Today Special Historical Events In Tamil | 18-02 | February 18
February 18 Today Special | February 18 What Happened Today In History. February 18 Today Whose Birthday (born) | February-18th Important Famous Deaths In History On This Day 18/02 | Today Events In History February 18th | Today Important Incident In History | மாசி 18 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 18-02 | மாசி மாதம் 18ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 18.02 Varalatril Indru Nadanthathu Enna| February 18 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 18/02 | Famous People Born Today 18.02 | Famous People died Today 18-02.
Today Special in Tamil 18-02
Today Events in Tamil 18-02
Famous People Born Today 18-02
Famous People died Today 18-02
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 18-02 | February 18
தேசிய சனநாயக நாளாக கொண்டாடப்படுகிறது.(நேபாளம், 1951 ராணா வம்ச ஆட்சி ஒழிப்பு)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.(காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1965)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 18-02 | February 18
1229ல் 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார்.
1332ல் எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் சேயோன் தெற்கு முசுலிம் மாகாணங்களில் தனது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
1478ல் இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1637ல் எண்பதாண்டுப் போர்: இங்கிலாந்தின் கோர்ன்வால் கரையில், எசுப்பானியக் கடற்படைக் கப்பல்கள் மிக முக்கியமான ஆங்கிலோ-டச்சு வணிகக் கப்பல்கள் 44 ஐ வழிமறித்துத் தாக்கி அவற்றில் இருபதைக் கைப்பற்றின. ஏனையவை அழிக்கப்பட்டன.
1745ல் மத்திய சாவகத்தில் சுராகார்த்தா நகரம் உருவாக்கப்பட்டு, சுராகார்த்தா சுல்தானகத்தின் தலைநகராக்கப்பட்டது.
1797ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ரால்ஃப் அபகுரொம்பி தலைமையில் 18 பிரித்தானியக் கப்பல்கள் திரினிடாடை ஊடுருவின.
1832ல் யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிவெள்ளி தோன்றியது
1861ல் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1861ல் மான்ட்கமரியில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் சேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.
1873ல் பல்கேரியப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி சோஃபியா நகரில் உதுமானியர்களால் தூக்கிலிடப்பட்டார்.
1911ல் முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.
1930ல் சனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் கிளைட் டோம்பா புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.
1932ல் சீனக் குடியரசிடம் இருந்து மஞ்சுகோவின் விடுதலையை சப்பான் மன்னர் அறிவித்தார்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் யப்பானிய இராணுவம் சப்பானிய விரோத சீனர்களைத் தேடி அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிப் படையினர் வெள்ளை ரோசா இயக்கத்தினரைக் கைது செய்தனர்.
1946ல் மும்பைத் துறைமுகத்தில் இடம்பெற்ற கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் பிரித்தானிய இந்தியாவின் ஏனைய மாகாணங்களுக்கும் பரவியது.
1946ல் இலங்கையில் ருவான்வெலிசாய தாதுகோபுரத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான புத்தரின் உருவ ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.
1947ல் பிரான்சியப் படையினர் அனோய் நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வியட் மின் படைகள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.
1948ல் மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா இதனைப் பெற்றுக் கொண்டார்.
1957ல் நியூசிலாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1957ல் கென்யாவின் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமாத்தி பிரித்தானியக் குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
1959ல் நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1965ல் காம்பியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1972ல் கலிபோர்னியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைத்துக் கைதிகளினதும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1991ல் இலண்டனில் ஐஆர்ஏ போராளிகள் படிங்டன், விக்டோரியா தொடருந்து நிலையங்களில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.
1992ல் மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.
2001ல் அமெரிக்கப் புலனாய்வாளர் ராபர்ட் ஆன்சென் சோவியத் ஒன்றியத்தின் உளவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
2001ல் இந்தோனேசியாவில் தயாக், மதுரா மக்களிடையே இனக்கலவரம் வெடித்தது. 500 பேர் வரையில் உயிரிழந்தனர். 100,000 மதுரா மக்கள் இடம்பெயர்ந்தனர்.
2003ல் தென் கொரியாவில் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
2004ல் ஈரான், நிசாப்பூர் நகரில் கந்தகம், பெட்ரோல், உரம் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 295 பேர் உயிரிழந்தனர்.
2007ல் அரியானாவின் பானிப்பத் நகரில் விரைவுத் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
2010ல் விக்கிலீக்ஸ் பிராட்லி மானிங் என்ற அமெரிக்க இராணுவ வீர்ர் ஒருவர் கொடுத்த இரகசிய ஆவணங்களின் முதல் தொகுதியை வெளியிட்டது.
2013ல் பெல்சியத்தின் பிரசெல்சு வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் $50 மில்லியன் பெறுமதியான வைரங்கள் கொள்ளையிடப்பட்டன.
2014ல் உக்ரைன் தலைநகர் கீவில் ஆர்பாட்டக்காரர்களுக்கும், காவல்துரையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 76 பேர் உயிரிழந்தனர்,
2014ல் இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
2018ல் ஈரானின் அசிமான் விமானம் 3704 சக்ரோசு மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 65 பேரும் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 18-02 | February 18
கிமு 259ல் சீனப் பேரரசரான சின் சி ஹுவாங் பிறந்த நாள். (இறப்பு-கிமு 210)
1201ல் பாரசீக அறிவியலாளரான நசீருத்தீன் அத்-தூசீ பிறந்த நாள். (இறப்பு-1274)
1486ல் இந்திய மதகுருவான சைதன்யர் பிறந்த நாள். (இறப்பு-1534)
1516ல் இங்கிலாந்தின் அரசியாக இருந்த முதலாம் மேரி பிறந்த நாள். (இறப்பு-1558)
1745ல் மின்கலத்தைக் கண்டுபிடித்த இத்தாலிய இயற்பியலாளரான வோல்ட்டா பிறந்த நாள். (இறப்பு-1827)
1836ல் இந்திய ஆன்மிகத் தலைவரான இராமகிருஷ்ணர் பிறந்த நாள். (இறப்பு-1886)
1838ல் ஆத்திரிய இயற்பியலாளரும் மெய்யியலாளருமான எர்ன்ஸ்ட் மாக் பிறந்த நாள். (இறப்பு-1916)
1860ல் இந்தியப் பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமான மா. சிங்காரவேலர் பிறந்த நாள். (இறப்பு-1946)
1877ல் பிரித்தானிய வானியலாளரான அலைசு கிரேசு குக் பிறந்த நாள். (இறப்பு-1958)
1909ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான சி. அருளம்பலம் பிறந்த நாள்.
1922ல் உருசிய ஓவியரான அலெக்சாண்டர் செமியோனவ் பிறந்த நாள். (இறப்பு-1984)
1925ல் இந்திய எழுத்தாளரான கிருஷ்ணா சோப்தி பிறந்த நாள். (இறப்பு-2019)
1926ல் தமிழக மொழியியல் அறிஞரான வ. ஐ. சுப்பிரமணியம் பிறந்த நாள். (இறப்பு-2009)
1927ல் இந்திய சித்தார் கலைஞரான அப்துல் ஹலீம் ஜாபர் கான் பிறந்த நாள். (இறப்பு-2017)
1931ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரான டோனி மாரிசன் பிறந்த நாள். (இறப்பு-2019)
1974ல் அமெரிக்க சூழலியலாளரான ஜூலியா பட்டர்பிளை ஹில் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 18-02 | February 18
1294ல் மங்கோலியப் பேரரசரான குப்லாய் கான் இறப்பு நாள். (பிறப்பு-1215)
1405ல் மங்கோலிய ஆட்சியாளரான தைமூர் இறப்பு நாள். (பிறப்பு-1336)
1546ல் செருமானிய இறையியலாளரான மார்ட்டின் லூதர் இறப்பு நாள். (பிறப்பு-1483)
1564ல் இத்தாலிய சிற்பியும் ஓவியருமான மைக்கலாஞ்சலோ இறப்பு நாள். (பிறப்பு-1475)
1938ல் சோவியத் கோட்பாட்டு இயற்பியலாளரான மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன் இறப்பு நாள். (பிறப்பு-1906)
1967ல் அமெரிக்க இயற்பியலாளரான ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1990ல் இலங்கை ஊடகவியலாளரான ரிச்சர்ட் டி சொய்சா இறப்பு நாள். (பிறப்பு-1958)
2015ல் தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான டி. ராமா நாயுடு இறப்பு நாள். (பிறப்பு-1936)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan