Today Special Historical Events In Tamil | 10-01 | January 10
January 10 Today Special | January 10 What Happened Today In History. January 10 Today Whose Birthday (born) | January-10th Important Famous Deaths In History On This Day 10/01 | Today Events In History January-10th | Today Important Incident In History | தை 10 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 10-01 | தை மாதம் 10ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 10.01 Varalatril Indru Nadanthathu Enna| January 10 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 10/01 | Famous People Born Today January 10 | Famous People died Today 10-01.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 10-01 | January 10
பெரும்பான்மையின ஆட்சி நாளாக கொண்டாடப்படுகிறது. (பகாமாசு)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 10-01 | January 10
மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.
236ல் அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
1475ல் மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார்.
1645ல் முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1806ல் கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
1810ல் நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
1840ல் ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
1863ல் உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
1881ல் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]
1916ல் முதலாம் உலகப் போர்: எர்சுரும் சமரில் உருசியா உதுமானியரைத் தோற்கடித்தது.
1917ல் பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இது 1919 சூன் மாதம் வரை தொடர்ந்தது.
1920ல் வெர்சாய் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக முடிவுற்றது.
1924ல் பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் உயிரிழந்தனர்..
1946ல் லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
1946ல் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக வானொலி அலைகளை நிலாவில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.
1954ல் பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து திரேனியக் கடலில் வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
1962ல் பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை உயிரிழந்தனர்.
1966ல் இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாஷ்கந்து உடன்பாட்டில் லால் பகதூர் சாஸ்திரி, அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1972ல் சேக் முஜிபுர் ரகுமான் பாக்கித்தானில் 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான வங்காளதேசத்திற்குத் திரும்பினார்.
1974ல் யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
1984ல் 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
1985ல் சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி தலைவர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அரசுத்தலைவர் ஆனார்.
1989ல் கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
1995ல் உலக இளையோர் நாள் பிலிப்பீன்சில் இடம்பெற்றது.
2001ல் விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
2005ல் தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
2007ல் கினியில் அரசுத்தலைவர் லன்சானா கொண்டேக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
2013ல் பாக்கித்தானில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
2015ல் மொசாம்பிக்கில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 56 பேர் முதலையின் பித்தநீர் கலக்கப்பட்ட பியரை அருத்தியதால் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 10-01 | January 10
1573ல் செருமானிய வானியலாளரான சைமன் மாரியசு பிறந்த நாள். (இறப்பு-1624)
1775ல் மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சரான இரண்டாம் பாஜி ராவ் பிறந்த நாள். (இறப்பு-1851)
1929ல் இந்திய சட்ட அறிஞரான பாலி சாம் நரிமன் பிறந்த நாள்.
1931ல் தமிழகப் பெண் எழுத்தாளரான ஆர். சூடாமணி பிறந்த நாள். (இறப்பு-2010)
1931ல் மலேசிய மதகுரவும் அரசியல்வாதியுமான நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் பிறந்த நாள். (இறப்பு-2015)
1933ல் தமிழக இதழாளரும் எழுத்தாளருமான கி. கஸ்தூரிரங்கன் பிறந்த நாள். (இறப்பு-2011)
1933ல் பஞ்சாபி எழுத்தாளரான குர்தியால் சிங் பிறந்த நாள். (இறப்பு-பிறந்த நாள். (இறப்பு-2016)
1936ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான இராபெர்ட் உட்ரோ வில்சன் பிறந்த நாள்.
1937ல் இந்திய அரசியல்வாதியான முரளி தியோரா பிறந்த நாள். (இறப்பு-2014)
1938ல் அமெரிக்கக் கணினிவியலாளரான டொனால்ட் குனுத் பிறந்த நாள்.
1940ல் இந்தியப் பாடகரான கே. ஜே. யேசுதாஸ் பிறந்த நாள்.
1943ல் ஈழத்துக் கலைரான மு. செ. விவேகானந்தன் பிறந்த நாள். (இறப்பு-1999)
1949ல் அமெரிக்க நடிகையும் செயற்பாட்டாளருமான லிண்டா லவ்லேஸ் பிறந்த நாள். (இறப்பு-2002)
1967ல் இலங்கை மலையக அரசியல்வாதியும் தொழிலதிபருமான பழனி திகாம்பரம் பிறந்த நாள்.
1974ல் இந்திய நடிகரான கிருத்திக் ரோஷன் பிறந்த நாள்.
1984ல் இந்தியத் திரைப்பட நடிகையான கல்கி கோய்ச்லின் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 10-01 | January 10
314ல் திருத்தந்தையான மில்த்தியாதேஸ் இறப்பு நாள்.
1761ல் தமிழில் நாட்குறிப்பு எழுதியவரான ஆனந்த ரங்கம் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1709)
1775ல் பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவரான ஸ்ட்ரிங்கர் லாரன்சு இறப்பு நாள். (பிறப்பு-1697)
1778ல் சுவீடிய தாவரவியலாளரும் மருத்துவரான கரோலஸ் லின்னேயஸ் இறப்பு நாள். (பிறப்பு-1707)
1904ல் பிரான்சிய ஓவியரும் சிற்பக் கலைஞருமான ஜீன் லியோன் ஜேர்மி இறப்பு நாள். (பிறப்பு-1824)
1951ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரான சிங்ளேர் லுயிஸ் இறப்பு நாள். (பிறப்பு- 1885)
1957ல் நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞரான கேப்ரியெலா மிஸ்திரெல் இறப்பு நாள். (பிறப்பு-1889)
1969ல் இராசத்தானின் 2வது ஆளுநரான சம்பூர்ணாநந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1891)
2005ல் இலங்கைத் தமிழ்ப் போராளியும் அரசியல்வாதியுமான சங்கர் ராஜி இறப்பு நாள். (பிறப்பு-1949)
2006ல் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகரான ஆர். எஸ். மனோகர் இறப்பு நாள்.
2007ல் இலங்கை நீதிபதியும் மேல்மாகாணத்தின் 1வது ஆளுநருமான எஸ். சர்வானந்தா இறப்பு நாள். (பிறப்பு-1923)
2008ல் தமிழ்த் திரைப்பட நடிகரான பாண்டியன் இறப்பு நாள். (பிறப்பு-1959)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan