March 31 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 31

0

Today Special Historical Events In Tamil | 31-03 | March 31

March 31 Today Special | March 31 What Happened Today In History. March 31 Today Whose Birthday (born) | March-31th Important Famous Deaths In History On This Day 31/03 | Today Events In History March 31th | Today Important Incident In History | பங்குனி 31 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 31-03 | பங்குனி மாதம் 31ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 31.03 Varalatril Indru Nadanthathu Enna| March 31 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 31/03 | Famous People Born Today 31.03 | Famous People died Today 31-03.

Today Special in Tamil 31-03
Today Events in Tamil 31-03
Famous People Born Today 31-03
Famous People died Today 31-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 31-03 | March 31

இனவழிப்பு நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அசர்பைஜான்)
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மால்ட்டா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 31-03 | March 31

307ல் உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார்.
627ல் அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார்.
1492ல் எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
1774ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் துறைமுகத்தை மூடுமாறு பிரித்தானியா உத்தரவிட்டது.
1822ல் கிரேக்கத் தீவான கியோசில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்க அங்குள்ள மக்களை உதுமானிய இராணுவம் படுகொலை செய்தது.
1866ல் சிலியின் வல்பரைசோ துறைமுகம் எசுப்பானியக் கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1885ல் இலங்கையில் தமிழ், சிங்கள, இசுலாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டன.
1889ல் ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1899ல் முதலாவது பிலிப்பீன் குடியரசின் தலைநகர் மாலோலோசு அமெரிக்கப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1909ல் பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது.
1917ல் ஐக்கிய அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1918ல் ஏறத்தாழ 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.
1918ல் ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1930ல் திரைப்படங்களில் பாலியல், குற்றங்கள், சமயம், வன்முறை நிகழ்வுகளைக் காண்பிப்பதற்கான குறியீடுகள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
1931ல் நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1931ல் அமெரிக்காவின் டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599 கேன்சஸ் மாநிலத்தில் விபத்துக்குளாகியதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தீவை சப்பான் பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனி வானோடி ஒருவர் செருமனியில் இருந்து வெளியேறி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 என்ற உலகின் முதலாவது ஜெட் போர் விமானத்தை அமெரிக்காவுக்குக் கையளித்தார்.
1949ல் நியூபவுன்லாந்து கனடியக் கூட்டமைப்பில் 10வது மாநிலமாக இணைந்தது.
1951ல் அமெரிக்கவின் யூனிவாக் 1 என்ற முதலாவது வணிகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
1959ல் திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.
1964ல் பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு காஸ்டெலோ பிராங்கோ தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1966ல் சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970ல் 12 ஆண்டுகள் விண்வெளியில் களித்த எக்ஸ்புளோரர் 1 விண்கலம் புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1990ல் இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
1991ல் ஜோர்ஜியாவில் 99 விழுக்காடு வாக்காளர்கள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
1995ல் உருமேனியாவில் ஏ310 வானூர்தி வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 60 பேரும் உயிரிழந்தனர்.
2004ல் ஈராக் போர்: ஈராக்கின் பலூஜா நகரில் நான்கு அமெரிக்க தனியார் போர்ப்படையினர் கொல்லப்பட்டனர்.
2007ல் முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 31-03 | March 31

1504ல் சீக்கிய குருவான‌ குரு அங்கது தேவ் பிறந்த நாள். (இறப்பு-1552)
1596ல் பிரான்சியக் கணிதவியலாளரும் மெய்யியலாளருமான‌ ரெனே டேக்கார்ட் பிறந்த நாள். (இறப்பு-1650)
1685ல் செருமானிய இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான‌ யோகான் செபாஸ்தியன் பாக் பிறந்த நாள். (இறப்பு-1750)
1732ல் ஆத்திரிய இசையமைப்பாளரான‌ ஜோசப் ஹேடன் பிறந்த நாள். (இறப்பு-1809)
1865ல் இந்திய மருத்துவரான‌ ஆனந்தி கோபால் ஜோஷி பிறந்த நாள். (இறப்பு-1887)
1884ல் டச்சு-அமெரிக்க வானியலாளரான‌ அதிரியான் வான் மானன் பிறந்த நாள். (இறப்பு-1946)
1890ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-ஆங்கிலேய இயற்பியலாளரான‌ வில்லியம் லாரன்ஸ் பிராக் பிறந்த நாள். (இறப்பு-1971)
1898ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ சா. ஜே. வே. செல்வநாயகம் பிறந்த நாள். (இறப்பு-1977)
1908ல் அமெரிக்க வானியலாளரான‌ பிலிப் சைல்ட்சு கீனான் பிறந்த நாள். (இறப்பு-2000)
1912ல் இலங்கை அரசியல்வாதியான‌ ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர் பிறந்த நாள்.
1914ல் நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞரான‌ ஒக்டாவியோ பாஸ் பிறந்த நாள். (இறப்பு-1998)
1928ல் தமிழக எழுத்தாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான‌ இராம. அரங்கண்ணல் பிறந்த நாள். (இறப்பு-1999)
1934ல் மலையாள கவிஞரான‌ கமலா தாஸ் பிறந்த நாள். (இறப்பு-2009)
1938ல் கேரளத்தின் 22வது ஆளுநரான‌ சீலா தீக்‌சித் பிறந்த நாள். (இறப்பு-2019)
1948ல் அமெரிக்காவின் 45வது துணை அரசுத்தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான‌ ஆல் கோர் பிறந்த நாள்.
1950ல் இந்தியக் கவிஞரான‌ ஹல்தர் நாக் பிறந்த நாள்.
1962ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ ராம்கி பிறந்த நாள்.
1983ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாளரான‌ அசீம் ஆம்லா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 31-03 | March 31

1631ல் ஆங்கிலேய வழக்கறிஞரும் கவிஞருமான‌ ஜான் டன் இறப்பு நாள். (பிறப்பு-1572)
1751ல் வேல்சு இளவரசரான‌ பிரெடரிக் இறப்பு நாள். (பிறப்பு-1707)
1861ல் ஈழத் தமிழ் எழுத்தாளரும் ஓவியரும் மதப் போதகருமான‌ என்றி மார்ட்டின் இறப்பு நாள்.
1917ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளரான‌ எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் இறப்பு நாள். (பிறப்பு-1854)
1945ல் நோபல் பரிசு பெற்ற செருமனிய வேதியியலாளரான‌ ஹான்ஸ் பிஷ்ஷர் இறப்பு நாள். (பிறப்பு-1881)
1965ல் தமிழகத் தமிழறிஞரான‌ தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1972ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ மீனாகுமாரி இறப்பு நாள். (பிறப்பு-1932)
1980ல் அமெரிக்க தடகள வீரரான‌ ஜெசி ஓவென்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1913)
1981ல் இலங்கை அரசியல்வாதியான‌ சி. கதிரவேலுப்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1924)
1995ல் அமெரிக்கப் பாடகியான‌ செலெனா இறப்பு நாள். (பிறப்பு-1971)
1997ல் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ இலைமன் சுட்டிராங் சுபிட்சர் இறப்பு நாள். (பிறப்பு-1914)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 30
Next articleஇன்றைய ராசிபலன் 20.10.2022 Today Rasi Palan 20-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!