November 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 02

0

Today Special Historical Events In Tamil | 02-11 | November 02

November 02 Today Special | November 02 What Happened Today In History. November 02 Today Whose Birthday (born) | November-02nd Important Famous Deaths In History On This Day 02/11 | Today Events In History November 02nd | Today Important Incident In History | கார்த்திகை 02 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 02-11 | கார்த்திகை மாதம் 02ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 02.11 Varalatril Indru Nadanthathu Enna| November 02 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 02/11 | Famous People Born Today 02.11 | Famous People died Today 02-11.

Today Special in Tamil 02-11
Today Events in Tamil 02-11
Famous People Born Today 02-11
Famous People died Today 02-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 02-11 | November 02

கல்லறைத் திருநாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்)
இறந்தோர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மெக்சிக்கோ)
இந்தியர் வருகை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மொரிசியசு)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 02-11 | November 02

619ல் மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.
1675ல் பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார்.
1795ல் ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது.
1834ல் முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர்.
1868ல் நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.
1868ல் இலங்கையில் சப்ரகமுவாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1889ல் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.
1899ல் இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.
1912ல் பல்கேரியா உதுமானியப் பேரரசை லூல் பர்காசு சமரில் தோற்கடித்தது.
1914ல் முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியப் பேரரசுடன் போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை மூடப்பட்டது.
1917ல் உருசியப் புரட்சியை முன்னெடுக்க பெத்ரோகிராத் சோவியத்தின் இராணுவ புரட்சிச் செயற்குழு தனது முதலாவது கூட்டத்தைக் கூட்டியது.
1917ல் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
1920ல் அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில் முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.
1936ல் பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.
1936ல் கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.
1949ல் இடச்சு-இந்தோனேசிய வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. நெதர்லாந்து இடச்சு கிழக்கிந்தியாவின் உரிமையை இந்தோனேசியாவுக்குக் கொடுத்தது.
1951ல் சுயஸ் கால்வாய் வலயத்தில் கிளர்ந்த நெருக்கடி நிலையை சமாளிக்க 6,000 பிரித்தானியப் படையினர் எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.
1953ல் பாக்கித்தான், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1956ல் அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.
1956ல் சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது.
1963ல் தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.
1964ல் சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.
1965ல் வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.
1966ல் கியூபாவைச் சேர்ந்த 123,000 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.
1974ல் தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.
1984ல் அமெரிக்காவில் 1962 இற்குப் பின்னர் முதல் தடவையாகப் பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1999ல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளருமான அற்புதராஜா நடராஜா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2000ல் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.
2006ல் ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007ல் இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2007ல் மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 02-11 | November 02

971ல் கசினியின் மகுமூது பிறந்த நாள். (இறப்பு-1030)
1795ல் ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவரான‌ ஜேம்ஸ் போக் பிறந்த நாள். (இறப்பு-1849)
1815ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரும் மெய்யியலாளருமான‌ ஜார்ஜ் பூல் பிறந்த நாள். (இறப்பு-1864)
1833ல் இந்திய மருத்துவரான‌ மகேந்திரலால் சர்க்கார் பிறந்த நாள். (இறப்பு-1904)
1861ல் பிரான்சிய பூச்சியியலாளரான‌ ஜூல்ஸ் கூலட் பிறந்த நாள். (இறப்பு-1933)
1885ல் தமிழகத் தமிழறிஞரான‌ த. வே. இராதாகிருட்டிணன் பிறந்த நாள்.
1885ல் அமெரிக்க வானியலாளரான ஆர்லோவ் சேப்ளே பிறந்த நாள். (இறப்பு-1972)
1906ல் சுவீடிய இயற்பியலாளரும் வானியலாளருமான‌ பெங்கித் எட்லேன் பிறந்த நாள். (இறப்பு-1993)
1929ல் அமெரிக்கப் பொறியியலாளரும் தொழிலதிபருமான அமர் கோ. போசு பிறந்த நாள். (இறப்பு-2013)
1933ல் தமிழகத் தமிழறிஞரும் எழுத்தாளருமான‌ பெ. சு. மணி பிறந்த நாள். (இறப்பு-2021)
1941ல் இந்திய அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான‌ அருண் சோரி பிறந்த நாள்.
1948ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ ஜோதிலட்சுமி பிறந்த நாள். (இறப்பு-2016)
1965ல் இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான‌ சாருக்கான் பிறந்த நாள்.
1966ல் அமெரிக்க நடிகரான‌ டேவிட் சுவிம்மர் பிறந்த நாள்.
1969ல் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான‌ மதுஸ்ரீ பிறந்த நாள்.
1981ல் இந்திய நடிகையான‌ ஈஷா தியோல் பிறந்த நாள்.
1981ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ மிட்செல் ஜோன்சன் பிறந்த நாள்.
1987ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ பாலா சரவணன் பிறந்த நாள்.
1990ல் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான‌ கெண்டல் ஸ்மித் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 02-11 | November 02

1903ல் தமிழறிஞரான‌ பரிதிமாற் கலைஞர் இறப்பு நாள். (பிறப்பு-1870).
1917ல் ஈழத்து வரலாற்றாளரும் கலைக்களஞ்சியத் தொகுப்பாளரும் பதிப்பாளருமான‌ ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1858).
1950ல் நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளரான‌ ஜார்ஜ் பெர்னாட் ஷா இறப்பு நாள். (பிறப்பு-1856)
1966ல் நோபல் பரிசு பெற்ற டச்சு-அமெரிக்க வேதியியலாளரான‌ பீட்டர் டெபாய் இறப்பு நாள். (பிறப்பு-1884)
1978ல் ஈழத்துத் தமிழறிஞரான‌ ஏ. பெரியதம்பிப்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1899)
1988ல் தமிழக அரசியல்வாதியான‌ பி. தாணுலிங்க நாடார் இறப்பு நாள். (பிறப்பு-1915)
1999ல் தமிழக சட்ட அறிஞரும் நூலாசிரியரும் திருக்குறள் ஆய்வாளருமான‌ கு. ச. ஆனந்தன் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2004ல் டச்சு நடிகரும் இயக்குநருமான‌ தியோ வன் கோ இறப்பு நாள். (பிறப்பு-1957)
2004ல் அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியுமான‌ சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் இறப்பு நாள். (பிறப்பு-1918)
2007ல் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான‌ சு. ப. தமிழ்ச்செல்வன் இறப்பு நாள். (பிறப்பு-1967)
2011ல் ஈழத்து எழுத்தாளரும் பத்திரிகையாளருமான‌ சி. தர்மகுலசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1947)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 27.09.2022 Today Rasi Palan 27-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleNovember 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 03