Today Special Historical Events In Tamil | 03-11 | November 03
November 03 Today Special | November 03 What Happened Today In History. November 03 Today Whose Birthday (born) | November-03rd Important Famous Deaths In History On This Day 03/11 | Today Events In History November 03rd | Today Important Incident In History | கார்த்திகை 03 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 03-11 | கார்த்திகை மாதம் 03ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 03.11 Varalatril Indru Nadanthathu Enna| November 03 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 03/11 | Famous People Born Today 03.11 | Famous People died Today 03-11.
Today Special in Tamil 03-11
Today Events in Tamil 03-11
Famous People Born Today 03-11
Famous People died Today 03-11
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 03-11 | November 03
கலாச்சார நாளாக கொண்டாடப்படுகிறது. (சப்பான்)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பனாமா, கொலம்பியாவிடம் இருந்து 1903)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (டொமினிக்கா, பிரித்தானியாவிடம் இருந்து 1978)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (மைக்குரோனீசியா, அமெரிக்காவிடம் இருந்து 1986)
வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. (மாலைத்தீவுகள்)
அன்னையர் நாளாக கொண்டாடப்படுகிறது. (கிழக்குத் திமோர்)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 03-11 | November 03
361ல் உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார்.
644ல் இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார்.
1333ல் ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1492ல் இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1493ல் கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார்.
1534ல் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
1783ல் அமெரிக்க விடுதலைப் படை கலைக்கப்பட்டது.
1789ல் அமெரிக்காவின் முதலாவது மாவட்ட நீதிமன்றம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.
1793ல் பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கூசு தலைதுண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1812ல் நெப்போலியனின் இராணுவத்தினர் வியாசுமா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
1838ல் பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
1848ல் நெதர்லாந்தில் இட்ச்சு அரசகுடும்பத்தினரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1903ல் ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1905ல் உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டார்.
1918ல் செருமனி கடற்படையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட 40,000 மாலுமிகள் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.
1930ல் பிரேசிலில் அக்டோபர் 24 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கெட்டூலியோ வார்கசு இடைக்கால அரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1936ல் பிராங்க்ளின் ரூசவெல்ட் அமெரிக்காவின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வில்லெம்சாவென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
1956ல் சூயெசு நெருக்கடி: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் எகிப்தியக் கட்டுப்பாட்டில் இருந்த காசாவில் தாக்குதல் நடத்தியதில் 275 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
1956ல் அங்கேரியப் புரட்சி: தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள் அல்லாத கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய புதிய அங்கேரிய அரசு நிறுவப்பட்டது. இதே வேளையில் மாஸ்கோவில் யானோசு காதார் தலைமையில் சோவியத்-ஆதரவு அங்கேரிய அரசு அமைக்கப்பட்டது.
1957ல் இசுப்புட்னிக் திட்டம்: உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் இசுப்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.
1963ல் தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது.
1963ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1964ல் வாசிங்டன், டி. சி. மக்கள் முதன் முறையாக அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
1973ல் மரைனர் திட்டம்: நாசா மரைனர் 10 என்ற விண்கலத்தை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் புதனை அடைந்து அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் என்ற சாதனையைப் பெற்றது.
1975ல் சேக் முசிபுர் ரகுமானின் ஆதரவாளர்கள் உட்படப் பல வங்காளதேச அரசியல்வாதிகள் டாக்கா மத்திய சிறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
1978ல் டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1979ல் அமெரிக்காவில், வட கரொலைனாவில் கம்யூனிசத் தொழிலாளர் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் கிளான் மற்றும் நியோநாட்சி குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1982ல் ஆப்கானித்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1986ல் மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1988ல் இலங்கையின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகப் போராளிகளினால் மாலை தீவுகள் அரசைக் கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
1997ல் மனித உரிமை மீறல்களுக்காகவும், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் சூடான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
2014ல் 1 உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 03-11 | November 03
1618ல் முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் பிறந்த நாள். (இறப்பு-1707).
1863ல் பிரான்சிய இயற்பியலாளரான ஆல்பிரட் பெரோ பிறந்த நாள். (இறப்பு-1925)
1878ல் கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞரான பெங்களூர் நாகரத்தினம்மா பிறந்த நாள். (இறப்பு-1952)
1882ல் பெலருசிய எழுத்தாளரான யாக்குப் கோலாசு பிறந்த நாள். (இறப்பு-1956)
1901ல் பிரான்சிய வரலாற்றாளரான ஆன்றே மால்றோ பிறந்த நாள். (இறப்பு-1976)
1907ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான இரேந்திரநாத் முகர்சி பிறந்த நாள். (இறப்பு-2004)
1911ல் தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடியான ஏ. கே. செட்டியார் பிறந்த நாள். (இறப்பு-1983)
1913ல் இந்திய இதழிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான நிகில் சக்கரவர்த்தி பிறந்த நாள். (இறப்பு-1998)
1928ல் சப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளரான ஒசாமு தெசூகா பிறந்த நாள். (இறப்பு-1989)
1930ல் இடச்சு மெய்யியலாளரான பெடரிக்கு இசுட்டால் பிறந்த நாள். (இறப்பு-2012)
1932ல் இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவரான அன்னை பூபதி பிறந்த நாள். (இறப்பு-1988)
1933ல் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியலாளரான அமர்த்தியா சென் பிறந்த நாள்.
1935ல் தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகியான ஜிக்கி பிறந்த நாள். (இறப்பு-2004)
1949ல் ஆங்கிலேய-அமெரிக்க ஊடகவியலாளரான அன்னா வின்டொர் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 03-11 | November 03
644ல் சவுதி அரேபிய கலீபாவான உமறு இப்னு அல்-கத்தாப் இறப்பு நாள். (பிறப்பு-584)
1584ல் இத்தாலியக் கர்தினாலும் புனிதருமான சார்லஸ் பொரோமெயோ இறப்பு நாள். (பிறப்பு-1538)
1639ல் பெருவின் புனிதரான மார்டின் தெ போரஸ் இறப்பு நாள். (பிறப்பு-1579)
1944ல் அமெரிக்கப் பறவையியலாளரும் சூழலியலாளருமான ஜாக் மைனர் இறப்பு நாள். (பிறப்பு-1865)
1954ல் பிரான்சிய ஓவியரான சிற்பி ஆன்றி மட்டீசு இறப்பு நாள். (பிறப்பு-1869)
1956ல் பிரான்சிய ஓவியரான யோன் மெட்சிங்கர் இறப்பு நாள். (பிறப்பு-1883)
1989ல் பிஜியின் 2வது பிரதமரான டிமோதி இம்பவன்றா இறப்பு நாள். (பிறப்பு-1934)
1993ல் இந்தியப் பத்திரிகையாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான மோகன் ராம் இறப்பு நாள். (பிறப்பு-1933)
1998ல் அமெரிக்க எழுத்தாளரான பாப் கார்னே இறப்பு நாள். (பிறப்பு-1915)
2002ல் சுலோவாக்கிய வானியலாளரான உல்ரிகா பாபியாகோவா இறப்பு நாள். (பிறப்பு-1976)
2006ல் தமிழ்த் திரைப்பட நடிகையான ஈ. வி. சரோஜா இறப்பு நாள். (பிறப்பு-1935)
2016ல் சிங்களப் பாடகரும் இசையமைப்பாளருமான டபிள்யூ. டி. அமரதேவா இறப்பு நாள். (பிறப்பு-1927)
2013ல் பாக்கித்தானிய நாட்டுப்புற இசைக் கலைஞரான ரேஸ்மா இறப்பு நாள். (பிறப்பு-1947)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan