November 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 16

0

Today Special Historical Events In Tamil | 16-11 | November 16

November 16 Today Special | November 16 What Happened Today In History. November 16 Today Whose Birthday (born) | November-16th Important Famous Deaths In History On This Day 16/11 | Today Events In History November 16th | Today Important Incident In History | கார்த்திகை 16 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 16-11 | கார்த்திகை மாதம் 16ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 16.11 Varalatril Indru Nadanthathu Enna| November 16 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 16/11 | Famous People Born Today 16.11 | Famous People died Today 16-11.

Today Special in Tamil 16-11
Today Events in Tamil 16-11
Famous People Born Today 16-11
Famous People died Today 16-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 16-11 | November 16

உலக சகிப்புத் தன்மை நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 16-11 | November 16

1272ல் இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது.
1491ல் எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர்.
1532ல் எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
1776ல் அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன.
1793ல் பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க பிரிவினைவாத மதகுருக்கள் 90 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1797ல் புருசியாவின் மன்னராக மூன்றாம் பிரெடெரிக் வில்லியம்சு முடி சூடினார்.
1846ல் இலங்கையில் கைம்பெண்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1849ல் அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி உருசிய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு, கடுந்தொழில் செய்யக் கட்டளையிடப்பட்டார்.
1852ல் ஆங்கிலேய வானியலாளர் யோன் ரசல் இந்த் என்பவர் 22 கலியோப் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1885ல் “மானிட்டோபாவின் தந்தை” என அழைக்கப்பட்ட கனடாவின் மேட்டிசுப் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தேசத்துரோகக் குற்றஞ் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
1904ல் ஆங்கிலேயப் பொறியியலாளர் ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
1907ல் ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
1920ல் ஆத்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாசு ஆரம்பிக்கப்பட்டது.
1933ல் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1938ல் எல்எசுடி முதல் தடவையாக ஆல்பர்ட் ஹாப்மன் என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது.
1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படை ஆம்பர்கு மீது குண்டுகளை வீசியது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் குயின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945ல் யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1945ல் பனிப்போர்: அமெரிக்க இராணுவம் செருமனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
1965ல் சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
1973ல் மூன்று விண்ணோடிகளுடன் 84 நாள் பயணமாக ஸ்கைலேப் 4 விண்கலத்தை நாசா ஏவியது.
1974ல் ஆரசீபோ தகவல் 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன்களுக்கு புவேர்ட்டோ ரிக்கோவில் அரசீபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
1988ல் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989ல் மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் எல் சல்வடோர் இராணுவத்தினர் இயேசு சபையைச் சேர்ந்த ஆறு மதகுருக்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றனர்.
2002ல் சார்சு நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 16-11 | November 16

1717ல் பிரான்சியக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் மெய்யியலாளருமான‌ ழான் லி ராண்ட் டெ’ஆலம்பர்ட் பிறந்த நாள். (இறப்பு-1783)
1922ல் நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய-எசுப்பானிய எழுத்தாளரான‌ ஜோசே சரமாகூ பிறந்த நாள். (இறப்பு-2010)
1930ல் நைஜீரிய எழுத்தாளரான‌ சினுவா அச்சிபே பிறந்த நாள். (இறப்பு-2013)
1938ல் அமெரிக்க மெய்யியலாளரும் எழுத்தாளருமான‌ ரோபேர்ட் நோசிக் பிறந்த நாள். (இறப்பு-2002)
1962ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ அம்பிகா பிறந்த நாள்.
1971ல் பாக்கித்தானியத் துடுப்பாளரான‌ வக்கார் யூனிசு பிறந்த நாள்.
1983ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான‌ தமன் பிறந்த நாள்.
1985ல் இந்தித் திரைப்பட நடிகரான‌ ஆதித்யா ராய் கபூர் பிறந்த நாள்.
1975ல் ஊடகவியலாளரான‌ ரங்கராஜ் பாண்டே பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 16-11 | November 16

1240ல் அராபிய மெய்யியலாளரான‌ இப்னு அரபி இறப்பு நாள். (பிறப்பு-1165)
1801ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியுமான‌ ஊமைத்துரை இறப்பு நாள்.
1903ல் தமிழக நாதசுவரக் கலைஞரான‌ திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1869)
1960ல் அமெரிக்க நடிகரும் பாடகருமான‌ கிளார்க் கேபிள் இறப்பு நாள். (பிறப்பு-1901)
1977ல் ஈழத்து எழுத்தாளரும் தமிழறிஞருமான‌ கனக செந்திநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1916)
1985ல் இந்தியத் துறவியான‌ சித்பவானந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1898)
2006ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான மில்ட்டன் ஃப்ரீட்மன் இறப்பு நாள். (பிறப்பு-1912)
2021ல் தமிழக எழுத்தாளரும் நடிகருமான‌ பாரதி மணி இறப்பு நாள். (பிறப்பு-1937)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 15
Next articleNovember 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 17