March 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 14

0

Today Special Historical Events In Tamil | 14-03 March 14

March 14 Today Special | March 14 What Happened Today In History. March 14 Today Whose Birthday (born) | March-14th Important Famous Deaths In History On This Day 14/03 | Today Events In History March-14th | Today Important Incident In History | பங்குனி 14 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 14-03 | பங்குனி மாதம் 14ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 14.03 Varalatril Indru Nadanthathu Enna.

March 14
March 14

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 14-03

  • சீக்கியத்தில் நானக்சாகி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
  • செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் எனும் தீவு நாட்டில் மாவீரர் நாள் கொண்டாடப்படுகிறது.
  • எசுத்தோனியாவின் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.
  • பை (π) என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடுவதற்காக‌ பை நாள் மற்றும் பை எண்ணளவு நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 14-03 March 14

  • 313ல் சியோங்னு ஆட்சியாளர் லியூ கொங்கினால் யின் பேரரசர் உவைடி கொல்லப்பட்டார்.
  • 1489ல் சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.
  • 1590ல் பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் பிரெஞ்சு சமயப் போர்களில் கத்தோலிக்க அணி வீரர்களை தோற்கடித்தன.
  • 1647ல் முப்பதாண்டுப் போரில் பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
  • 1674ல் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போரில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வாப்பென் வான் உரொட்டர்டாம் என்ற கப்பல் கைப்பற்றப்பட்டதுடன் 300 டச்சுக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
  • 1780ல் அமெரிக்கப் புரட்சிப் போரில் எசுப்பானியப் படைகள் அலபாமாவில் சார்லட் கோட்டையைக் கைப்பற்றின.
  • 1794ல் அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
  • 1898ல் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாக மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் தெரிவு செய்யப்பட்டார்.
  • 1900ல் தங்கத் தகுதரச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு அமெரிக்க டாலர் நாணயம் தங்கத்தின் தரத்தில் வைக்கப்பட்டது.
  • 1903ல் பனாமா கால்வாயை அமைக்கும் பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் இவ்வுடன்படிக்கையை கொலம்பிய மேலவை பின்னர் நிராகரித்தது.
  • 1926ல் கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் காயமடைந்தனர்.
  • 1931ல் இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.
  • 1939ல் சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.
  • 1942ல் அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
  • 1943ல் இரண்டாம் உலகப் போரின் போது கிராக்கோவ் வதைமுகாம் மூடப்பட்டது.
  • 1951ல் ஐ.நா படைகள் கொரியப் போரில் இரண்டாவது முறையாக சியோல் நகரைக் கைப்பற்றியது.
  • 1961ல் கலிபோர்னியாவில் யூபா நகரில் இரண்டு முறிந்த அம்பு என்ற அணுவாயுதங்களைக் கொண்டு சென்ற அமெரிக்க வான்படையின் வானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • 1978ல் தெற்கு லெபனானை இசுரேலிய பாதுகாப்புப் படைகள் ஆக்கிரமித்துக் கைப்பற்றின.
  • 1979ல் சீனாவில் பெய்ஜிங் நகரில் தொழிற்சாலை ஒன்றின் மீது விமானம் ஒன்று வீழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்ததுடன் 200 பேர் காயமடைந்தனர்.
  • 1980ல் வார்சாவாக்கு அருகில் போலந்தில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.
  • 1982ல் இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரசு தலைமையகம் மீது தென்னாப்பிரிக்க அரசு குண்டு வீசியது.
  • 1994ல் லினக்சு கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.
  • 1995ல் உருசிய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாக சென்றார்.
  • 1998ல் தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.
  • 2006ல் சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
  • 2008ல் திபெத்தின் லாசா நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.
  • 2019ல் மொசாம்பிக்கை சூறாவளி தாக்கியதில் 1000 பேர் வரை உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 14-03 March 14

  • 1835ல் இத்தாலிய வானியலாளரும் வரலாற்றாளருமான ஜியோவன்னி ஸ்கையாபரெலி பிறந்த நாள் (இறப்பு 1910)
  • 1837ல் நவீன கோலாலம்பூரை நிறுவியவரான யாப் ஆ லோய் பிறந்த நாள் (இறப்பு 1885)
  • 1879ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளரும் கல்வியாளருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த நாள் (இறப்பு 1955)
  • 1895ல் இந்திய அரசியல்வாதியான குருமுக் நிகால் சிங் பிறந்த நாள்
  • 1908ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான சி. எக்ஸ். மார்ட்டின் பிறந்த நாள்
  • 1918ல் தென்னிந்திய இசையமைப்பாளரான கே. வி. மகாதேவன் பிறந்த நாள் (இறப்பு 2001),
  • 1933ல் ஆங்கிலேய நடிகரான மைக்கேல் கெய்ன் பிறந்த நாள்
  • 1948ல் அமெரிக்க நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ பில்லி கிறிசுடல் பிறந்த நாள்
  • 1955ல் இந்திய அரசியல்வாதியும் கோவா மாநில முதலமைச்சருமான மனோகர் பாரிக்கர் பிறந்த நாள்
  • 1958ல் மொனாக்கோ இளவரசரான இரண்டாம் ஆல்பர்ட் பிறந்த நாள்
  • 1960ல் அமெரிக்க வானியலாளரான எய்தி ஏம்மல் பிறந்த நாள்
  • 1965ல் இந்திய நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான அமீர் கான் பிறந்த நாள்
  • 1972ல் இந்தியக் கவிஞரும் செயற்பாட்டாளருமான‌ ஐரோம் சர்மிளா பிறந்த நாள்
  • 1974ல் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான சாதனா சர்கம் பிறந்த நாள்
  • 1986ல் ஆங்கிலேய நடிகரான ஜேமி பெல் பிறந்த நாள்
  • 1994ல் அமெரிக்க நடிகரான‌ ஏன்சல் எல்கோர்ட் பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 14-03 March 14

  • 1883ல் செருமானிய மெய்யியலாளரான கார்ல் மார்க்சு இறப்பு நாள் (பிறப்பு 1818)
  • 1932ல் ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கரான ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறப்பு நாள் (பிறப்பு 1854)
  • 1973ல் அமெரிக்க கணினி அறிவியலாளரான அவார்டு அயிக்கன் இறப்பு நாள் (பிறப்பு 1900)
  • 1995ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ வில்லியம் ஆல்பிரெட் பவுலர் இறப்பு நாள் (பிறப்பு 1911)
  • 2007ல் அமெரிக்க குழந்தைகள் மனநோய் மருத்துவரான இசுடெல்லா செஸ் இறப்பு நாள் (பிறப்பு 1914)
  • 2010ல் மராத்தி எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான‌ விந்தா கரண்டிகர் இறப்பு நாள் (பிறப்பு 1918)
  • 2018ல் ஆங்கிலேய வானியற்பியலாளரும் நூலாசிரியருமான ஸ்டீவன் ஹாக்கிங் இறப்பு நாள் (பிறப்பு 1942)
  • 2018ல் ஈழத்து ஆன்மிக சொற்பொழிவாளரும் நூலாசிரியருமான வசந்தா வைத்தியநாதன் இறப்பு நாள்

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 13
Next articleMarch 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 15