March 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 21

0
173

Today Special Historical Events In Tamil | 21-03 March 21

March 21 Today Special | March 21 What Happened Today In History. March 21 Today Whose Birthday (born) | March-21th Important Famous Deaths In History On This Day 21/03 | Today Events In History March-21th | Today Important Incident In History | பங்குனி 21 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 21-03 | பங்குனி மாதம் 21ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 21.03 Varalatril Indru Nadanthathu Enna.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 21-03

  • போர்த்துகல் மற்றும் லெசோத்தோ நாட்டில் மர நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஆத்திரேலியாவில் இணக்க நாள் ஆத்திரேலியா கொண்டாடப்படுகிறது.
  • தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது.
  • 1990ல் தென்னாப்பிரிக்காவிடம் இருந்து நமீபியா விடுதலை பெற்ற‌ நாள் கொண்டாடப்படுகிறது.
  • பன்னாட்டு வன நாள் கொண்டாடப்படுகிறது.
  • பன்னாட்டு வண்ண நாள் கொண்டாடப்படுகிறது.
  • அரபு நாடுகளில் அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலகக் கவிதை நாள் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஈரானியப் புத்தாண்டு நாள் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக பொம்மலாட்ட நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 21-03 March 21

  • 630ல் கிறிஸ்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை உரோமைப் பேரரசர் எராக்கிளியசு எருசலேமிற்கு மீளக் கையளித்தார்.
  • 1152ல் பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது.
  • 1188ல் யப்பான் பேரரசராக அண்டோக்கு பதவியேற்றார்.
  • 1556ல் ஆக்சுபோர்டு நகரில் கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
  • 1788ல் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
  • 1800ல் உரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் நகரை விட்டு விரட்டப்பட்டதை அடுத்து வெனிசு நகரில் ஏழாம் பயசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
  • 1801ல் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் போர் இடம்பெற்றது.
  • 1844ல் பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாளாக ஆண்டுதோறும் கொள்ளப்படுவதுடன் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
  • 1871ல் செருமானியப் பேரரசின் முதலாவது அரசுத்தலைவராக ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் க்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1913ல் அமெரிக்காவின் ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் உயிரிழந்ததுடன் 20,000 வீடுகள் அழிந்தன.
  • 1917ல் டானிசு மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1919ல் அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டதுடன் உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.
  • 1921ல் போல்செவிக் கட்சி கம்யூனிசப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது.
  • 1925ல் மனிதக் கூர்ப்பு பற்றிய கல்வி அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் தடை செய்யப்பட்டது.
  • 1935ல் பாரசீக நாட்டை ஈரான் என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
  • 1937ல் புவேர்ட்டோ ரிக்கோவில் பொன்சு நகரில் அமெரிக்க ஆளுநரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1945ல் இரண்டாம் உலகப் போரில் பர்மாவின் மண்டலை நகரை பிரித்தானியப் படையினர் விடுவித்தனர்.
  • 1945ல் இரண்டாம் உலகப் போரில் பிரித்தானிய விமானங்கள் தென்மார்க்கின் கோபனாவன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1948ல் முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்த்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
  • 1960ல் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் இடம்பெற்றதுடன் சார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1965ல் நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது.
  • 1970ல் முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.
  • 1980ல் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் 1980 ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
  • 1984ல் மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
  • 1990ல்ல் 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.
  • 1999ல் வெப்ப வாயுக் கூண்டில் உலகை வலம் வந்து பெர்ட்ராண்ட் பிக்கார்டு பிறையன் யோன்சு ஆகியோர் சாதனை படைத்தனர்.
  • 2000ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இசுரேலுக்கான தனது முதலாவது இறைப்பயணத்தை மேற்கொண்டார்.
  • 2006ல் டுவிட்டர் சமூக ஊடகம் உருவாக்கப்பட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 21-03 March 21

  • 1685ல் செருமானிய இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான‌ யோகான் செபாஸ்தியன் பாக் பிறந்த நாள் (இறப்பு 1750)
  • 1768ல் பிரான்சிய கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ ஜோசப் ஃபூரியே பிறந்த நாள் (இறப்பு 1830)
  • 1807ல் தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவரான சைமன் காசிச்செட்டி பிறந்த நாள் (இறப்பு 1860)
  • 1866ல் அமெரிக்க வானியலாளரான அந்தோனியா மவுரி பிறந்த நாள் (இறப்பு 1952)
  • 1867ல் தமிழகத் தமிழறிஞரான பாண்டித்துரைத் தேவர் பிறந்த நாள் (இறப்பு 1911)
  • 1887ல் இந்திய அரசியல்வாதியான எம். என். ராய் பிறந்த நாள் (இறப்பு 1954)
  • 1915ல் இரண்டாம் சோல்பரிப் பிரபுவும் யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடருமான‌ ஜேம்ஸ் ராம்ஸ்போதம் பிறந்த நாள் (இறப்பு 2004)
  • 1916ல் இந்திய செனாய் இசைக்கலைஞரான பிசுமில்லா கான் பிறந்த நாள் (இறப்பு 2006)
  • 1923ல் தமிழகத் தொழிலதிபரும் மக்கள் சேவையாளருமான‌ பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பிறந்த நாள் (இறப்பு 2014)
  • 1923ல் இந்திய சமயத் தலைவரான நிர்மலா ஸ்ரீவஸ்தவா பிறந்த நாள் (இறப்பு 2011)
  • 1927ல் அமெரிக்க-செருமானிய வானியலாளரான ஆல்ட்டன் ஆர்ப் பிறந்த நாள் (இறப்பு 2013)
  • 1928ல் நேபாளத்தின் 23வது பிரதமரான சூரிய பகதூர் தாபா பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1930ல் இலங்கை எழுத்தாளரும் கவிஞரும் தமிழறிஞருமான‌ கா. செ. நடராசா பிறந்த நாள் (இறப்பு 2006)
  • 1936ல் சிங்களத் திரைப்பட நடிகரான காமினி பொன்சேகா பிறந்த நாள் (இறப்பு 2004)
  • 1939ல இந்திய செனாய் இசைக்கலைஞரான‌ அலி அகமது உசேன் கான் பிறந்த நாள் (இறப்பு 2016)
  • 1946ல் உவெல்சு-ஆங்கிலேய நடிகரான திமோதி டால்டன் பிறந்த நாள்
  • 1958ல் ஆங்கிலேய நடிகரான கேரி ஓல்ட்மன் பிறந்த நாள்
  • 1966ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ஷோபனா பிறந்த நாள்
  • 1978ல் இந்திய திரைப்பட நடிகையான ராணி முகர்ஜி பிறந்த நாள்
  • 1980ல் பிரேசில் காற்பந்து வீரரான ரொனால்டினோ பிறந்த நாள்
  • 1991ல் பிரான்சியக் காற்பந்து வீரரான அந்துவான் கிரீசுமன்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 21-03 March 21

  • 543ல் இத்தாலியப் புனிதரான நூர்சியாவின் பெனடிக்ட் இறப்பு நாள் (பிறப்பு 480)
  • 1556ல் ஆங்கிலேய பேராயரும் புனிதருமான‌ தாமஸ் கிரான்மர் இறப்பு நாள் (பிறப்பு 1489)
  • 1762ல் பிரெஞ்சு வானியலாளரும் மதகுருவுமான‌ நிகோலசு லூயிசு தெ லா கைல்லே இறப்பு நாள் (பிறப்பு 1713)
  • 1847ல் பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளரான‌ மேரி அன்னிங் இறப்பு நாள் (பிறப்பு 1799)
  • 1922ல் மலையாள எழுத்தாளரான ச. வே. இராமன் பிள்ளை இறப்பு நாள் (பிறப்பு 1858)
  • 1998ல் தமிழக மிருதங்கக் கலைஞரான இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி இறப்பு நாள் (பிறப்பு 1914)
  • 2008ல் ஈழத்துத் தமிழறிஞரும் கவிஞருமான க. சச்சிதானந்தன் இறப்பு நாள் (பிறப்பு 1921)
  • 2012ல் ஈழத்து எழுத்தாளரும் நாடக இயக்குனருமான‌ யாழூர் துரை இறப்பு நாள் (பிறப்பு 1946)
  • 2013ல் நைஜீரிய எழுத்தாளரான சின்னுவ அச்செபே இறப்பு நாள் (பிறப்பு 1930)
  • 2016ல் தமிழகப் பத்திரிகையாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன் இறப்பு நாள் (பிறப்பு 1928)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 21.03.2021 Today Rasi Palan 21-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleMarch 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 22