Today Special Historical Events In Tamil | 15-03 March 15
March 15 Today Special | March 15 What Happened Today In History. March 15 Today Whose Birthday (born) | March-15th Important Famous Deaths In History On This Day 15/03 | Today Events In History March-15th | Today Important Incident In History | பங்குனி 15 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 15-03 | பங்குனி மாதம் 15ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 15.03 Varalatril Indru Nadanthathu Enna.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 15-03
- புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா யப்பானில் கொண்டாடப்படுகிறது.
- காவல்துறையினரின் வன்செயல்களுக்கு எதிரான பன்னாட்டு நாள் கொண்டாடப்படுகிறது.
- 1948ன் அங்கேரியின் புரட்சி நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.
- உலக நுகர்வோர் உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது.
- உலக முஸ்லிம் கலாச்சார, அமைதி, கலந்துரையாடல், மற்றும் திரைப்பட நாள் கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 15-03 March 15
- கிமு 44ல் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோம செனட்டர்களால் உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
- 351ல் இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர் பட்டம் அளித்து உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான்.
- 933ல் பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
- 1493ல் அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியா திரும்பினார் கொலம்பசு.
- 1564ல் ஜிஸ்யா எனப்படும் தலைவரியை முகலாயப் பேரசர் அக்பர் நீக்கினார்.
- 1776ல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடான தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1802ல் இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.
- 1815ல் ஆஸ்திரியா மீது நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் போர் தொடுத்தான்.
- 1819ல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் நிறுவினார்.
- 1820ல் ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக மேய்ன் இணைந்தது.
- 1827ல் ரொறன்ரோ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- 1848ல் அங்கேரியில் புரட்சி வெடித்ததுடன் ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
- 1874ல் பிரான்சுக்கும் வியட்நாமிற்கும் இடையில் சாய்கோன் உடன்பாடு எட்டப்பட்டதுடன் கோச்சின்சீனா மீதான பிரான்சின் முழுமையான அரசுரிமை அங்கீகரிக்கப்பட்டது.
- 1877ல் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் ஆரம்பமானது.
- 1888ல் ஆங்கிலோ-திபெத்தியப் போர் ஆரம்பமானது.
- 1917ல் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்ததுடன் 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1921ல் உதுமானியப் பேரரசின் முன்னாள் பிரதமரும் ஆர்மீனிய இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான தலாத் பாசா பெர்லினில் ஆர்மீனியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1922ல் எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் புவாட் எகிப்தின் மன்னனானார்.
- 1931ல் நியூபவுன்லாந்து அருகே வைக்கிங்கு என்ற கப்பல் வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
- 1943ல் இரண்டாம் உலகப் போரில் நாட்சி செருமனியப் படையினர் உக்ரேனின் கார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.
- 1951ல் எண்ணெய் உற்பத்தி ஈரானில் தேசியமயமாக்கப்பட்டது.
- 1952ல் ரீயூனியன், சிலாவோசு நகரில் 24 மணி நேரத்தில் 1870 மிமீ மழைவீழ்ச்சி பதியப்பட்டதுடன் உலக சாதனையாகவும் அறிவிக்கப்பட்டது.
- 1961ல் பொதுநலவாய நாடுகளில் இருந்து தென்னாப்பிரிக்கா வெளியேறியது.
- 1970ல் ஜப்பானின் ஒசாக்கா நகரில் எக்ஸ்போ ’70 உலகக் கண்காட்சி ஆரம்பமானது.
- 1978ல் சோமாலியாவிற்கும் எத்தியோப்பியாவிற்குமிடையேயான போர் முடிவுக்கு வந்தது.
- 1985ல் உலகின் முதலாவது இணைய ஆள்களப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.
- 1986ல் நியூ வேர்ல்ட் என்ற உணவு விடுதி சிங்கப்பூரில் இடிந்து வீழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.
- 1990ல் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராக மிக்கைல் கொர்பச்சோவ் தெரிவானார்.
- 1991ல் பனிப்போரில் இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.
- 2004ல் அதி வேகமான பொருள் 90377 செட்னா சூரியக் குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2007ல் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
- 2008ல் ஆயுதக்கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் அல்பேனியாவில் 26 பேர் உயிரிழந்தனர்.
- 2011ல் சிரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 15-03 March 15
- 270ல் கிரேக்கக் கத்தோலிக்க ஆயரும் புனிதருமான நிக்கலசு பிறந்த நாள் (இறப்பு 343)
- 1767ல் ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவரான ஆன்ட்ரூ ஜாக்சன் பிறந்த நாள் (இறப்பு 1845)
- 1852ல் ஆங்கிலோ-ஐரிய நிலவுரிமையாளரும் நாடகாசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான அகஸ்டா லேடி கிரிகோரி பிறந்த நாள் (இறப்பு 1932)
- 1854ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவரான எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் பிறந்த நாள் (இறப்பு 1917)
- 1860ல் உருசிய-சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியலாளரான வால்டெமர் ஆஃப்கின் பிறந்த நாள் (இறப்பு 1930)
- 1914ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான எஸ். எம். சுப்பையா நாயுடு பிறந்த நாள் (இறப்பு 1979)
- 1915ல் ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையரான அழகு சுப்பிரமணியம் பிறந்த நாள் (இறப்பு 1973)
- 1919ல் இந்திய அரசியல்வாதியான பார்வதி கிருஷ்ணன் பிறந்த நாள் (இறப்பு 2014)
- 1929ல் தமிழக நாதசுவரக் கலைஞரான செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன் பிறந்த நாள் (இறப்பு 2013)
- 1930ல் நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளரான சொரேசு ஆல்ஃபியோரொவ் பிறந்த நாள் (இறப்பு 2019)
- 1930ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளரான மார்ட்டின் கார்ப்பிளசு பிறந்த நாள்
- 1932ல் அமெரிக்கக் விண்வெளிவீரரான ஆலன் பீன் பிறந்த நாள் (இறப்பு 2018)
- 1934ல் இந்திய அரசியல்வாதியான கன்சிராம் பிறந்த நாள் (இறப்பு 2006)
- 1934ல் ஈழத்து எழுத்தாளரான பத்மா சோமகாந்தன் பிறந்த நாள் (இறப்பு 2020)
- 1938ல் தமிழக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் நடிகரான தி. சு. சதாசிவம் பிறந்த நாள் (இறப்பு 2012)
- 1941ல் அமெரிக்கப் பாடகரும் இசைக்கலைஞருமான மைக் லவ் பிறந்த நாள்
- 1950ல் தமிழக அரசியல்வாதியான கே. வி. தங்கபாலு பிறந்த நாள்
- 1955ல் பாக்கித்தானியத் துடுப்பாளரான மோசின் கான் பிறந்த நாள்
- 1956ல் தமிழக ஓவியரும் திரைப்பட விமர்சகரும் எழுத்தாளருமான ஓவியர் ஜீவா பிறந்த நாள்
- 1959ல் பின்லாந்து இயக்குநர் ரென்னி ஹர்லின் பிறந்த நாள்
- 1975ல் பல்கேரிய சதுரங்க வீரரான வெசிலின் தோப்பலோவ் பிறந்த நாள்
- 1986ல் ஆத்திரேலிய நடிகரான ஜெய் கோர்ட்னி பிறந்த நாள்
- 1993ல் பிரித்தானிய நடிகையும் பாடகியுமான அலீயா பட் பிறந்த நாள்
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 15-03 March 15
- கிமு 44ல் உரோமக் குடியரசுத் தளபதியான யூலியசு சீசர் இறப்பு நாள் (பிறப்பு கிமு 100)
- 220ல் சீன கான் வம்ச மன்னரும் இராணுவ அதிகாரியுமான சாவோ சாவோ இறப்பு நாள் (பிறப்பு 155)
- 931ல் திருத்தந்தையான ஏழாம் ஸ்தேவான் இறப்பு நாள்
- 1206ல் கோரி பேரரசரான கோரி முகமது இறப்பு நாள் (பிறப்பு 1149)
- 1660ல் பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவரும் கத்தோலிக்கப் புனிதர் லுயீஸ் டி மரிலாக் பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவருமான கத்தோலிக்கப் புனிதர் இறப்பு நாள் (பிறப்பு 1591)
- 1897ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரான ஜேம்ஸ் சில்வெஸ்டர் இறப்பு நாள் (பிறப்பு 1814)
- 1937ல் அமெரிக்க எழுத்தாளரான எச். பி. லவ்கிராஃப்ட் இறப்பு நாள் (பிறப்பு 1890)
- 1939ல் இந்தித் திணிப்புக்கு எதிரான செயற்பாட்டாளரான தாலமுத்து இறப்பு நாள் (பிறப்பு 1915)
- 1962ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாலரான ஆர்தர் காம்ப்டன் இறப்பு நாள் (பிறப்பு 1892)
- 1983ல் ஆங்கிலேய எழுத்தாளரான ரெபெக்கா வெஸ்ட் இறப்பு நாள் (பிறப்பு 1892)
- 1991ல் மலையாளத் திரைப்பட இயக்குநரான அரவிந்தன் இறப்பு நாள் (பிறப்பு 1935)
- 2008ல் இந்திய விமான ஓட்டியான சரளா தாக்ரல் இறப்பு நாள் (பிறப்பு 1914)
- 2013ல் இந்திய மருந்தியலாளரும் தொழிலதிபருமான கள்ளம் அஞ்சி ரெட்டி இறப்பு நாள் (பிறப்பு 1940)
- 2015ல் இந்திய எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான நாராயண் தேசாய் இறப்பு நாள் (பிறப்பு 1924)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: