March 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 23

0

Today Special Historical Events In Tamil | 23-03 March 23

March 23 Today Special | March 23 What Happened Today In History. March 23 Today Whose Birthday (born) | March-23th Important Famous Deaths In History On This Day 23/03 | Today Events In History March-23th | Today Important Incident In History | பங்குனி 23 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 23-03 | பங்குனி மாதம் 23ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 23.03 Varalatril Indru Nadanthathu Enna| March 23 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today March 23 | Famous People Born Today 23/03 | Famous People died Today 23-03.

  • Today Special in Tamil 23-03
  • Today Events in Tamil 23-03
  • Famous People Born Today 23-03
  • Famous People died Today 23-03
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 23-03 | March 23

    • பாகிஸ்த்தானின் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது.
    • உலக வானிலை நாள் கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 23-03 | March 23

    • 1400ல் 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் வியட்நாமின் திரான் வம்ச அரசு முடிவுக்கு வந்தது.
    • 1540ல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் வால்த்தம் அபே திருச்சபை சரணடைந்தது.
    • 1568ல் சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது.
    • 1801ல் உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வா.ளொ.ன்.றி.னா.ல் வெ.ட்.ட.ப்.ப.ட்.டு க.ழு.த்.து நெ.ரி.க்.க.ப்.ப.ட்.டு ப.டு.கொ.லை செய்யப்பட்டார்.
    • 1816ல் அமெரிக்க மதப் பரப்புனர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.
    • 1821ல் விடுதலைக்கான கிரேக்கப் போரில் கலமட்டா நகரம் வீழ்ந்தது.
    • 1848ல் நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிற‌ங்கினர்.
    • 1857ல் எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூஜோர்க் நகரில் அமைத்தார்.
    • 1879ல் பசிபிக் போரில் சிலிக்கும் பொலிவியா-பெரு கூட்டுப் படைகளுக்கும் இடையே முதலாவது போர் நடைபெற்ற‌து.
    • 1885ல் சீன-பிரெஞ்சுப் போரில் வடக்கு வியட்நாம் உங் கோவா நகரில் நடந்த சமரில் சீனா வெற்றி பெற்றது.
    • 1889ல் மிர்சா குலாம் அகமது அகமதியா என்ற முஸ்லிம் சமூகத்தை இந்தியாவில் அமைத்தார்.
    • 1901ல் முதலாவது பிலிப்பீன் குடியரசின் அரசுத்தலைவர் எமிலியோ அகுயினால்டோ இராணுவத்தினரால் கை.து செய்யப்பட்டார்.
    • 1918ல் முதலாம் உலகப் போரில் செருமனியின் மூன்றாம் நாள் தாக்குதலில் பிரித்தானியாவின் 10-வது அரச மேற்கு கெண்ட் இராணுவப் பிரிவில் பெரும்பாலானோர் போர்க் கை.தி.களாகப் பிடிபட்டனர்.
    • 1919ல் தனது பாசிச அரசியல் இயக்கத்தை இத்தாலியின் மிலன் நகரில் பெனிட்டோ முசோலினி ஆரம்பித்தார்.
    • 1931ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொ.லை செய்த கு.ற்.ற.த்.தி.ற்.கா.க.த் தூ.க்.கி.லி.ட.ப்.ப.ட்.ட.ன.ர்.
    • 1933ல் இட்லர் செருமனியின் சர்வாதிகாரியானது நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.
    • 1939ல் அங்கேரிய வான் படைகள் சிலோவாக் வான் படையினரைத் தாக்கியதில் 13 பேர் கொ.ல்.ல..ப்.ப.ட்.ட.து.ட.ன் சிலோவாக்-அங்கேரியப் போர் ஆரம்பமானது.
    • 1940ல் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை அகில இந்திய முஸ்லிம் லீக்கின் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
    • 1942ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியப் பெருங்கடலில் அந்தமான் தீவுகளை ஜ‌ப்பானியர் கைப்பற்றினர்.
    • 1956ல் பாக்கிஸ்தான் உலகின் முதலாவது இஸ்லாமியக் குடியரசாகியது.
    • 1965ல் நாசாவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
    • 1966ல் பொலிவிய ராணுவப்பிரிவை தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக தோற்கடித்தது.
    • 1978ல் ஐ.நா அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகள் லெபனானில் ஆரம்பமாகியது.
    • 1980ல் எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சல்வடோர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்லுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
    • 1982ல் குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.
    • 1991ல் சியேரா லியோனியில் 11-ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
    • 1994ல் ஐக்கிய அமெரிக்க வான்படையின் எப்-16 வானூர்தி சி-130 வானூர்தியுடன் மோதி தரையில் வீழ்ந்ததில் தரையில் 24 அமெரிக்க இராணுவ வீரர்கள் உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர்.
    • 1994ல் சைபீரியாவில் உருசியாவின் ஏரோபுலொட் 593 விமானம் வீழ்ந்ததில் 75 பேர் உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர்.
    • 1996ல் சீனக் குடியரசில் அரசுத்தலைவருக்கான முதலாவது நேரடித் தேர்தல் இடம்பெற்றதுடன் லீ டெங்-உய் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 1998ல் டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
    • 1999ல் பரகுவையின் துணை அரசுத்தலைவர் லூயிசு மரியா அகானா கொல்லப்பட்டார்.
    • 2001ல் உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
    • 2008ல் இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐதராபாதில் திறக்கப்பட்டது.
    • 2018ல் பெருவின் அரசுத்தலைவர் பெத்ரோ குக்சீன்சுக்கி பதவியில் இருந்து விலகினார்.
    • 2019ல் நான்கு ஆண்டுகள் சண்டையின் பின்னர் அமெரிக்க-ஆதரவு சிரிய சனநாயகப் படைகள் இசுலாமிய அரசு மீதான வெற்றியை அறிவித்தது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 23-03 | March 23

    • 1614ல் முகலாய இளவரசியான சகானாரா பேகம் பிறந்த நாள் (இறப்பு 1681)
    • 1749ல் பிரான்சியக் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ பியர் சிமோன் இலப்லாசு பிறந்த நாள் (இறப்பு 1827)
    • 1858ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான‌ லூட்விக் குயிட் பிறந்த நாள் (இறப்பு 1941)
    • 1869ல் பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவரான எமிலியோ அகுயினால்டோ பிறந்த நாள் (இறப்பு 1964)
    • 1882ல் யூத செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ எம்மி நோய்தர் பிறந்த நாள் (இறப்பு 1935)
    • 1887ல் எசுப்பானிய ஓவியரும் சிற்பியுமான‌ ஜுவான் கிரிஸ் பிறந்த நாள் (இறப்பு 1927)
    • 1893ல் இந்தியப் பொறியியலாளரும் தொழிலதிபருமான‌ கோபால்சாமி துரைசாமி நாயுடு பிறந்த நாள் (இறப்பு 1974)
    • 1907ல் நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளரும் கல்வியாளருமான‌ டேனியல் போவே பிறந்த நாள் (இறப்பு 1992)
    • 1908ல் யாழ்ப்பாண மருத்துவரும் அரசியல்வாதியுமான‌ ச. அ. தர்மலிங்கம் பிறந்த நாள்
    • 1910ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ ராம் மனோகர் லோகியா பிறந்த நாள் (இறப்பு 1967)
    • 1910ல் சப்பானியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ அகிரா குரோசாவா பிறந்த நாள் (இறப்பு 1998)
    • 1912ல் செருமானிய இயற்பியலாளரும் ஏவூர்திப் பொறியியலாளருமான‌ வெர்னர் வான் பிரவுன் பிறந்த நாள் (இறப்பு 1977)
    • 1916ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் பிறந்த நாள் (இறப்பு 2008)
    • 1921ல் தமிழக எழுத்தாளரான லக்ஷ்மி பிறந்த நாள் (இறப்பு 1987 )
    • 1924ல் ஆங்கிலேயப் படிகவியலாளரான ஒல்கா கென்னார்ட் பிறந்த நாள்
    • 1924ல் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான பெட்டி நெசுமித் கிரகாம் பிறந்த நாள் (இறப்பு 1980)
    • 1924ல் ஆங்கிலேயப் படிகவியலாளரான ஒல்கா கென்னார்ட் பிறந்த நாள்
    • 1929ல் ஆங்கிலேய ஓட்ட வீரரும் மருத்துவருமான‌ ரோஜர் பேனிஸ்டர் பிறந்த நாள்
    • 1937ல் அமெரிக்க மருத்துவரும் கல்வியாளருமான‌ ராபர்ட் கால்லோ பிறந்த நாள்
    • 1948ல் பாக்கித்தானியத் துடுப்பாளரான வசீம் பாரி பிறந்த நாள்
    • 1951ல் தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகரான செந்தில் பிறந்த நாள்
    • 1953ல் இந்திய விலங்கியலாளரும் தொழிலதிபருமான கிரன் மசும்தார் ஷா பிறந்த நாள்
    • 1976ல் இந்திய நடிகையும் அரசியல்வாதியுமான‌ இசுமிருதி இரானி பிறந்த நாள்
    • 1979ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரான விஜய் யேசுதாஸ் பிறந்த நாள்
    • 1986ல் இந்திய நடிகையான கங்கனா ரனாத் பிறந்த நாள்

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 23-03 | March 23

    • 1555ல் திருத்தந்தையான மூன்றாம் ஜூலியுஸ் இறப்பு நாள் (பிறப்பு 1487)
    • 1801ல் உருசியப் பேரரசரான முதலாம் பவுல் இறப்பு நாள் (பிறப்பு 1754)
    • 1922ல் யாழ்ப்பாணப் புலவரான அ. குமாரசாமிப் புலவர் இறப்பு நாள் (பிறப்பு 1854)
    • 1924ல் தமிழக நாடக திரைப்பட நடிகரான‌ பி. வி. நரசிம்ம பாரதி இறப்பு நாள் (பிறப்பு 1978)
    • 1931ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ பகத் சிங் இறப்பு நாள் (பிறப்பு 1907)
    • 1931ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான சிவராம் ராஜகுரு இறப்பு நாள் (பிறப்பு 1908)
    • 1931ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான சுக்தேவ் தபார் இறப்பு நாள் (பிறப்பு 1907)
    • 1945ல் ஆங்கிலேய வானியலாளரான நேப்பியர் ஷா இறப்பு நாள் (பிறப்பு 1854)
    • 1953ல் இலாத்துவியப் படைத்தளபதியும் நிலக்கிடப்பியலாளருமான‌ ஆந்திரேயசு அவுசான்சு இறப்பு நாள் (பிறப்பு 1871)
    • 1960ல் குர்திய இறையியலாளரும் கல்வியாளருமான‌ சைத் நுர்சி இறப்பு நாள் (பிறப்பு 1878)
    • 1964ல் யாழ்ப்பாணச் சித்தராக யோக சுவாமிகள் இறப்பு நாள் (பிறப்பு 1872)
    • 1981ல் ஆங்கிலேய-நியூசிலாந்து வானியலாளரான பியேத்ரிசு தின்சுலே இறப்பு நாள் (பிறப்பு 1941)
    • 1992ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய பொருளியலாளரான பிரீட்ரிக் கையக் இறப்பு நாள் (பிறப்பு 1899)
    • 2000ல் இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான‌ ரொபின் தம்பு இறப்பு நாள் (பிறப்பு 1930)
    • 2000ல் இந்திய கத்தோலிக்க திருச்சபைக் கர்தினாலான ஆன்றணி படியற இறப்பு நாள் (பிறப்பு 1921)
    • 2011ல் அமெரிக்க-பிரித்தானிய நடிகையும் மனிதவுரிமையாளருமான‌ எலிசபெத் டெய்லர் இறப்பு நாள் (பிறப்பு 1932)
    • 2012ல் இலங்கை வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞருமான‌ இராஜேஸ்வரி சண்முகம் இறப்பு நாள் (பிறப்பு 1940)
    • 2015ல் சிங்கப்பூரின் 1வது பிரதமரான லீ குவான் யூ இறப்பு நாள் (பிறப்பு 1923)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleMarch 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 22
    Next articleஇன்றைய ராசி பலன் 22.03.2021 Today Rasi Palan 22-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!