January 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 15

0

Today Special Historical Events In Tamil | 15-01 | January 15

January 15 Today Special | January 15 What Happened Today In History. January 15 Today Whose Birthday (born) | January-15th Important Famous Deaths In History On This Day 15/01 | Today Events In History January-15th | Today Important Incident In History | தை 15 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 15-01 | தை மாதம் 15ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 15.01 Varalatril Indru Nadanthathu Enna| January 15 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 15/01 | Famous People Born Today January 15 | Famous People died Today 15-01.

  • Today Special in Tamil 15-01
  • Today Events in Tamil 15-01
  • Famous People Born Today 15-01
  • Famous People died Today 15-01
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 15-01 | January 15

    மர நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (எகிப்து)
    இந்திய இராணுவ நாளாக ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. (வெனிசுவேலா)
    தைப்பொங்கல் நாளாக கொண்டாடப்படுகிறது. (சனவரி 14 அல்லது சனவரி 15)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 15-01 | January 15

    69ல் உரோமைப் பேரரசின் ஆட்சியை ஓட்டோ கைப்பற்றித் தன்னைப் பேரரசராக அறிவித்தார். எனினும் மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார்.
    1559ல் முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார்.
    1582ல் லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை உருசியா போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்திடம் கையளித்தது.
    1759ல் பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
    1777ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது.
    1799ல் இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
    1815ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் கடற்படைக் கப்பல் பிரெசிடென்ட் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
    1822ல் கொழும்பு, களனி ஆற்றிற்குக் குறுக்கே மிதவைப் பாலம் (“படகுகளின் பாலம்”, Bridge of Boats) திறந்து வைக்கப்பட்டது.
    1867ல் இலண்டன், ரீஜன்சு பார்க் என்ற இடத்தில் படகு ஏரி ஒன்றில் மூடியிருந்த பனிக்கட்டி வெடித்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.
    1889ல் கொக்கக் கோலா கம்பனி அட்லான்டாவில் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
    1892ல் யேம்சு நெய்சிமித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.
    1908ல் யாழ்ப்பாணத்தில் காரைதீவு பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
    1910ல் பஃபலோ பில் அணை, அக்காலத்தின் மிக உயர்ந்த அணை (325 அடி) அமெரிக்காவின் வயோமிங்கில் கட்டப்பட்டது.
    1915ல் மலாவியில் வெள்ளையினக் குடியேற்றத்தை எதிர்த்து யோன் சிலம்புவே தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியில் மூன்று வெள்ளையினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
    1919ல் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் உயிரிழந்தனர்.
    1919ல் செருமனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
    1934ல் 8.0 அளவு நிலநடுக்கம் நேபாளம் மற்றும் பீகாரைத் தாக்கியதில் 6,000–10,700 பேர் வரையில் உயிரிழந்தனர்.
    1936ல் முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் அமெரிக்காவில் ஒகைய்யோ மாநிலத்தில் கட்டப்பட்டது.
    1937ல் எசுப்பானிய உள்நாட்டுப் போர்: கொருன்னா சாலை சமரில் தேசியவாதிகளும், குடியரசுவாதிகளும் பலத்த இழப்புகளின் பின்னர் பின்வாங்கினர்.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் குவாடல்கனால் தீவில் இருந்து விரட்டப்பட்டனர்.
    1943ல் பென்டகன் திறக்கப்பட்டது.
    1944ல் ஆர்ஜெண்டீனாவில் சான் யுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
    1949ல் சீன உள்நாட்டுப் போர்: கம்யூனிஸ்டுப் படைகள் தியான்ஜின் நகரை தேசியவாத அரசிடம் இருந்து கைப்பற்றின.
    1966ல் நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
    1969ல் சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.
    1970ல் நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர்.
    1970ல் முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1973ல் வியட்நாம் போர்: அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் வட வியட்நாமில் தாக்குதல்களை இடைநிறுத்தினார்.
    1975ல் போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.
    1977ல் சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
    1981ல் லேக் வலேசா தலைமையிலானபோலந்துத் தொழிற்சங்கத் தலைவர்கள் குழு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை வத்திக்கனில் சந்தித்தது.
    2001ல் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
    2005ல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
    2005ல் செல்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    2007ல் சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
    2013ல் எகிப்தில் இராணுவ வீரர்களி ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
    2016ல் சோமாலியாவில் அல்-சபாப் இசுலாமியப் போராளிகளுடனான சமரில் கென்ய இராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர்.
    2019ல் சோமாலிப் போராளிகள் கென்யா, நைரோபியில் உணவகம் ஒன்றைத் தாக்கி 21 பேரைக் கொன்றனர், 19 பேர் காயமடைந்தனர்.
    2020ல் இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் 6.2-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 67 பேர் உயிரிழந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 15-01 | January 15

    1622ல் பிரான்சிய நடிகரான‌ மொலியர் பிறந்த நாள். (இறப்பு-1673)
    1842ல் ஆத்திரேலியக் கத்தோலிக்கப் புனிதரான‌ மேரி மக்கிலொப் பிறந்த நாள். (இறப்பு-1909)
    1850ல் உருசிய-சுவீடன் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ சோஃபியா கோவலெவ்சுகாயா பிறந்த நாள். (இறப்பு-1891)
    1868ல் இந்திய அரசியல்வாதியான‌ டி. எம். நாயர் பிறந்த நாள். (இறப்பு-1919)
    1887ல் ஆந்திர வழக்கறிஞரரும் நாடக ஆசிரியரும் சீர்திருத்தவாதியுமான‌ திரிபுரனேனி இராமசாமி பிறந்த நாள். (இறப்பு-1943)
    1892ல் தமிழறிஞரும் தமிழாசிரியரருமான‌ மயிலை சிவ முத்துக்குமாரசுவாமி பிறந்த நாள். (இறப்பு-1968)
    1908ல் அங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ எட்வர்ட் டெல்லர் பிறந்த நாள். (இறப்பு-2003)
    1916ல் ஈழத்துப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான‌ இராஜ அரியரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-1998)
    1917ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ கே. ஏ. தங்கவேலு பிறந்த நாள். (இறப்பு-1994)
    1918ல் எகிப்தின் 2வது அரசுத்தலைவரான‌ ஜமால் அப்துல் நாசிர் பிறந்த நாள். (இறப்பு-1970)
    1922ல் இலங்கையின் இசுலாமியத் தமிழறிஞரான‌ ம. மு. உவைஸ் பிறந்த நாள். (இறப்பு-1922)
    1923ல் இலங்கை நடிகையும் பாடகியுமான‌ ருக்மணிதேவி பிறந்த நாள். (இறப்பு-1978)
    1926ல் இந்திய ஒலிம்பிக் வீரரான‌ காசாபா தாதாசாகேப் சாதவ் பிறந்த நாள். (இறப்பு-1984)
    1927ல் நேபாள அரசியல்வாதியான‌ கீர்த்தி நிதி பிஸ்தா பிறந்த நாள். (இறப்பு-2017)
    1929ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கச் செயற்பாட்டாளரான‌ மார்ட்டின் லூதர் கிங் பிறந்த நாள். (இறப்பு-1968)
    1934ல் கருநாடகத்தின் 13வது ஆளுநரான‌ வி. எஸ். ரமாதேவி பிறந்த நாள். (இறப்பு-2013)
    1936ல் தமிழக எழுத்தாளரான‌ மா. பா. குருசாமி பிறந்த நாள்.
    1956ல் உத்தரப் பிரதேசத்தின் 23வது முதல்வரான‌ மாயாவதி குமாரி பிறந்த நாள்.
    1962ல் இந்திய முசுலிம் எழுத்தாளரான‌ மு. அப்துல் சமது பிறந்த நாள்.
    1965ல் வட அயர்லாந்து நடிகரான‌ ஜேம்ஸ் நெஸ்பிட் பிறந்த நாள்.
    1966ல் தென்னிந்திய நடிகையான‌ பானுப்ரியா பிறந்த நாள்.
    1973ல் இந்திய சமூக-அரசியல் தலைவரான‌ சுபர்னோ சத்பதி பிறந்த நாள்.
    1976ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரான‌ மோ. ராஜா பிறந்த நாள்.
    1982ல் இந்திய நடிகரும் பாடகருமான‌ நீல் நிதின் முகேஷ் பிறந்த நாள்.
    1984ல் அமெரிக்க நடிகரான‌ விக்டோர் ரசுக் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 15-01 | January 15

    1894ல் செருமானிய இயற்பியலாளரான‌ ஐன்ரிக் ஏர்ட்சு இறப்பு நாள். (பிறப்பு-1857)
    1901ல் ஈழத்து வரலாற்றாளரும் பதிப்பாளருமான‌ சி. வை. தாமோதரம்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1832)
    1910ல் தமிழறிஞரும் ஈழத்துப் புலவருமான வே. அகிலேசபிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1853)
    1944ல் ஆங்கிலேய கட்டிடக் கலைஞரும் தியெப்வால் நினைவுச்சின்னத்தை வடிவமைத்தவருமான‌ எட்வின் லூட்டியன்சு இறப்பு நாள். (பிறப்பு-1869)
    1945ல் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயரான‌ வேதநாயகம் சாமுவேல் அசரியா இறப்பு நாள். (பிறப்பு-1874)
    1955ல் இந்திய வேதியியலாளரான‌ சாந்தி சுவரூப் பட்நாகர் இறப்பு நாள். (பிறப்பு-1894)
    1992ல் கோபோல் நிரலாக்க மொழியை உருவாக்கிய அமெரிக்கரான‌ கிரேசு ஹாப்பர் இறப்பு நாள். (பிறப்பு-1906)
    2008ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ தியாகராஜா மகேஸ்வரன் இறப்பு நாள். (பிறப்பு-1960)
    2010ல் இலங்கை மலையக அரசியல்வாதியும் தொழிற்சங்கத் தலைவருமான‌ பெரியசாமி சந்திரசேகரன் இறப்பு நாள். (பிறப்பு-1957)
    2016ல் அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான‌ வில்மோஸ் சிக்மண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1930)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleஇன்றைய ராசி பலன் 29.08.2022 Today Rasi Palan 29-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
    Next articleSeptember 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 01