காற்று வாங்க போனேன்
சும்மா காற்று வாங்கி விட்டு வருவதாக
அப்பாவிடம் பொய் கூறிச் சென்றேன்
வழியோரம் நடந்து சென்றேன்
பல விழியோரக் கவிதைகள்
தென்றல் வீசிக் கடந்து சென்றன
இளமையின் துடிப்பில் எதிரில் வந்த
புயலில் சிக்கிக்கொண்டேன்
புயலில் முக்குளித்து கண்டெடுத்தேன்
இரண்டு முத்துக்கள்,
அவையிரண்டும் இன்று
சும்மா காற்று வாங்கி விட்டு வருவதாக
என்னிடம் கூறிவிட்டு சென்றுவிட்டன..!
அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: