல் பிரான்சிய எழுத்தாளரான‌ ஆன்றே மால்றோ இறப்பு நாள். (பிறப்பு-1901)
1976ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ மு. திருச்செல்வம் இறப்பு நாள். (பிறப்பு-1907)
1977ல் சமக்கிருத அறிஞரான‌ பிரகாஷ் வீர் சாஸ்திரி இறப்பு நாள். (பிறப்பு-1923)
1983ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் நடனக் கலைஞரான‌ லலிதா இறப்பு நாள். (பிறப்பு-1930)
1990ல் பிரித்தானியப் புதின எழுத்தாளரான‌ ரூவால் டால் இறப்பு நாள். (பிறப்பு-1916)
1992ல் தமிழகத் தமிழறிஞரான‌ மு. அருணாசலம் இறப்பு நாள். (பிறப்பு-1909)
2003ல் தமிழக அரசியல்வாதியான‌ முரசொலி மாறன் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2012ல் தமிழக அரசியல்வாதியான‌ வீரபாண்டி எஸ். ஆறுமுகம் இறப்பு நாள். (பிறப்பு-1937)
2014ல் ஈழத்துப் பேராசிரியரும் எழுத்தாளருமான‌ செல்வா கனகநாயகம் இறப்பு நாள்.
2016ல் தமிழ், இந்தித் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான‌ கே. சுபாஷ் இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 22
Next articleNovember 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 24