March 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 13

0

Today Special Historical Events In Tamil | 13-03 March 13

March 13 Today Special | March 13 What Happened Today In History. March 13 Today Whose Birthday (born) | March-13th Important Famous Deaths In History On This Day 13/03 | Today Events In History March-13th | Today Important Incident In History | பங்குனி 13 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 13-03 | பங்குனி மாதம் 13ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 13.03 Varalatril Indru Nadanthathu Enna.

March 13
March 13

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 13-03

தாய்லாந்து நாட்டில் தேசிய யானை நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 13-03 March 13

  • 624ல் ஹெஜாஸ் பகுதியில் முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும் மக்காவின் குறைசிகளுக்கும் இடையில் போர் மூண்டது. இப்போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றமை இஸ்லாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
  • 1138ல் எதிர்-திருத்தந்தையாக ஆறாம் விக்டர் என்ற பெயரில் கர்தினால் கிரெகோரியோ கோண்டி நியமிக்கப்பட்டார்.
  • 1567ல் எண்பதாண்டுப் போர் ஆரம்பமானது.
  • 1639ல் ஆர்வர்டு கல்லூரிக்கு சமயவாதி யோன் ஆர்வர்டு என்பவரின் பெயர் இடப்பட்டது.
  • 1640ல் இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டதுடன் இலங்கையின் இடச்சு ஆளுநராக கோசுட்டர் நியமிக்கப்பட்டார்.
  • 1697ல் கடைசி மாயா பேரரசின் தலைநகரம் நோச்பெட்டென் எசுபானிய தேடல் வெற்றி வீரர்களிடம் வீழ்ந்தது.
  • 1781ல் யுரேனசு கோளை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
  • 1809ல் இராணுவப் புரட்சியில் சுவீடன் மன்னர் நான்காம் குசுத்தாவ் அடொல்ஃப் பதவியிழந்தார்.
  • 1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப் படையினரைப் பயன்படுத்த இணங்கியது.
  • 1881ல் உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் அவரது அரண்மனைக்கு அருகே நடந்த குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.
  • 1884ல் எகிப்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கர்த்தூம் நகர் மீதான சூடான் மகுதிய இயக்கத்தின் முற்றுகை ஆரம்பமானது.
  • 1900ல் இரண்டாம் பூவர் போரில் பிரித்தானியப் படைகள் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர்.
  • 1900ல் பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
  • 1908ல் நெல்லைக்கு வந்த வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டதுடன் நால்வர் கொல்லப்பட்டனர்.
  • 1921ல் சீனாவிடம் இருந்து மங்கோலியா தனது விடுதலையை அறிவித்தது.
  • 1930ல் ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்திற்கு புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.
  • 1933ல் பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அறிவித்த கட்டாய 3-நாள் வங்கி விடுமுறை முடிவடைந்து அமெரிக்க வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
  • 1940ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ’டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
  • 1940ல் உருசிய-பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1943ல் செருமனியப் படையினர் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.
  • 1954ல் முதலாம் இந்தோசீனப் போர் நடைபெற்றது. பிரெஞ்சுப் படைகளை வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் தாக்கினர்.
  • 1957ல் கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவைக் கொல்ல மாணவப் புரட்சிவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
  • 1969ல் அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.
  • 1979ல் கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1988ல் உலகின் மிக நீளமான கடலடிச் சுரங்கம், செய்க்கான் சுரங்கம், ஜப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.
  • 1992ல் கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.
  • 1996ல் இசுக்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
  • 1997ல் இந்தியாவின் பிறரன்பின் பணியாளர்கள் சபை அதன் தலைவர் அன்னை தெரேசாவின் இடத்துக்கு நிர்மலா ஜோஷியைத் தேர்ந்தெடுத்தது.
  • 2003ல் இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.
  • 2007ல் 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டப் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.
  • 2008ல் தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சிற்கு $1,000 ஐத் தாண்டியது.
  • 2012ல் சுரங்கம் ஒன்றில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சுவிட்சர்லாந்தில் 28 பேர் உயிரிழந்தனர்.
  • 2013ல் கத்தோலிக்க திருச்சபையால் திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2016ல் அங்காராவின் மத்திய பகுதியில் குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதில் 37 பேர் கொல்லப்பட்டதுடன் 127 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 13-03 March 13

  • 1843ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் மருத்துவருமான‌ டபிள்யூ. ஜி. ரொக்வூட் பிறந்த நாள் (இறப்பு 1909)
  • 1855ல் அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளருமான பெர்சிவால் உலோவெல் பிறந்த நாள் (இறப்பு 1916)
  • 1899ல் ஐதராபாது மாநில முதலமைச்சரான புர்குல ராமகிருஷ்ண ராவ் பிறந்த நாள் (இறப்பு 1967)
  • 1941ல் பாக்கிஸ்தானியக் கவிஞரான மஹ்மூட் தர்வீஷ் பிறந்த நாள் (இறப்பு 2008)
  • 1949ல் வங்காளதேச அரசியல்வாதியான சலாகுதீன் காதர் சௌத்ரி பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1969ல் காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியான விஜயேந்திர சரஸ்வதி பிறந்த நாள்
  • 1980ல் இந்திய அரசியல்வாதியான வருண் காந்தி பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 13-03 March 13

  • 1804ல் நேபாள இராச்சியத்தின் தலைமை அமைச்சரான தாமோதர பாண்டே இறப்பு நாள் (பிறப்பு 1752)
  • 1881ல் உருசியப் பேரரசரான இரண்டாம் அலெக்சாந்தர் இறப்பு நாள் (பிறப்பு 1818)
  • 1906ல் அமெரிக்க செயற்பாட்டாளரான சூசன் பிரவுன் அந்தோனி இறப்பு நாள் (பிறப்பு 1820)
  • 1936ல் தமிழகத் தமிழறிஞரும் பேராசிரியருமான கா. நமச்சிவாய முதலியார் இறப்பு நாள் (பிறப்பு 1876)
  • 1941ல் ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் சொற்பொழிவாளருமான‌ ம. வே. மகாலிங்கசிவம் இறப்பு நாள் (பிறப்பு 1891)
  • 1953ல் இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளரான டி. என். தீர்த்தகிரி இறப்பு நாள் (பிறப்பு 1880)
  • 1972ல் தமிழக நடன ஆசிரியரான திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை இறப்பு நாள்
  • 1982ல் இந்தியத் தொழிலதிபரான ஏ. நாகப்பச் செட்டியார் இறப்பு நாள் (பிறப்பு 1915)
  • 1986ல் ஈழத்துத் தமிழறிஞரான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை இறப்பு நாள் (பிறப்பு 1899)
  • 1986ல் தமிழகத் தொழிலதிபரும் பதிப்பாளரும் கொடையாளருமான‌ மர்ரே ராஜம் இறப்பு நாள் (பிறப்பு 1904)
  • 2000ல் இந்திய இராணுவப் படைத் தலைவரான பி. பி. குமாரமங்கலம் இறப்பு நாள் (பிறப்பு 1913)
  • 2006ல் அமெரிக்க வேதியியலாளரான கென்னத் ஸ்ட்ரீட் இறப்பு நாள் (பிறப்பு 1920)
  • 2015ல் தமிழ்நாட்டு அரசியலாளரும் எழுத்தாளரும் இதழாளருமான‌ தி. சு. கிள்ளிவளவன் இறப்பு நாள் (பிறப்பு 1926)
  • 2015ல் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளரான சூசெட் ஜோர்டன் இறப்பு நாள் (பிறப்பு 1974)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகா சிவராத்திரியாகிய இன்று நீங்கள் இப்படி தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய‌ வேண்டும்! மகா சிவராத்திரி தினத்தில் இவற்றை அவசியம் செய்ய வேண்டும்!
Next articleMarch 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 14