November 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 01

0

Today Special Historical Events In Tamil | 01-11 | November 01

November 01 Today Special | November 01 What Happened Today In History. November 01 Today Whose Birthday (born) | November-01st Important Famous Deaths In History On This Day 01/11 | Today Events In History November 01st | Today Important Incident In History | கார்த்திகை 01 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 01-11 | கார்த்திகை மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 01.11 Varalatril Indru Nadanthathu Enna| November 01 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/11 | Famous People Born Today 01.11 | Famous People died Today 01-11.

Today Special in Tamil 01-11
Today Events in Tamil 01-11
Famous People Born Today 01-11
Famous People died Today 01-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 01-11 | November 01

புனிதர் அனைவர் பெருவிழாவாக‌ கொண்டாடப்படுகிறது. (கத்தோலிக்க திருச்சபை)
மாசில்லா குழந்தைகள் படுகொலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மெக்சிக்கோ, எயிட்டி)
புரட்சி நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அல்சீரியா)
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அன்டிகுவா பர்புடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1981)
கர்நாடக மாநில நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கருநாடகம்)
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அமெரிக்க கன்னித் தீவுகள்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 01-11 | November 01

1009ல் பர்பர் படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன.
1179ல் இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1503ல் இரண்டாம் யூலியசு திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
1512ல் மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.
1520ல் தென் அமெரிக்காவில் மகெல்லன் நீரிணை மகெலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
1570ல் டச்சுக் கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர்.
1604ல் சேக்சுபியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1611ல் சேக்சுபியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1612ல் போலந்துப் படைகள் மாஸ்கோ, கித்தாய்-கோரத் நகரில் இருந்து உருசியப் படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.
1688ல் மாண்புமிகு புரட்சி: இரண்டாம் யேம்சிடம் இருந்து பிரித்தானியாவின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூன்றாம் வில்லியம் இரண்டாவது தடவையாக நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டான்.
1755ல் போர்த்துகல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1765ல் பிரித்தானிய நாடாளுமன்றம் வட அமெரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு 13 குடியேற்ற நாடுகளில் முத்திரை வரியை அறிமுகப்படுத்தியது.
1800ல் வெள்ளை மாளிகையில் குடியேறிய முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் என்ற பெருமையை ஜான் ஆடம்ஸ் பெற்றார்.
1805ல் நெப்போலியன் பொனபார்ட் ஆத்திரியாவை முற்றுகையிட்டான்.
1814ல் நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் பிரான்சு தோல்வியைத் தொடர்ந்து ஐரோப்பாவின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு வியென்னா காங்கிரஸ் கூடியது.
1864ல் இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் மசூலிப்பட்டணத்தில் இடம்பெற்ற சூறாவளியினல் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1876ல் நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.
1894ல் மூன்றாம் அலெக்சாந்தர் இறந்ததை அடுத்து, அவரது மகன் இரண்டாம் நிக்கலாசு உருசியாவின் கடைசிப் பேரரசராக முடிசூடினார்.
1897ல் அமெரிக்கக் காங்கிரசு நூலகம் முதற்தடவையாக பொது மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
1904ல் கொழும்பிலிருந்தான இலங்கையின் வடக்குத் தொடருந்துப் பாதை அநுராதபுரம் வரை அமைக்கப்பட்டு சேவை ஆரம்பமானது.
1911ல் இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன. இத்தாலிய விமானம் லிபியா மீது குண்டுகளை வீசியது.
1914ல் முதலாம் உலகப் போர்: சிலியில் செருமனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.
1918ல் நியூயோர்க் நகரின் புரூக்ளினில் இடம்பெற்ற விரைவுப் போக்குவரத்து விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.
1918ல் மேற்கு உக்ரைன் ஆத்திரியா-அங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.
1922ல் உதுமானியப் பேரரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தான்.
1928ல் துருக்கிய மொழி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரபு எழுத்துமுறை இலத்தீன் எழுத்துகளாக மாற்றப்பட்டன.
1937ல் அசர்பைசானில் இசுத்தாலினியர்கள் இலூதரனிய சமூகத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களைப் படுகொலை செய்தனர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை சொலமன் தீவுகளில் தரையிறங்கியது.
1948ல் சீனாவின் தெற்கு மஞ்சூரியாவில் சீன சரக்குக் கப்பல் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் உயிரிழந்தனர்.
1950ல் புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் அமெரிக்கத் தலைவர் ஹரி டுரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1951ல் நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் 6,500 அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
1952ல் அமெரிக்கா ஐவி மைக் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
1954ல் புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1955ல் வியட்நாம் போர் ஆரம்பமானது.
1955ல் கொலராடோவில் விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
1956ல் அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரி நடுநிலைமையை அறிவித்து வார்சா உடன்பாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தது. சோவியத் இராணுவம் அங்கேரியினுள் மீண்டும் உட்புகுந்தது.
1956ல் இந்தியாவில் கேரளம், ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமரி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மதராஸ் மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.
1957ல் அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மெக்கினாக் பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1963ல் புவேர்ட்டோ ரிக்கோ, அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் உலகின் மிகப்பெரும் வானொலி அதிர்வெண் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.
1970ல் பிரான்சில் நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் உயிரிழந்தனர்.
1979ல் பொலிவியாவில், இராணுவத் தளபதி அல்பெர்ட்டோ நாத்துசு அரசுக்கு எதிரான இராணுவப் புரட்சியை நடத்தினார்.
1973ல் மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்டது.
1981ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
1984ல் இந்திராகாந்தி படுகொலையை அடுத்து, இந்தியாவில் சீக்கியருக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன.
1993ல் ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1999ல் ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.
2000ல் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
2006ல் பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.
2012ல் சவூதித் தலைநகர் ரியாதில் எண்ணெய்த் தாங்கி ஒன்று வெடித்ததில் 26 பேர் உயிரிழந்தனர், 135 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 01-11 | November 01

1762ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான‌ ஸ்பென்சர் பேர்சிவல் பிறந்த நாள். (இறப்பு-1812)
1858ல் உருசிய வானியலாளரான‌ உலூத்விக் சுத்ரூவ பிறந்த நாள். (இறப்பு-1920)
1871ல் அமெரிக்க எழுத்தாளரான‌ ஸ்டீபன் கிரேன் பிறந்த நாள். (இறப்பு-1900)
1916ல் தமிழக அரசியல்வாதியான‌ மோகன் குமாரமங்கலம் பிறந்த நாள். (இறப்பு-1973)
1919ல் ஆங்கிலோ-ஆத்திரியக் கணிதவியலாளரும் அண்டவியலாளருமான‌ எர்மன் போண்டி பிறந்த நாள். (இறப்பு-2005)
1927ல் அமெரிக்க நூலாசிரியரும் கல்வியாளரும் அரசியல் ஆய்வாளருமான‌ லாயிட் ருடால்ப் பிறந்த நாள். (இறப்பு-2016)
1935ல் பாலத்தீன-அமெரிக்க எழுத்தாளரும் கல்வியாளருமான எட்வர்டு செயித் பிறந்த நாள். (இறப்பு-2003)
1937ல் புதுச்சேரி எழுத்தாளரான‌ கி. இராகவசாமி பிறந்த நாள்.
1945ல் இந்திய எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான‌ நரேந்திர தபோல்கர் பிறந்த நாள். (இறப்பு-2013)
1960ல் அமெரிக்கத் தொழிலதிபரான‌ டிம் குக் பிறந்த நாள்.
1963ல் இந்தியத் தொழிலதிபரான‌ நீத்தா அம்பானி பிறந்த நாள்.
1970ல் விடுதலைப் புலிப் போராளியான‌ கப்டன் மயூரன் பிறந்த நாள். (இறப்பு-1993)
1973ல் இந்திய நடிகையான‌ ஐசுவரியா ராய் பிறந்த நாள்.
1974ல் இந்தியத் துடுப்பாளரான‌ வி. வி. எஸ். லக்சுமண் பிறந்த நாள்.
1978ல் இந்திய நடிகையான‌ மஞ்சு வாரியர் பிறந்த நாள்.
1986ல் அமெரிக்க நடிகரான‌ பென் பாக்ட்லெ பிறந்த நாள்.
1987ல் இந்திய நடிகையான‌ இலியானா டி குரூசு பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 01-11 | November 01

1675ல் 9வது சீக்கிய குருவான‌ குரு தேக் பகதூர் இறப்பு நாள். (பிறப்பு-1621)
1700ல் எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு இறப்பு நாள். (பிறப்பு-1661)
1750ல் இலங்கை டச்சு ஆளுநரான‌ கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் இறப்பு நாள். (பிறப்பு-1705)
1894ல் உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1845)
1955ல் அமெரிக்க எழுத்தாளரான‌ டேல் கார்னெகி இறப்பு நாள். (பிறப்பு-1888)
1959ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடகருமான‌ தியாகராஜ பாகவதர் இறப்பு நாள். (பிறப்பு-1910)
1972ல் அமெரிக்கக் கவிஞரும் திறனாய்வாளருமான‌ எஸ்ரா பவுண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1885)
1980ல் கேரள அரசியல்வாதியும் எழுத்தாளருமான‌ கே. ஏ. தாமோதர மேனன் இறப்பு நாள். (பிறப்பு-1906)
1996ல் இலங்கையின் 1வது அரசுத்தலைவரான‌ ஜே. ஆர். ஜெயவர்தனா இறப்பு நாள். (பிறப்பு-1906)
2015ல் ஈழத்துத் தமிழறிஞரும் பேராசிரியருமான ஆ. வேலுப்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1936)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleOctober 31 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 31
Next articleஇன்றைய ராசி பலன் 26.09.2022 Today Rasi Palan 26-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!