March 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 01

0

Today Special Historical Events In Tamil | 01-03 | March 01

March 01 Today Special | March 01 What Happened Today In History. March 01 Today Whose Birthday (born) | March-1st Important Famous Deaths In History On This Day 01/03 | Today Events In History March 1st | Today Important Incident In History | பங்குனி 01 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 01-03 | பங்குனி மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 01.03 Varalatril Indru Nadanthathu Enna| March 01 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/03 | Famous People Born Today 01.03 | Famous People died Today 01-03.

Today Special in Tamil 01-03
Today Events in Tamil 01-03
Famous People Born Today 01-03
Famous People died Today 01-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 01-03 | March 01

நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மார்சல் தீவுகள்)
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பொசுனியா எர்செகோவினா, யுகோசுலாவியாவில் இருந்து 1992)
பாகுபாடுகள் ஒழிப்பு நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 01-03 | March 01

1562ல் பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டசுதாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
1565ல் இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது.
1628ல் இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கட்டளை விடுத்தார்.
1700ல் சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
1790ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
1796ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பத்தாவியக் குடியரசினால் தேசியமயமாக்கப்பட்டது.
1811ல் எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
1815ல் எல்பா தீவில் இருந்து தப்பிய பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரான்சு திரும்பினான்.
1845ல் அமெரிக்க அரசுத்தலைவர் சான் டைலர் டெக்சசுக் குடியரசை அமெரிக்காவுடன்]] இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.
1867ல் நெபுராசுகா ஐக்கிய அமெரிக்காவின் 37ஆவது மாநிலமானது.
1869ல் திமீத்ரி மெண்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை நிறைவேற்றி வெளியிட அனுப்பினார்.
1872ல் அமெரிக்காவின் யெல்லோசிடோன் தேசியப் பூங்கா உலகின் முதலாவது தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது.
1873ல் முதலாவது பயன்படத்தகுந்த தட்டச்சுப் பொறியை ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
1893ல் நிக்கோலா தெசுலா வானொலி பற்றிய தனது முதலாவது பொதுமக்களுக்கான அறிமுகத்தை அமெரிக்காவின் செயின்ட் லூயிசு நகரில் நடத்தினார்.
1896ல் எத்தியோப்பிய இராணுவத்தினர் இத்தாலியப் படைகளைத் தோற்கடித்தனர். முதலாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் முடிவுக்கு வந்தது.
1896ல் என்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
1899ல் இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு நடைமுறைக்கு வந்தது.
1901ல் இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.
1910ல் வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.
1921ல் வாரிக் ஆம்சுட்ரோங் தலைமையிலான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஷசுத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் முதல்தடவையாக வென்றது. இது போன்ற சாதனையை ஆத்திரேலியா 86 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் சாதித்தது.
1936ல் ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.
1939ல் சப்பான் ஒசாக்காவில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் சாவகத் தீவில் இறங்கினர்.
1946ல் இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
1948ல் இலங்கையின் தெற்கே ஓமகமைக்கும் கொட்டாவைக்கும் இடையே இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 52 பேர் படுகாயமடைந்தனர்.
1949ல் இந்தோனேசிய இராணுவம் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுக்களிடம் இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது.
1953ல் சோவியத் தலைவர் சோசப் சுடாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
1954ல் அணுகுண்டு சோதனை: காசில் பிராவோ என்ற ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் வெடிக்கவைக்கப்பட்டதில் கதிரியக்க மாசு அமெரிக்காவில் ஏற்பட்டது.
1954ல் ஐக்கிய அமெரிக்க காங்கிரசு மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரசு உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
1956ல் பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் ஒலியன்களின் அகரவரிசைக்கான நகல் வடிவை பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்புக்காகத் தயாரித்தது.
1956ல் கிழக்கு செருமனியின் தேசிய மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
1961ல் உகாண்டா சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.
1966ல் சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1971ல் பாக்கித்தான் அரசுத்தலைவர் யாகியா கான் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்களைக் காலவரையறையின்றி ஒத்திவைத்தார். கிழக்குப் பாக்கித்தானில் பெரும் மக்கள் கலவரம் வெடித்தது.
1973ல் சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
1977ல் சார்லி சாப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
1980ல் சனி கோளின் யானுசு என்ற சந்திரன் இருப்பதை வொயேசர் 1 விண்கலம் உறுதி செய்தது.
1981ல் ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்சு வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1991ல் சதாம் உசைனுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஈராக்கில் ஆரம்பமாயின.
1992ல் பொசுனியா எர்செகோவினா இயுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1995ல் யாகூ! ஆரம்பிக்கப்பட்டது.
2003ல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஆக்கில் நடத்தியது.
2006ல் ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.
2007ல் ஐக்கிய அமெரிக்காவின் தெற்கே சுழல் காற்று தாக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 01-03 | March 01

1647ல் போர்த்துக்கீச மதப்போதகரான‌ சான் டி பிரிட்டோ பிறந்த நாள். (இறப்பு-1693)
1810ல் போலந்து இசையமைப்பாளரான‌ பிரடெரிக் சொப்பின் பிறந்த நாள். (இறப்பு-1849)
1870ல் கிரேக்க-பிரான்சிய வானியலாளரான‌ யூகி மைக்கேல் அந்தொனியாடி பிறந்த நாள். (இறப்பு-1944)
1904ல் தமிழகப் பத்திரிகையாளரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான‌ ஆ. நா. சிவராமன் பிறந்த நாள். (இறப்பு-2001)
1910ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடகருமான‌ எம். கே. தியாகராச பாகவதர் பிறந்த நாள். (இறப்பு-1959)
1911ல் பிரித்தானியக் கல்வி உளவியலாளரான‌ எட்வின் ஏ. பீல் பிறந்த நாள். (இறப்பு-1992)
1917ல் தமிழக வீணைக் கலைஞரான‌ கே. பி. சிவானந்தம் பிறந்த நாள். (இறப்பு-2003)
1920ல் இந்தியக் கத்தோலிக்க திருச்சபை கர்தினாலான‌ சைமன் பிமேந்தா பிறந்த நாள். (இறப்பு-2013)
1921ல் இலங்கை வானொலி ஒலிபரப்பாளரான‌ விவியன் நமசிவாயம் பிறந்த நாள். (இறப்பு-1998)
1922ல் இசுரேலின் 5வது பிரதமரான‌ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான‌ இட்சாக் ரபீன் பிறந்த நாள். (இறப்பு-1995)
1935ல் தமிழக திரைப்பட மற்றும் மேடை நடிகரான‌ மேசர் சுந்தரராசன் பிறந்த நாள். (இறப்பு-2003)
1943ல் உருசிய-செருமானிய வானியலாளரும் இயற்பியலாளருமான‌ இரசீத் சூன்யாயெவ் பிறந்த நாள்.
1944ல் மேற்கு வங்கத்தின் 7வது முதலமைச்சரான‌ புத்ததேவ் பட்டாசார்யா பிறந்த நாள்.
1953ல் தமிழக அரசியல்வாதிரும் தி.மு.க. செயல் தலைவருமான‌ மு. க. சுடாலின் பிறந்த நாள்.
1953ல் இலங்கைத் துடுப்பாட்ட வீரரான‌ பந்துல வர்ணபுர பிறந்த நாள்.
1954ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ ரான் அவர்டு பிறந்த நாள்.
1978ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ சென்சென் அக்லசு பிறந்த நாள்.
1980ல் பாக்கித்தான் துடுப்பாளரான‌ சாகித் அஃபிரிடி பிறந்த நாள்.
1990ல் பாக்கித்தானிய நடிகையும் பெண்ணிய செயற்பாட்டாளருமான‌ கந்தீல் பலோச்சு பிறந்த நாள். (இறப்பு-2016)

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 01-03 | March 01

492ல் திருத்தந்தையான‌ மூன்றாம் ஃபெலிக்ஸ் இறப்பு நாள்.
1320ல் சீனப் பேரரசரான‌ புயந்து கான் இறப்பு நாள். (பிறப்பு-1286)
1911ல் நோபல் பரிசு பெற்ற இடச்சு-செருமானிய வேதியியலாளரான‌ யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப் இறப்பு நாள். (பிறப்பு-1852)
1914ல் கனடாவின் 8-வது ஆளுநரான‌ நான்காம் மிண்டோ பிரபு இறப்பு நாள். (பிறப்பு-1845)
1940ல் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான‌ அ. தா. பன்னீர்செல்வம் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1943ல் சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவரும் நுண்ணியலாளருமான‌ அலெக்சாண்டர் எர்சின் இறப்பு நாள். (பிறப்பு-1863)
1986ல் இலங்கை மருத்துவரான‌ அப்பாக்குட்டி சின்னத்தம்பி இறப்பு நாள். (பிறப்பு-1911)
1992ல் கருநாடக-பக்திப் பாடகியான‌ சூலமங்கலம் ராஜலட்சுமி இறப்பு நாள். (பிறப்பு-1940)
1992ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளரும் மேடை நாடகக் கலைஞருமான‌ கே. பி. ஜானகி அம்மாள் இறப்பு நாள். (பிறப்பு-1917)
2001ல் தமிழகப் பத்திரிகையாளரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான‌ ஆ. நா. சிவராமன் இறப்பு நாள். (பிறப்பு-1904)
2003ல் தமிழக திரைப்பட மற்றும் மேடை நடிகரான‌ மேஜர் சுந்தரராஜன் இறப்பு நாள். (பிறப்பு-1935)
2014ல் இந்திய அரசியல்வாதியான‌ பங்காரு லட்சுமண் இறப்பு நாள். (பிறப்பு-1939)
2015ல் யூத அமெரிக்க சமூகவியலாளரும் மொழியியலாளருமான‌ யோசுவா ஃபிஷ்மன் இறப்பு நாள். (பிறப்பு-1926)
2017ல் இந்திய நகைச்சுவை எழுத்தாளரும் நாடகாசிரியருமான‌ தாரக் மேத்தா இறப்பு நாள். (பிறப்பு-1929)
2019ல் நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளரான சொரேசு ஆல்ஃபியோரொவ் இறப்பு நாள். (பிறப்பு-1930)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 14.10.2022 Today Rasi Palan 14-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleMarch 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 02