January 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 11

0

Today Special Historical Events In Tamil | 11-01 | January 11

January 11 Today Special | January 11 What Happened Today In History. January 11 Today Whose Birthday (born) | January-11th Important Famous Deaths In History On This Day 11/01 | Today Events In History January-11th | Today Important Incident In History | தை 11 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 11-01 | தை மாதம் 11ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 11.01 Varalatril Indru Nadanthathu Enna| January 11 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 11/01 | Famous People Born Today January 11 | Famous People died Today 11-01.

 • Today Special in Tamil 11-01
 • Today Events in Tamil 11-01
 • Famous People Born Today 11-01
 • Famous People died Today 11-01
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 11-01 | January 11

  குழந்தைகள் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தூனிசியா)
  குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (அல்பேனியா)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 11-01 | January 11

  630ல் மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர்.
  1055ல் தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார்.
  1569ல் முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
  1571ல் ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
  1693ல் சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
  1779ல் மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
  1782ல் சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச கடற்படையும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றின.ஆகத்து 29 இல் இக்கோட்டையை அவர்கள் பிரான்சிடம் இழந்தனர்.
  1787ல் யுரேனசின் டைட்டானியா, ஒபரோன் ஆகிய இரண்டு சந்திரன்களை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
  1805ல் அமெரிக்காவில் மிச்சிகன் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
  1851ல் சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
  1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
  1863ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சஸ் அருகே அலபாமா என்ற கப்பல் ஆட்டரசு என்ற கப்பலை மோதி மூழ்கடித்தது.
  1879ல் ஆங்கில-சூலூ போர் ஆரம்பமானது.
  1911ல் காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
  1922ல் நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
  1923ல் முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட இழப்பீடுகளைப் பெறும் பொருட்டு பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் படையினர் செருமனியின் ரூர் பகுதியைக் கைப்பற்றினர்.
  1935ல் அவாயில் இருந்து கலிபோர்னியா வரை தனியாகப் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை அமேலியா ஏர்ஃகாட் பெற்றார்.
  1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியர் டச்சு கிழக்கிந்தியாவின் போர்ணியோவில் தரக்கான் தீவைக் கைப்பற்றினர்.
  1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
  1946ல் கம்யூனிசத் தலைவர் என்வர் ஓக்சா அல்பேனியாவின் அரசுத் தலைவராகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
  1957ல் ஆப்பிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
  1962ல் பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி பி-37 தீப்பிடித்து அழிந்தது.
  1962ல் பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
  1966ல் இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.
  1972ல் கிழக்குப் பாக்கித்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  1994ல் அயர்லாந்து அரசு ஐரியக் குடியரசு இராணுவம், மற்றும் அதன் அரசியல் அமைப்பான சின் பெயின் ஆகியவற்றின் ஒலிபரப்புகள் மீதான 15-ஆண்டுகள் தடையை நீக்கியது.
  1998ல் அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  2007ல் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.
  2013ல் சோமாலியாவில் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் ஒருவரை விடுவிக்க எடுத்த முயற்சியில் ஒரு பிரெஞ்சுப் படைவீரரும், 17 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 11-01 | January 11

  347 உரோமைப் பேரரசரான‌ முதலாம் தியோடோசியஸ் பிறந்த நாள். (இறப்பு-395)
  1209 மங்கோலியப் பேரரசரான‌ மோங்கே கான் பிறந்த நாள். (இறப்பு-1259)
  1755 அமெரிக்கப் பொருளியலாளரும் அரசியல்வாதியுமான‌ அலெக்சாண்டர் ஆமில்டன் பிறந்த நாள். (இறப்பு-1804)
  1786 ஆங்கிலேய இயற்பியலாளரான‌ ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் பிறந்த நாள். (இறப்பு-1869)
  1842 அமெரிக்க உளவியலாளரும் மெய்யியலாளருமான‌ வில்லியம் ஜேம்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1910)
  1859 பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநரான‌ கர்சன் பிரபு பிறந்த நாள். (இறப்பு-1925)
  1901 இலங்கை மார்க்சிய இடதுசாரி அரசியல்வாதியயான‌ பிலிப் குணவர்தன பிறந்த நாள். (இறப்பு-1972)
  1906 சுவிட்சர்லாந்து வேதியியலாளரான‌ ஆல்பர்ட் ஹாப்மன் பிறந்த நாள். (இறப்பு-2008)
  1911 இலங்கை நாடகாசிரியரும் வானொலி நாடகக் கலைஞருமான‌ சானா பிறந்த நாள். (இறப்பு-1979)
  1944 இந்திய அரசியல்வாதியான‌ சிபு சோரன் பிறந்த நாள்.
  1953 இலங்கை அரசியல்வாதியான‌ ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே பிறந்த நாள். (இறப்பு-2008)
  1954 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய செயற்பாட்டாளரான‌ கைலாசு சத்தியார்த்தி பிறந்த நாள்.
  1973 இந்தியத் துடுப்பாளரான‌ ராகுல் திராவிட் பிறந்த நாள்.
  1981 இந்தியத் திரைப்பட நடிகையான‌ கிரண் ராத்தோட் பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 11-01 | January 11

  140ல் திருத்தந்தையான‌ ஹைஜீனஸ் இறப்பு நாள். (பிறப்பு-74)
  1753ல் அரிய-ஆங்கிலேய மருத்துவரான‌ ஹேன்ஸ் ஸ்லோன் இறப்பு நாள். (பிறப்பு-1660)
  1928ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ தாமஸ் ஹார்டி இறப்பு நாள். (பிறப்பு-1840)
  1932ல் இந்திய விடுதலைப் போராட்ட தியாகியான‌ திருப்பூர் இறப்பு நாள். (பிறப்பு-1904)
  1966ல் இந்தியாவின் 2வது பிரதமடான‌ லால் பகதூர் சாஸ்திரி இறப்பு நாள். (பிறப்பு-1904)
  1975ல் ஈழத்துக் கவிஞரான‌ நீலாவணன் இறப்பு நாள். (பிறப்பு-1931)
  1976ல் இலங்கையின் நடன ஆசிரியரான‌ ஏரம்பு சுப்பையா இறப்பு நாள்.
  2007ல் ஈழத்துக் கவிஞரான‌ எருவில் மூர்த்தி இறப்பு நாள்.
  2008ல் நியூசிலாந்து மலையேறியான‌ எட்மண்ட் இல்லரி இறப்பு நாள். (பிறப்பு-1919)
  2013ல் அமெரிக்கக் கணினியாளரான ஏரன் சுவோற்சு இறப்பு நாள். (பிறப்பு-1986)
  2014ல் இசுரேலின் 11வது பிரதமரான‌ ஏரியல் சரோன் இறப்பு நாள். (பிறப்பு-1928)
  2022ல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரன எம். முத்துராமன் இறப்பு நாள்.

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleJanuary 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 10
  Next articleJanuary 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 12