January 09வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 09

0

Today Special Historical Events In Tamil | 09-01 | January 09

January 09 Today Special | January 09 What Happened Today In History. January 09 Today Whose Birthday (born) | January-09th Important Famous Deaths In History On This Day 09/01 | Today Events In History January-09th | Today Important Incident In History | தை 09 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 09-01 | தை மாதம் 09ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 09.01 Varalatril Indru Nadanthathu Enna| January 09 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 09/01 | Famous People Born Today January 09 | Famous People died Today 09-01.

January 09
 • Today Special in Tamil 09-01
 • Today Events in Tamil 09-01
 • Famous People Born Today 09-01
 • Famous People died Today 09-01
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 09-01 | January 09

  தியாகிகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (பனாமா)
  வெளிநாடுவாழ் இந்தியர் நாளாக கொண்டாடப்படுகிறது.
  அமைதி உடன்பாடு நாளாக கொண்டாடப்படுகிறது. (தெற்கு சூடான்)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 09-01 | January 09

  475ல் பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
  1150ல் சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார்.
  1349ல் கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
  1431ல் ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
  1707ல் இசுக்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துப் பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
  1760ல் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர்.
  1788ல் கனெடிகட் அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது.
  1792ல் உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  1799ல் பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியப் போர்களுக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.
  1816ல் ஹம்பிரி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.
  1822ல் போர்த்துக்கீச மன்னர் ஆறாம் யோவானின் கட்டளைக்கு மாறாக போர்த்துக்கீச இளவரசர் முதலாம் பெத்ரோ பிரேசிலில் தங்கியிருக்க முடிவு செய்தார். பிரேசில் விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
  1857ல் கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.
  1858ல் டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
  1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.
  1878ல் இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினார்.
  1905ல் உருசியத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றன. (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 உருசியப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.
  1909ல் தென் முனைக்கு சென்ற எர்னஸ்டு சாக்கில்டன் தலைமையிலான குழு தென் முனையில் இருந்து 97 கடல் மைல் தொலைவில் பிரித்தானியக் கொடியை நாட்டியது.
  1915ல் மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த இந்நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
  1916ல் முதலாம் உலகப் போர்: உதுமானியர்களின் வெற்றியுடன் கலிப்பொலி போர்த்தொடர் முடிவுக்கு வந்தது.
  1921ல் புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
  1927ல் கனடா, மொண்ட்ரியால் நகரில் நாடக அரங்கு ஒன்றில் தீ பரவியதில் 78 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
  1951ல் ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
  1957ல் சூயசு கால்வாயை எகிப்திடம் இருந்து மீலப்பெறத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் சர் அந்தோனி ஏடென் பதவி துறந்தார்.
  1964ல் மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.
  1972ல் ஆங்காங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.
  1974ல் யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.
  1990ல் நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
  1991ல் ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பு குறித்து சுமுகமான தீர்வு காண்பதற்காக அமெரிக்க, ஈராக்கியப் பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.
  1991ல் லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியஸ் நகரை முற்றுகையிட்டது.
  1992ல் யுகோசுலாவியாவில் சிறுப்ஸ்கா குடியரசு என்ற புதிய குடியரசு நிறுவப்பட்டது.
  1992ல் முதற்தடவையாக சூரியமண்டல புறவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  2001ல் சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.
  2004ல் சட்டவிரோத அல்பேனியக் குடியேறிகளை இத்தாலிக்குஏற்றிச் சென்ற படகு ஒன்று கரபுருன் குடாவில் மூழ்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
  2005ல் பலத்தீன தேசிய ஆணையத்தின் தலைவராக மகுமுது அப்பாசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  2005ல் சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.
  2007ல் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.
  2011ல் ஈரான் விமானம் ஒன்று ஊர்மியா நகருக்கருகில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 09-01 | January 09

  1554ல் திருத்தந்தையான‌ பதினைந்தாம் கிரகோரி பிறந்த நாள். (இறப்பு-1623)
  1843ல் சௌராட்டிர மதகுருவான‌ நடனகோபாலநாயகி சுவாமிகள் பிறந்த நாள். (இறப்பு-1914)
  1868ல் தென்மார்க்கு வேதியியலாளரான‌ சோரென்சென் பிறந்த நாள். (இறப்பு‍-1939)
  1879ல் அமெரிக்க மருத்துவரான‌ ஜான் பி வாட்சன் பிறந்த நாள். (இறப்பு-1958)
  1902ல் எசுப்பானிய மதகுரவான‌ புனிதர் ஓசேமரிய எஸ்கிரிவா பிறந்த நாள். (இறப்பு-1975)
  1908ல் பிரான்சிய மெய்யியலாளரும் எழுத்தாளருமான‌ சிமோன் பொவார் பிறந்த நாள். (இறப்பு-1986)
  1913ல் அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவரான‌ ரிச்சர்ட் நிக்சன் பிறந்த நாள். (இறப்பு-1994)
  1917ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ டி. ஆர். ராமச்சந்திரன் பிறந்த நாள். (இறப்பு-1990)
  1922ல் நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க உயிரிவேதியியலாளரான‌ ஹர் கோவிந்த் கொரானா பிறந்த நாள். (இறப்பு-2011)
  1927ல் இந்திய சூழலியலாளரான‌ சுந்தர்லால் பகுகுணா பிறந்த நாள். அ
  1927ல் ஈழத்துக் கவிஞரான‌ துரைசாமி உருத்திரமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-1971)
  1928ல் தென்னிந்திய மிருதங்க கலைஞரான‌ பாலக்காடு ஆர். ரகு பிறந்த நாள். (இறப்பு-2009)
  1933ல் ஈழத்து எழுத்தாளரான‌ குறமகள் பிறந்த நாள். (இறப்பு-2016)
  1933ல் சாம்பிய-ஆங்கிலேய ஊடகவியலாளரும் நூலாசிரியரான‌ வில்பர் ஸ்மித் பிறந்த நாள்.
  1934ல் இந்தித் திரைப்படப் பாடகரான‌ மகேந்திர கபூர் பிறந்த நாள். (இறப்பு-2008)
  1951ல் தமிழகத் திரைப்பட, நாடக நடிகரான‌ ஒய். ஜி. மகேந்திரன் பிறந்த நாள்.
  1952ல் இந்தியப் பொருளியலாளரான‌ கௌசிக் பாசு பிறந்த நாள்.
  1959ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குவாத்தமாலா செயற்பாட்டாளரான‌ இரிகொபெர்த்தா மெஞ்சூ பிறந்த நாள்.
  1976ல் இந்திய நடிகரும் இயக்குனரும் நடன அமைப்பாளரான‌ ராகவா லாரன்ஸ் பிறந்த நாள்.
  1980ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ நிதின் சத்யா பிறந்த நாள்.
  1982ல் கேம்பிரிட்ச் சீமாட்டியான‌ கேத்தரின் பிறந்த நாள்.
  1989ல் பல்கேரிய-கனடிய நடிகையான‌ நீனா டோப்ரேவ் பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 09-01 | January 09

  1848ல் செருமானிய-ஆங்கிலேய வானியலாளரான‌ கரோலின் எர்ழ்செல் இறப்பு நாள். (பிறப்பு-1750)
  1873ல் பிரான்சின் மூன்றாம் நெப்போலியன் இறப்பு நாள். (பிறப்பு-1808)
  1924ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ பொன்னம்பலம் அருணாசலம் இறப்பு நாள். (பிறப்பு-1853)
  1961ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ எமிலி கிரீன் பால்ச் இறப்பு நாள். (பிறப்பு-1867)
  1979ல் தமிழறிஞரும் எழுத்தாளருமான‌ கு. கோதண்டபாணி இறப்பு நாள். (பிறப்பு-1896)
  1992ல் ஆங்கிலேய நாடகாசிரியரான‌ பில் நாக்டன் இறப்பு நாள். (பிறப்பு-1910)
  1998ல் நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளரான‌ கெனிச்சி இறப்பு நாள். (பிறப்பு-1918)
  2004ல் இந்தியக் கவிஞரும் எழுத்தாளரும் நாடகாசிரியருமான‌ நிசீம் எசெக்கியேல் இறப்பு நாள். (பிறப்பு-1924)
  2013ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ ஜேம்ஸ் எம். புக்கானன் இறப்பு நாள். (பிறப்பு-1919)
  2013ல் சவூதி அரேபியாவில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணான‌ ரிசானா நபீக் இறப்பு நாள். (பிறப்பு-1988)
  2014ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ தாலே தோமஸ் மார்டென்சென் இறப்பு நாள். (பிறப்பு-1939)
  2021ல் ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ நவரத்தினம் கேசவராஜன் இறப்பு நாள். (பிறப்பு-1962)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleJanuary 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 08
  Next articleJanuary 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 10