September 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 01

0

Today Special Historical Events In Tamil | 01-09 | September 01

September 01 Today Special | September 01 What Happened Today In History. September 01 Today Whose Birthday (born) | September-01st Important Famous Deaths In History On This Day 01/09 | Today Events In History September-01st | Today Important Incident In History | புரட்டாதி 01 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 01-09 | புரட்டாதி மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 01.09 Varalatril Indru Nadanthathu Enna| September 01 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/09 | Famous People Born Today September 01 | Famous People died Today 01-09.

September 01
  • Today Special in Tamil 01-09
  • Today Events in Tamil 01-09
  • Famous People Born Today 01-09
  • Famous People died Today 01-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 01-09 | September 01

    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)
    அறிவு நாளாக கொண்டாடப்படுகிறது. (உருசியா, உக்ரைன், ஆர்மீனியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 01-09 | September 01

    1420ல் சிலி, அவாய், யப்பான் போன்ற நாடுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டதோடு சிலி நாட்டின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    1449ல் மங்கோலியர்களால் சீனப் பேரரசு கைப்பற்றப்பட்ட்டது.
    1529ல் உள்ளூர் மக்களால் அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை தகர்க்கப்பட்டது.
    1532ல் பெம்புரோக்கின் கோமாட்டியாக ஆன் பொலின் அவரது கணவரான இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார்.
    1604ல் சீக்கியர்களின் புனித நூலான‌ ஆதி கிரந்த் முதற்தடவையாக பொற்கோவிலில் வைக்கப்பட்டது.
    1715ல் 72 ஆண்டுகால‌ ஆட்சியின் பின்னர் பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் இறந்தார்.
    1798ல் பிரித்தானியாவின் இலங்கையரால் இலங்கையில் முதலியார் வகுப்பு மீண்டும் உருவாக்கப்பட்டது.
    1804ல் ஜெர்மனிய வானியலாளரான‌ கார்ல் ஹார்டிங் என்பவரால் சிறுகோள் பட்டையில் உள்ள மிகப்பெரும் சிறுகோள்களில் ஒன்றான யூனோ கண்டுபிடிக்கப்பட்டது.
    1859ல் சூரியப் புயல் இடம்பெற்றது.
    1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது வர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் கூட்டமைப்புப் படைகள், பின்வாங்கிச் சென்ற ஒன்றியப் படைகளை தாக்கினர்.
    1864ல் அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது கூட்டமைப்புப் படைத் தளபதியான‌ யோன் ஹுட் என்பவர் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார்.
    1880ல் ஆப்கானித்தானின் தலைவர் முகம்மது அயூப் கானின் படைகள் காந்தாரத்தில் இடம்பெற்ற சமரில் தோல்வியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் முடிவுக்கு வந்தது.
    1894ல் அமெரிக்காவின் மினசோட்டா என்னும் இடத்தில் ஏற்பட்ட‌ காட்டுத்தீயில் 400 பேர் உயிரிழந்தனர்.
    1897ல் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை வட அமெரிக்காவின் பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
    1905ல் கனடாவின் கூட்டமைப்பில் ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான் ஆகியவை இணைந்தன.
    1914ல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் என்னும் நகரத்தினை பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றம் செய்தனர்.
    1914ல் அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறாவான மார்த்தா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.
    1923ல் டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் போது சுமார் 105,000 பேர்வரை உயிரிழந்தனர்.
    1928ல் அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்ததோடு தன்னை அதன் மன்னராகவும் அறிவித்தார்.
    1939ல் இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன.
    1939ல் ஊனமானவர்கள் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட ஜெர்மனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.
    1951ல் ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமக்கிடையே ஆன்சசு ஒப்பந்தம் எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டன.
    1961ல் பெல்கிறேட் நகரில் கூட்டுச்சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு ஆரம்பமானது.
    1961ல் எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது.
    1969ல் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார்.
    1970ல் யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
    1972ல் ஐசுலாந்தில் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், உருசியாவின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்ணத்தை வென்றார்.
    1979ல் நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.
    1981ல் மத்திய ஆபிரிக்கக் குடியர]சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
    1983ல் பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் லாரி மெக்டொனால்டு உட்பட அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.
    1984ல் யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
    1985ல் அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
    1991ல் உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
    2004ல் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. மூன்றாம் நாள் முடிவில் மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.
    2007ல் மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 01-09 | September 01

    1593ல் முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவியான‌ மும்தாஜ் மகால் பிறந்த நாள். (இறப்பு-1631)
    1875ல் அமெரிக்கப் போர் வீரரான‌ எழுத்தாளருமான‌ எட்கர் ரைசு பர்ரோசு பிறந்த நாள். (இறப்பு-1950)
    1877ல் தமிழறிஞரான‌ அ. வரதநஞ்சைய பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1956)
    1895ல் கருநாடக இசைக் கலைஞரான‌ செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த நாள். (இறப்பு-1974)
    1896ல் இந்திய ஆன்மிகவாதியும் உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவியவருமான‌ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா பிறந்த நாள். (இறப்பு-1977)
    1925ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான ராய் கிளாபர் பிறந்த நாள். (இறப்பு-2018)
    1929ல் தமிழக எழுத்தாளரான ஜி. நாகராஜன் பிறந்த நாள். (இறப்பு-1981)
    1930ல் இந்திய கட்டிடக்கலைஞரான‌ சார்லசு கோர்ரியா பிறந்த நாள். (இறப்பு-2015)
    1932ல் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும் நீதிபதியும் அரசியல்வாதியுமான‌ பத்மநாதன் இராமநாதன் பிறந்த நாள். (இறப்பு-2006)
    1933ல் இல்ங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ தா. திருநாவுக்கரசு பிறந்த நாள். (இறப்பு-1982)
    1935ல் தமிழக எழுத்தாளரரும் தமிழ் பேராசிரியருமான‌ அய்க்கண் பிறந்த நாள். (இறப்பு-2020)
    1947ல் இந்திய அரசியல்வாதியான‌ பி. ஏ. சங்மா பிறந்த நாள். (இறப்பு-2016)
    1957ல் கியூபா-அமெரிக்க நடிகையான‌ குளோரியா எஸ்தேபான் பிறந்த நாள்.
    1965ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சுலக்சனா பிறந்த நாள்.
    1967ல் ஆத்திரேலிய இயக்குனரான‌ கிரேக் கில்லெஸ்பி பிறந்த நாள்.
    1970ல் இந்திய-அமெரிக்க நடிகையான‌ பத்மா லட்சுமி பிறந்த நாள்.
    1980ல் இந்திய நடிகையான‌ கரீனா கபூர் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 01-09 | September 01

    870ல் பாரசீகக் கல்வியாளரான‌ முகம்மது அல்-புகாரி இறப்பு நாள். (பிறப்பு-810)
    1159ல் திருத்தந்தையான‌ நான்காம் ஏட்ரியன் இறப்பு நாள். (பிறப்பு-1100)
    1557ல் பிரான்சிய நாடுகாண் பயணியும் மாலுமியுமான‌ இழ்சாக் கார்ட்டியே இறப்பு நாள். (பிறப்பு-1491)
    1581ல் 4-வது சீக்கிய குருவாகிய‌ குரு ராம் தாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1534)
    1715ல் மன்னராகிய பிரான்சின் பதினான்காம் லூயி இறப்பு நாள். (பிறப்பு-1638)
    1961ல் கட்டிடக்கலைஞராகிய ஈரோ சாரினென் இறப்பு நாள். (பிறப்பு-1910
    1972ல் ஈழத்து எழுத்தாளராகிய‌ செ. கதிர்காமநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1942)
    1980ல் இலங்கைத் தமிழறிஞராகிய‌ சேவியர் தனிநாயகம் இறப்பு நாள். (பிறப்பு-1913)
    1983ல் தமிழகத் தமிழறிஞரும் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமாகிய‌ மறை. திருநாவுக்கரசு இறப்பு நாள். (பிறப்பு-1907)
    1987ல் தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவரான‌ தமிழரசன் இறப்பு நாள். (பிறப்பு-1945)
    1988ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் இறப்பு நாள். (பிறப்பு-1911)
    2014ல் இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதியான‌ பாலா தம்பு இறப்பு நாள். (பிறப்பு-1922)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleJanuary 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 15
    Next articleஇன்றைய ராசி பலன் 31.08.2022 Today Rasi Palan 31-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!