March 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 22

0

Today Special Historical Events In Tamil | 22-03 March 22

March 22 Today Special | March 22 What Happened Today In History. March 22 Today Whose Birthday (born) | March-22th Important Famous Deaths In History On This Day 22/03 | Today Events In History March-22th | Today Important Incident In History | பங்குனி 22 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 22-03 | பங்குனி மாதம் 22ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 22.03 Varalatril Indru Nadanthathu Enna.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 22-03

  • உலக நீர் நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 22-03 March 22

  • 238ல் உரோமைப் பேரரசர்களாக முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் அறிவிக்கப்பட்டனர்.
  • 1622ல் அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
  • 1739ல் மயிலாசனத்தின் நகைகளை நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி கைப்பற்றினான்.
  • 1765ல் அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 1784ல் மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
  • 1829ல் மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன கிரேக்கத்துக்கான எல்லைகளை வரையறுத்தன.
  • 1867ல் இலங்கை தொடருந்து போக்குவரத்து வரலாற்றில் முதல் தடவையாக தொடருந்து இழுபொறி இலங்கையின் உயர் புள்ளிகளில் ஒன்றான கடுகண்ணாவையை அடைந்தது.
  • 1872ல் அமெரிக்காவின் இலினொய் மாநிலம் பணிகளில் பாலினச் சமனிலை பேணப்படவேண்டும் என சட்டமியற்றியது.
  • 1873ல் புவேர்ட்டோ ரிக்கோவின் எசுப்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.
  • 1916ல் சீனாவின் கடைசிப் பேரரசர் யுவான் சிக்காய் முடிதுறந்ததுடன் சீனக் குடியரசு உருவானது.
  • 1920ல் நகர்னோ-கரபாக் வாழ் ஆர்மீனியர்களை அசெரி, துருக்கி இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
  • 1939ல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
  • 1943ல் இரண்டாம் உலகப் போரில் பெலருசின் காத்தின் கிராம மக்கள் அனைவரும் நாட்சிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
  • 1945ல் அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
  • 1960ல் ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் சீரொளிக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
  • 1965ல் இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
  • 1972ல் கருத்தடைப் பொருட்களை மணமாகாதோர் வைத்திருப்பதற்கு உரிமை உண்டென ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 1982ல் நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
  • 1992ல் அல்பேனியாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சியுற்றதுடன் அல்பேனிய சனநாயகக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது.
  • 1992ல் யூஎஸ்ஏர் 405 விமானம் நியூரோர்க்கின் லாகோர்தியாவில் இருந்து கிளம்பி சில நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
  • 1995ல் சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
  • 1997ல் ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.
  • 2004ல் பாலத்தீனத்தின் சுன்னி இசுலாமிய அமாசு இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அகமது யாசின் இசுரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  • 2006ல் பக்தாதில் 118 நாட்களாக பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கிறித்தவ அமைதிகாக்கும் அணியைச் சேர்ந்த மூவர் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டனர்.
  • 2013ல் தாய்லாந்தில் பர்மிய அகதி முகாம் ஒன்று தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்ததுடன் 200 பேர் காயமடைந்தனர்.
  • 2016ல் பிரசெல்சு வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2017ல் இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 22-03 March 22

  • 1394ல் பாரசீக வானியலாளரும் கணிதவியலாளருமான உலுக் பெக் பிறந்த நாள் (இறப்பு 1449)
  • 1799ல் செருமானிய வானியலாளரான பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர் பிறந்த நாள் (இறப்பு 1879)
  • 1868ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் பிறந்த நாள் (இறப்பு 1953)
  • 1869ல் பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவரான எமிலியோ அகுயினால்டோ பிறந்த நாள் (இறப்பு 1964)
  • 1873ல் இத்தாலிய-அர்கெந்தீன மருத்துவயும் பெண்ணியவாதியுமான‌ யூலியெத்தா லாந்தேரி பிறந்த நாள் (இறப்பு 1932)
  • 1877ல் தமிழகத் தொழிலதிபரான தி. வே. சுந்தரம் பிறந்த நாள் (இறப்பு 1955)
  • 1894ல் இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளரான சூரியா சென் பிறந்த நாள் (இறப்பு 1934)
  • 1909ல் இசுரேலிய இயற்பியலாளரான நேதன் ரோசென் பிறந்த நாள் (இறப்பு 1995)
  • 1938ல் இலங்கை எழுத்தாளரும் பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான‌ கோவை மகேசன் பிறந்த நாள் (இறப்பு 1992)
  • 1942ல் தென்னிந்திய நடிகையான ஷீலா பிறந்த நாள்
  • 1955ல் தமிழக அரசியல்வாதியான சொ. கருப்பசாமி பிறந்த நாள் (இறப்பு 2011)
  • 1964ல் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் செயற்பாட்டாளர் உ. சகாயம் பிறந்த நாள்
  • 1976ல் அமெரிக்க நடிகையான ரீஸ் விதர்ஸ்பூன் பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 22-03 March 22

  • 1627ல் யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநரான பிலிப்பே டி ஒலிவேரா இறப்பு நாள்
  • 1832ல் செருமானிய புதின எழுத்தாளரான யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா இறப்பு நாள் (பிறப்பு 1749)
  • 1896ல் ஆங்கிலேய அரசியல்வாதியான தோமஸ் ஹியூக்ஸ் இறப்பு நாள் (பிறப்பு 1822)
  • 1952ல் இலங்கையின் 1வது பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா இறப்பு நாள் (பிறப்பு 1883)
  • 1977ல் இந்தியக் கல்வியலாளரும் அரசியல்வாதியுமான‌ ஏ. கே. கோபாலன் இறப்பு நாள் (பிறப்பு 1904)
  • 2004ல் பாலத்தீனத் தலைவரான அகமது யாசின் இறப்பு நாள் (பிறப்பு 1937)
  • 2005ல் தமிழ்த் திரைப்பட நடிகரான ஜெமினி கணேசன் இறப்பு நாள் (பிறப்பு 1920)
  • 2007ல் இந்தியத் தடகள விளையாட்டு வீரரான பார்துமான் சிங் பிரார் இறப்பு நாள் (பிறப்பு 1927)
  • 2013ல் நைஜீரிய எழுத்தாளரும் கவிஞருமான‌ சினுவா அச்சிபே இறப்பு நாள் (பிறப்பு 1930)
  • 2016ல் கனடிய அரசியல்வாதியான ராப் ஃபோர்ட் இறப்பு நாள் (பிறப்பு 1969)
  • 2020ல் தமிழகத் திரைப்பட நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரும் கதாசிரியருமான‌ விசு இறப்பு நாள் (பிறப்பு 1945)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 21
Next articleMarch 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 23