Today Special Historical Events In Tamil | 08-11 | November 08
November 08 Today Special | November 08 What Happened Today In History. November 08 Today Whose Birthday (born) | November-08th Important Famous Deaths In History On This Day 08/11 | Today Events In History November 08th| Today Important Incident In History | கார்த்திகை 08 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 08-11 | கார்த்திகை மாதம் 08ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 08.11 Varalatril Indru Nadanthathu Enna| November 08 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 08/11 | Famous People Born Today 08.11 | Famous People died Today 08-11.
Today Special in Tamil 08-11
Today Events in Tamil 08-11
Famous People Born Today 08-11
Famous People died Today 08-11
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 08-11 | November 08
உலக நகர்ப்புறவியம் நாளாக கொண்டாடப்படுகிறது.
பன்னாட்டுக் கதிரியல் நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 08-11 | November 08
1519ல் எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார்.
1520ல் டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1576ல் எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர்.
1605ல் இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார்.
1620ல் பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் வெற்றி பெற்றன.
1644ல் சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது.
1811ல் இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், யாழ்ப்பாணத்தில் கீழ் நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளுக்கு சான்றாயர் விசாரணை முறையும் அமுலுக்கு வந்தது.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரித்தானியாவின் டிரெண்ட் என்ற அஞ்சல் கப்பலை வழிமறித்த அமெரிக்காவின் ‘சான் யெசிண்டோ கப்பல் இரண்டு கூட்டமைப்பு தூதர்களைக் கைது செய்தது.
1889ல் மொன்ட்டானா அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.
1892ல் கறுப்பின, மற்றும் வெள்ளையின அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் முதல் தடவையாக ஒன்றிணைந்து நியூ ஓர்லென்சு மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.
1895ல் எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1901ல் ஏதென்சு நகரில் கத்தோலிக்க நற்செய்திகளின் கிரேக்க மொழிபெயர்ப்பு சர்ச்சையை அடுத்து கலவரம் ஏற்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
1917ல் உருசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரை உள்ளடக்கிய மக்கள் பேரவை அமைக்கப்பட்டது.
1923ல் மியூனிக் நகரில் இட்லர் தலைமையில் நாட்சிகள் செருமனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
1936ல் எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பிராங்கோயிசப் படைகள் மத்ரித் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது, ஆனாலும் 3-ஆண்டு மத்ரித் முற்றுகை ஆரம்பமானது.
1939ல் மியூனிக் நகரில் இட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1940ல் கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலி கிரேக்கத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: அல்ஜியர்சில் பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.
1950ல் கொரியப் போர்: அமெரிக்க வான்படை வட கொரிய மிக்-15 விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியது.
1957ல் அமெரிக்காவின் பான்-ஆம் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவுக்கும் ஒனலூலுவிற்கும் இடையில் 44 பேருடன் காணாமல் போனது. ஒரு கிழமையின் பின்னர் இதன் பாகங்களும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
1957ல் ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது ஐதரசன் குண்டை பசிபிக் பிராந்தியத்தில் கிரிபட்டி தீவுகளில் வெற்றிகரமாகச் சோதித்தது.
1965ல் சாகோஸ் தீவுக்கூட்டம், அல்டாப்ரா, பார்க்கார், டெ ரோச்சசு ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
1965ல் பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1977ல் வெர்ஜினாவில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.
1987ல் வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2002ல் சதாம் உசேன் உடனடியாக ஆயுதக்களைவில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எச்சரிக்கை விடுத்தது.
2006ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் 19 பாலத்தீனர்களை அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
2006ல் வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2006ல் பாக்கித்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2011ல் 2005 யூ55 என்ற சிறுகோள் பூமியை 324,600 கிமீ தூரத்தில் அணுகியது.
2013ல் சூறாவளி ஹையான், பிலிப்பீன்சில் விசயன் தீவுகள் பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.
2016ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தார்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 08-11 | November 08
1656ல் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளருமான எட்மண்டு ஏலி பிறந்த நாள். (இறப்பு-1742)
1680ல் இத்தாலியத் தமிழறிஞரான வீரமா முனிவர் பிறந்த நாள். (இறப்பு-1742)
1831ல் இந்தியாவின் 30வது பிரித்தானிய ஆளுநரான லிட்டன் பிரபு பிறந்த நாள். (இறப்பு-1880)
1875ல் சீனப் புரட்சியாளரும் பெண்ணிய எழுத்தாளருமான சியூ சின் பிறந்த நாள். (இறப்பு-1907)
1893ல் ஆந்திர வயலின் இசைக் கலைஞரான துவாரம் வேங்கடசுவாமி நாயுடு பிறந்த நாள். (இறப்பு-1964)
1902ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான ஜி. ஜி. பொன்னம்பலம் பிறந்த நாள். (இறப்பு-1977)
1903ல் இலங்கைத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான அல்பிரட் தம்பிஐயா பிறந்த நாள்.
1910ல் தமிழக தவில் கலைஞருமான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1964)
1912ல் தமிழகத் தொழிலதிபரான டி. எஸ். சந்தானம் பிறந்த நாள். (இறப்பு-2005)
1908ல் இந்திய எழுத்தாளரான ராஜா ராவ் பிறந்த நாள். (இறப்பு-2006)
1920ல் இந்திய நடிகையும் நடன இயக்குநருமான சிதாராதேவி பிறந்த நாள். (இறப்பு-2014)
1923ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான ஜாக் கில்பி பிறந்த நாள். (இறப்பு-2005)
1926ல் அமெரிக்க அணுக்கரு வேதியியலாளரான டார்லீன் சி. ஆப்மேன் பிறந்த நாள்.
1927ல் இந்திய அரசியல்வாதியான லால் கிருஷ்ண அத்வானி பிறந்த நாள்.
1937ல் இந்தியத் தமிழ் திரைப்பட மற்றும் சட்ட எழுத்தாளரான ராண்டார் கை பிறந்த நாள்.
1943ல் அமெரிக்க நிழற்படக்காரரும் அச்சுத் தொழிலாளியும் கல்வியாளரும் நூலாசிரியருமான ரிச்சர்ட் பென்சன் பிறந்த நாள். (இறப்பு-2017)
1954ல் சப்பானிய-பிரித்தானிய புதின எழுத்தாளரான கசுவோ இசுகுரோ பிறந்த நாள்.
1957ல் இலங்கைத் தமிழ்ப் போராளியும் அரசியல்வாதியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் பிறந்த நாள்.
1966ல் தமிழக அரசியல்வாதியும் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சீமான் பிறந்த நாள்.
1969ல் இந்தியத் திரைப்பட நடிகரான உபேந்திரா லிமாயி பிறந்த நாள்.
1976ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான பிறெட் லீ பிறந்த நாள்.
1981ல் அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளரான நியல் ஓ’பிறையன் பிறந்த நாள்.
1986ல் அமெரிக்க கணினியியலாளரான ஏரன் சுவோற்சு பிறந்த நாள். (இறப்பு-2013)
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 08-11 | November 08
397ல் பிரான்சிய ஆயரான புனிதர்மார்ட்டின் இறப்பு நாள்.
955ல் திருத்தந்தையான இரண்டாம் அகாப்பெட்டஸ் இறப்பு நாள்.
1240ல் அராபிய சூபி இறைஞானியும் மெய்யியலாளருமான இப்னு அரபி இறப்பு நாள். (பிறப்பு-1165)
1605ல் ஆங்கிலேயக் குற்றவாளியும் வெடிமருந்து சதித்திட்டத் தலைவருமான இராபர்ட்டு கேட்சுபி இறப்பு நாள். (பிறப்பு-1573)
1674ல் ஆங்கிலேயக் கவிஞரும் மெய்யியலாளருமான ஜான் மில்டன் இறப்பு நாள். (பிறப்பு-1608)
1958ல் இலங்கைத் தமிழறிஞரான சி. கணேசையர் இறப்பு நாள். (பிறப்பு-1878)
1969ல் அமெரிக்க வானியலாளரான வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் இறப்பு நாள். (பிறப்பு-1875)
1970ல் அமெரிக்க எழுத்தாளரான நெப்போலியன் ஹில் இறப்பு நாள். (பிறப்பு-1883)
1987ல் தமிழக எழுத்தாளரும் பாடலாசிரியரும் திரைக்கதை ஆசிரியருமான சக்தி கிருஷ்ணசாமி இறப்பு நாள். (பிறப்பு-1913)
2000ல் இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சோ. சிவபாதசுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1912)
2006ல் தமிழக அரசியல்வாதியான கா. காளிமுத்து இறப்பு நாள். (பிறப்பு-1942)
2009ல் நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளரான வித்தாலி கீன்ஸ்புர்க் இறப்பு நாள். (பிறப்பு-1916)
2013ல் இந்திய நடிகரான சிட்டிபாபு இறப்பு நாள். (பிறப்பு-1964)
2014ல் ஈழத்துத் தமிழறிஞரும் பேராசிரியருமான வி. சிவசாமி இறப்பு நாள். (பிறப்பு-1933)
2014ல் தமிழக மோர்சிங் இசைக் கலைஞரான ஐ. எஸ். முருகேசன் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2015ல் இலங்கைப் பௌத்த துறவியும் அரசியல் செயற்பாட்டாளருமான மாதுலுவாவே சோபித்த தேரர் இறப்பு நாள். (பிறப்பு-1942)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan