February 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 26

0

Today Special Historical Events In Tamil | 26-02 | February 26

February 26 Today Special | February 26 What Happened Today In History. February 26 Today Whose Birthday (born) | February-26th Important Famous Deaths In History On This Day 26/02 | Today Events In History February 26th | Today Important Incident In History | மாசி 26 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 26-02 | மாசி மாதம் 26ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 26.02 Varalatril Indru Nadanthathu Enna| February 26 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 26/02 | Famous People Born Today 26.02 | Famous People died Today 26-02.

Today Special in Tamil 26-02
Today Events in Tamil 26-02
Famous People Born Today 26-02
Famous People died Today 26-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 26-02 | February 26

விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (குவைத்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 26-02 | February 26

364ல் முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1233ல் மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.
1606ல் இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.
1616ல் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.
1658ல் வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.
1748ல் ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1794ல் கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
1815ல் இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார்.
1841ல் இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.
1876ல் யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1909ல் கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.
1935ல் இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது.
1936ல் சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1952ல் ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.
1960ல் நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.
1971ல் ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.
1980ல் எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின.
1984ல் பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1991ல் வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார்.
1992ல் நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1993ல் நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2001ல் ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
2013ல் வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.
2018ல் பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்,

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 26-02 | February 26

1564ல் ஆங்கிலேயக் கவிஞரும் எழுத்தாளருமான‌ கிறித்தோபர் மார்லொவ் பிறந்த நாள். (இறப்பு-1593)
1780ல் செருமானியக் கனிமவியலாளரான‌ கிறித்தியன் சாமுவேல் வெயிசு பிறந்த நாள். (இறப்பு-1856)
1802ல் பிரான்சிய எழுத்தாளரும் கவிஞருமான‌ விக்டர் ஹியூகோ பிறந்த நாள். (இறப்பு-1885)
1842ல் பிரான்சிய வானியலாளரான‌ காமில் பிளம்மாரியன் பிறந்த நாள். (இறப்பு-1925)
1861ல் உருசிய அரசியல்வாதியான‌ நதியெஸ்தா குரூப்ஸ்கயா பிறந்த நாள். (இறப்பு-1939)
1866ல் கனடிய-அமெரிக்கத் தொழிலதிபரான‌ எர்பர்ட்டு என்றி டவ் பிறந்த நாள். (இறப்பு-1930)
1896ல் இந்தியாவின் 4வது குடியரசுத் துணைத் தலைவரான‌ கோபால் சுவரூப் பதக் பிறந்த நாள். (இறப்பு-1982)
1903ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளரான‌ கியூலியோ நட்டா பிறந்த நாள். (இறப்பு-1979)
1928ல் இசுரேலின் 11வது பிரதமரான‌ ஏரியல் சரோன் பிறந்த நாள். (இறப்பு-2014)
1947ல் தமிழகக் கவிஞரான‌ தாராபாரதி பிறந்த நாள். (இறப்பு-2000)
1952ல் இலங்கை வரலாற்றாளரும் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான‌ தங்கேஸ்வரி கதிராமன் பிறந்த நாள். (இறப்பு-2019)
1954ல் துருக்கியின் 12வது அரசுத்தலைவரான‌ ரசிப் தைய்யிப் எர்டோகன் பிறந்த நாள்.
1982ல் சீன டென்னிசு வீராங்கனையான‌ லீ நா பிறந்த நாள்.
1983ல் பிரேசில்-போர்த்துக்கீசக் காற்பந்து வீரரான‌ பேபே பிறந்த நாள்.
1986ல் தமிழக நடிகரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான‌ மா கா பா ஆனந்த் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 26-02 | February 26

1878ல் இத்தாலிய வானியலாளரான‌ ஏஞ்செலோ சேச்சி இறப்பு நாள். (பிறப்பு-1818)
1887ல் இந்திய மருத்துவரான‌ ஆனந்தி கோபால் ஜோஷி இறப்பு நாள். (பிறப்பு-1865)
1931ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளரான‌ ஓட்டோ வாலெக் இறப்பு நாள். (பிறப்பு-1847)
1933ல் தமிழக செயற்பாட்டாளரான‌ சிவகங்கை இராமச்சந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1884)
1966ல் இந்தியக் கவிஞரும் அரசியல்வாதியுமான‌ வினாயக் தாமோதர் சாவர்க்கர் இறப்பு நாள். (பிறப்பு-1883)
1969ல் செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளரும் உளவியலாளருமான‌ கார்ல் ஜாஸ்பெர்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1883)
1998ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ தியாடர் சுலட்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1902)
2004ல் இந்திய அரசியல்வாதியான‌ எசு. பி. சவாண் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2008ல் இலங்கை அரசியல்வாதியான‌ டிரோன் பெர்னாண்டோ இறப்பு நாள். (பிறப்பு-1941)
2014ல் இலங்கை-கனடிய எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான‌ கே. எஸ். பாலச்சந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1944)
2015ல் அமெரிக்க-வங்கதேச செயற்பாட்டாளரும் பொறியியலாளருமான‌ அவிஜித் ராய் இறப்பு நாள். (பிறப்பு-1972)
2017ல் ஈழத்துப் பாடகரும் நாடகக் கலைஞருமான‌ எஸ். ஜி. சாந்தன் இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 25
Next articleFebruary 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 27