February 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 19

0

Today Special Historical Events In Tamil | 19-02 | February 19

February 19 Today Special | February 19 What Happened Today In History. February 19 Today Whose Birthday (born) | February-19th Important Famous Deaths In History On This Day 19/02 | Today Events In History February 19th | Today Important Incident In History | மாசி 19 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 19-02 | மாசி மாதம் 19ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 19.02 Varalatril Indru Nadanthathu Enna| February 19 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 19/02 | Famous People Born Today 19.02 | Famous People died Today 19-02.

Today Special in Tamil 19-02
Today Events in Tamil 19-02
Famous People Born Today 19-02
Famous People died Today 19-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 19-02 | February 19

பேரரசர் சிவாஜி ஜெயந்தி நாளாக கொண்டாடப்படுகிறது. (மகாராட்டிரம்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 19-02 | February 19

356ல் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.
1594ல் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார்.
1600ல் பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.
1649ல் இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.
1674ல் இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1807ல் அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
1815ல் கண்டிப் போர்கள்: கண்டியின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் தூம்பறை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.
1876ல் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.
1878ல் கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.
1884ல் 60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.
1913ல் பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.
1915ல் முதலாம் உலகப் போர்: தார்தனெல்சு நீரிணை மீதான முதலாவது கடற்படைத் தாக்குதல் ஆரம்பமானது. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது கலிப்பொலி கரையோரப் பகுதிகளில் குண்டுகளை வீசின. கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 சப்பானியப் போர் விமானங்கள் ஆத்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் சப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1948ல் விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.
1954ல் கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.
1959ல் ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. சைப்பிரசு அதிகாரபூர்வமாக 1960 ஆகத்து 16 இல் விடுதலை பெற்ற நாடாகியது.
1965ல் வியட்நாம் குடியரசு இராணுவத் தளபதி பாம் ஙொக் தாவோ, வடக்கு வியட்நாம் வியட் மின் கம்யூனிச உளவாளியுடன் இணைந்து (அனைவரும் கத்தோலிக்கர்கள்) தெற்கு வியட்நாமில் பௌத்தரான நியூவென் கானின் ஆட்சிக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வியடைந்தனர்.
1978ல் சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1985ல் வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.
1985ல் எசுப்பானியாவின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
1986ல் சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
1986ல் உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
2002ல் நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது.
2003ல் ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.
2006ல் மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2012ல் மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 19-02 | February 19

1473ல் போலந்து கணிதவியலாளரும் வானியலாளருமான‌ நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பிறந்த நாள். (இறப்பு-1543)
1630ல் மராட்டியப் பேரரசரான‌ சிவாஜி பிறந்த நாள். (இறப்பு-1680)
1821ல் செருமானிய மொழியியலாளரான‌ ஆகஸ்ட் சிலெய்ச்சர் பிறந்த நாள். (இறப்பு-1868)
1855ல் தமிழறிஞரான‌ உ. வே. சாமிநாதையர் பிறந்த நாள். (இறப்பு-1942)
1859ல் நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளரான‌ சுவாந்தே அறீனியசு பிறந்த நாள். (இறப்பு-1927)
1906ல் இந்திய இந்துத்துவவாதியான‌ மாதவ சதாசிவ கோல்வால்கர் பிறந்த நாள். (இறப்பு-1973)
1922ல் உத்தரப் பிரதேச காந்தியவாதியும் வரலாற்றாளருமான‌ தரம்பால் பிறந்த நாள். (இறப்பு-2006)
1922ல் இந்திய அரசியல்வாதியும் பஞ்சாப் முதலமைச்சருமான‌ பியான்ட் சிங் பிறந்த நாள். (இறப்பு-1995)
1930ல் இந்திய நடிகரும் இயக்குநருமான‌ கே. விஸ்வநாத் பிறந்த நாள்.
1941ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ டேவிட் கிராஸ் பிறந்த நாள்.
1947ல் தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகரான‌ பாண்டு பிறந்த நாள். (இறப்பு-2021)
1953ல் அர்ச்செந்தீனாவின் 52வது அரசுத்தலைவரான‌ கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர் பிறந்த நாள்.
1960ல் யார்க் கோமகன் இளவரசரான‌ ஆண்ட்ரூ பிறந்த நாள்.
1989ல் தென்னிந்திய நடிகையான‌ சரண்யா மோகன் பிறந்த நாள்.
1993ல் அமெரிக்க நடிகையும் பாடகியுமான‌ விக்டோரியா ஜஸ்டிஸ் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 19-02 | February 19

1553ல் செருமானிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ எராசுமசு இரீன்கோல்டு இறப்பு நாள். (பிறப்பு-1511)
1897ல் செருமானியக் கணிதவியலாளரான‌ கார்ல் வியர்ஸ்ட்ராஸ் இறப்பு நாள். (பிறப்பு-1815)
1915ல் இந்திய மெய்யியலாளரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ கோபால கிருஷ்ண கோகலே இறப்பு நாள். (பிறப்பு-1866)
1916ல் ஆத்திரிய-செக் இயற்பியலாளரும் மெய்யியலாளருமான‌ எர்ன்ஸ்ட் மாக் இறப்பு நாள். (பிறப்பு-1838)
1937ல் தமிழக நாதசுவர இசைக் கலைஞரான‌ சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1884)
1950ல் இலங்கை யேசு சபை மதகுருவும் வரலாற்றாளரான‌ சைமன் கிரகரி பெரேரா இறப்பு நாள். (பிறப்பு-1882)
1962ல் பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவரான‌ ஜியார்ஜியோ பாபனிகொலாவு இறப்பு நாள். (பிறப்பு-1883)
1981ல் தமிழகச் சிறுகதை எழுத்தாளரான‌ ஜி. நாகராஜன் இறப்பு நாள். (பிறப்பு-1929)
1988ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ எஸ். வி. சகஸ்ரநாமம் இறப்பு நாள். (பிறப்பு-1913)
1997ல் சீன அரசியல்வாதியான‌ டங் சியாவுபிங் இறப்பு நாள். (பிறப்பு-1904)
2003ல் அமெரிக்க மருத்துவரும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடியுமான‌ ஜேம்ஸ் ஹார்டி இறப்பு நாள். (பிறப்பு-1918)
2012ல் டச்சு மெய்யியலாளரான‌ பெடரிக்கு இசுட்டால் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2014ல் அமெரிக்கக் கணிணி அறிவியலாளரான‌ ஜிம் விரிச் இறப்பு நாள். (பிறப்பு-1956)
2016ல் இத்தாலியக் குறியியலாளரும் எழுத்தாளருமான‌ உம்பெர்த்தோ எக்கோ இறப்பு நாள். (பிறப்பு-1932)
2016ல் அமெரிக்க எழுத்தாளரான‌ ஹார்ப்பர் லீ இறப்பு நாள். (பிறப்பு-1926)
2020ல் தமிழகத் தவில் கலைஞரான‌ திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1948)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 18
Next articleFebruary 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 20