November 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 09

0

Today Special Historical Events In Tamil | 09-11 | November 09

November 09 Today Special | November 09 What Happened Today In History. November 09 Today Whose Birthday (born) | November-09th Important Famous Deaths In History On This Day 09/11 | Today Events In History November 09th | Today Important Incident In History | கார்த்திகை 09 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 09-11 | கார்த்திகை மாதம் 09ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 09.11 Varalatril Indru Nadanthathu Enna| November 09 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 09/11 | Famous People Born Today 09.11 | Famous People died Today 09-11.

Today Special in Tamil 01-11
Today Events in Tamil 09-11
Famous People Born Today 09-11
Famous People died Today 09-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 09-11 | November 09

இறந்தோர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பொலிவியா)
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கம்போடியா, பிரான்சிடம் இருந்து 1953)
தேசிய சட்ட சேவைகள் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (இந்தியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 09-11 | November 09

1277ல் அபெர்கொன்வி உடன்பாடு உவெல்சியப் போர்களின் முதலாவது கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1520ல் ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறித்தியான் மன்னருக்கு எதிராக செயற்பட்ட 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1688ல் மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான்.
1720ல் எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1793ல் கிறித்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
1799ல் பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
1867ல் சப்பானின் கடைசி இராணுவ ஆட்சியாளர் ஆட்சியை சப்பானியப் பேரரசரிடம் ஒப்படைத்தனர். மெய்சி மீள்விப்பு ஆரம்பமானது.
1872ல் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் உயிரிழந்தனர்.
1887ல் ஐக்கிய அமெரிக்கா அவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.
1888ல் கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.
1906ல் அதிகாரபூர்வமாக வெளிநாட்டுக்குச் சென்ற முதலாவது அமெரிக்க அரசுத்தலைவராக தியொடோர் ரோசவெல்ட் பனாமா கால்வாயை பார்க்கச் சென்றார்.
1907ல் கலினன் வைரம் இங்கிலாந்தின் ஏழாம் எட்வர்டு மன்னருக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பரிசளிக்கப்பட்டது.
1913ல் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
1914ல் செருமனியின் எம்டன் கப்பல் கொக்கோசு தீவுகளில் இடம்பெற்ற போரில் ஆத்திரேலியாவின் சிட்னி கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1918ல் செருமனியப் புரட்சியை அடுத்து இரண்டாம் வில்லியம் முடி துறந்தார். செருமனி குடியரசானது.
1921ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1923ல் செருமனி, மியூனிக்கில், நாட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை காவல்துறையினர் முறியடித்தனர்.
1937ல் இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீன இராணுவம் சாங்காய் நகரில் இருந்து வெளியேறின.
1938ல் நாட்சி செருமனியின் இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
1953ல் கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1963ல் சப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் உயிரிழந்தனர்.
1965ல் கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைச் சேர்ந்த ராஜர் அல்லன் என்பவர் வியட்நாம் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் அவைக்கு முன்னால் தீக்குளித்து மாண்டார்.
1967ல் அப்பல்லோ திட்டம்: நாசா அப்பல்லோ 4 ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
1985ல் சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி காஸ்பரொவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த (22) சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989ல் பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு செருமனி பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜெர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
1990ல் நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994ல் டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
2000ல் உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
2005ல் வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்கஸ்தான், பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
2005ல் யோர்தான், அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
2012ல் வடக்கு மியான்மரில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.
2012ல் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் காவலர்கள், மற்றும் கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 09-11 | November 09

1877ல் பாக்கிஸ்தானிய மெய்யியலாளரும் கவிஞரும் அரசியல்வாதியுமான‌ முகமது இக்பால் பிறந்த நாள். (இறப்பு-
1938)
1896ல் தமிழக நாதசுவரக் கலைஞரும் திருவிடைமருதூருமான‌ பி. எஸ். வீருசாமி பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-
1973)
1897ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளரான‌ ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு பிறந்த நாள். (இறப்பு-1978)
1912ல் மலையாளத் திரைப்பட நடிகரான‌ சத்யன் பிறந்த நாள். (இறப்பு-1971)
1914ல் ஆஸ்திரிய-அமெரிக்க நடிகையும் கண்டுபிடிப்பாளருமான‌ எடி இலமார் பிறந்த நாள். (இறப்பு-2000)
1934ல் அமெரிக்க வானியலாளரும் எழுத்தாளருமான‌ கார்ல் சேகன் பிறந்த நாள். (இறப்பு-1996)
1937ல் தமிழகக் கவிஞரும் தமிழ்ப் பேராசிரியருமான‌ அப்துல் ரகுமான் பிறந்த நாள். (இறப்பு-2017)
1952ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளரான‌ ஜாக் சோஸ்டாக் பிறந்த நாள்.
1952ல் இந்திய அரசியல்வாதியான கே. என். நேரு பிறந்த நாள்.
1959ல் தென்னிந்திய வீணைக் கலைஞரான‌ ஈ. காயத்ரி பிறந்த நாள்.
1965ல் தமிழகத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகரான‌ வேணு அரவிந்த் பிறந்த நாள்.
1972ல் அமெரிக்க நடிகரான‌ எரிக் டான் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 09-11 | November 09

1576ல் மைசூர் மன்னரான‌ நான்காம் சாமராச உடையார் இறப்பு நாள். (பிறப்பு-1507)
1918ல் இத்தாலிய-பிரான்சியக் கவிஞரான‌ கியோம் அப்போலினேர் இறப்பு நாள். (பிறப்பு-1880)
1940ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான‌ நெவில் சேம்பர்லேன் இறப்பு நாள். (பிறப்பு-1869)
1953ல் சவூதி அரேபிய மன்னரான‌ அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் இறப்பு நாள். (பிறப்பு-1880)
1962ல் இந்திய செயற்பாட்டாளரான‌ தோண்டோ கேசவ் கார்வே இறப்பு நாள். (பிறப்பு-1858)
1969ல் இந்திய அரசியல்வாதியும் மருத்துவருமான‌ பி. வி. செரியன் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1970ல் பிரான்சின் 18வது அரசுத்தலைவரான‌ சார்லஸ் டி கோல் இறப்பு நாள். (பிறப்பு-1890)
1988ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ தேங்காய் சீனிவாசன் இறப்பு நாள். (பிறப்பு-1937)
1992ல் இலங்கை அரசியல்வாதியான‌ தா. சிவசிதம்பரம் இறப்பு நாள். (பிறப்பு-1926)
1994ல் இலங்கை அரசியல்வாதியான‌ ஒசி அபேகுணசேகரா இறப்பு நாள். (பிறப்பு-1950)
1998ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ பி. எஸ். வீரப்பா இறப்பு நாள். (பிறப்பு-1911)
2002ல் இந்திய அரசியல்வாதியான‌ எஸ். எஸ். மணி நாடார் இறப்பு நாள். (பிறப்பு-1936)
2004ல் சுவீடன் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான‌ ஸ்டீக் லார்சன் இறப்பு நாள். (பிறப்பு-1954)
2005ல் இந்திய அரசியல்வாதியும் பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவருமான‌ கே. ஆர். நாராயணன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2006ல் தமிழக எழுத்தாளரான‌ வல்லிக்கண்ணன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2011ல் இந்திய-அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளரான‌ ஹர் கோவிந்த் கொரானா இறப்பு நாள். (பிறப்பு-1922)
2015ல் ஈழத்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சிற்பி இறப்பு நாள். (பிறப்பு-1933)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 08
Next articleNovember 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 10