February 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 17

0

Today Special Historical Events In Tamil | 17-02 | February 17

February 17 Today Special | February 17 What Happened Today In History. February 17 Today Whose Birthday (born) | February-17th Important Famous Deaths In History On This Day 17/02 | Today Events In History February 17th | Today Important Incident In History | மாசி 17 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 17-02 | மாசி மாதம் 17ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 17.02 Varalatril Indru Nadanthathu Enna| February 17 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 177/02 | Famous People Born Today 17.02 | Famous People died Today 17-02.

Today Special in Tamil 17-02
Today Events in Tamil 17-02
Famous People Born Today 17-02
Famous People died Today 17-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 17-02 | February 17

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கொசோவோ, 2008)
புரட்சி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (லிபியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 17-02 | February 17

364ல் உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார்.
1600ல் மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
1739ல் மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1753ல் சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது.
1788ல் லெப்டினண்ட் போல் என்பவன் சிட்னியில் இருந்து நோர்போக் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
1838ல் தென்னாப்பிரிக்காவில் நத்தாலில் நூற்றுக்கணக்கான இடச்சுக் குடியேறிகளை சூலு இனத்தோர் கொன்றனர்.
1854ல் ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.
1863ல் ஜெனீவாவின் குடிமக்கள் சிலர் இணைந்து காயமடைந்தோர்க்கான பன்னாட்டு நிவாரணக் குழுவை அமைத்தனர். இது பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது.
1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.
1867ல் சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.
1871ல் பிரான்சிய-புருசியப் போரில் பாரிசு நகரைக் கைப்பற்றிய புருசிய இராணுவம் பாரிசு நகரில் வெற்றி ஊர்வலத்தை நடத்தியது.
1881ல் இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302,500, யாழ்ப்பாணத்தில் 40,057 ஆகக் கணக்கெடுக்கப்பட்டது.
1933ல் நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.
1936ல் சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.
1947ல் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு ஆரம்பித்தது.
1948ல் இலங்கை, காலியில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
1957ல் மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.
1959ல் முதலாவது காலநிலை செய்மதி வான்கார்ட் 2 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1964ல் காபொனில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் லேயொன் உம்பா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1965ல் அப்பல்லோ 11 மூலம் நிலாவிற்கு மனிதரை அனுப்புவதற்கு முன்னோட்டமாக நிலாவில் தரையிறங்குவதற்கான இடத்தைப் படம் எடுப்பதற்காக ரேஞ்சர் 8 விண்கலம் ஏவப்பட்டது.
1978ல் ஐரியக் குடியரசுப் படை போராளிகள் பெல்பாஸ்ட் நகரில் உணவு விடுதி ஒன்றில் எரிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
1979ல் மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.
1982ல் இலங்கைத் துடுப்பாட்ட அணி தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக கொழும்பு ஓவல் அரங்கில் விளையாடியது.
1990ல் இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
1992ல் நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் கரதாக்லி நகர ஊடுருவலில் 20 இற்கும் அதிகமான அசர்பைசானியரைக் கொன்றனர்.
1995ல் பெருவுக்கும், எக்குவதோருக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஐநா முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.
1996ல் நாசாவின் டிசுக்கவரி திட்டம் ஆரம்பமானது. 433 ஈரோசு சிறுகோளில் தரையிறங்கும் நோக்கோடு நியர் சூமேக்கர் என்ற விண்கலம் ஏவப்பட்டது.
1996ல் பிலடெல்பியாவில் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ மீத்திறன் கணினியை வென்றார்.
1996ல் இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 8.2 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை இடம்பெற்றதில் 166 பேர் உயிரிழந்தனர். 423 பேர் காயமடைந்தனர்.
2000ல் விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.
2006ல் பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,126 பேர் உயிருடன் புதையுண்டனர்.
2008ல் கொசோவோ செர்பியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
2011ல் அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின.
2015ல் எயிட்டியில் இடம்பெற்ற மார்டி கிரா பவனியில் ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர், 78 பேர் காயமடைந்தனர்.
2016ல் துருக்கி, அங்காரா நகரில் இராணுவ வாகனக்கள் வெடித்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர், 61 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 17-02 | February 17

1201ல் பாரசீக வானியலாளரும் உயிரியலாளருமான‌ நசீருத்தீன் அத்-தூசீ பிறந்த நாள். (இறப்பு-1274)
1723ல் செருமானிய வானியலாளரான‌ டோபியாஸ் மேயர் பிறந்த நாள். (இறப்பு-1762)
1781ல் இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவரான‌ ரெனே லென்னக் பிறந்த நாள். (இறப்பு-1826)
1888ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ ஆட்டோ ஸ்டர்ன் பிறந்த நாள். (இறப்பு-1969)
1890ல் ஆங்கிலேய-ஆத்திரேலிய உயிரியலாளரும் கணிதவியலாளருமான‌ ரொனால்டு பிசர் பிறந்த நாள். (இறப்பு-1962)
1910ல் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும் கருநாடக இசைப் பாடகருமான‌ கொத்தமங்கலம் சீனு பிறந்த நாள். (இறப்பு-2001)
1918ல் கனடிய அரசியல்வாதியான‌ சான்-சார்லஸ் கான்டின் பிறந்த நாள். (இறப்பு-2005)
1927ல் கியூபப் புரட்சியாளரான‌ யுவான் அல்மெய்டா பிறந்த நாள். (இறப்பு-2009)
1929ல் ஈழத்து-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளரான‌ கவிஞர் அம்பி பிறந்த நாள்.
1930ல் கேரள மெய்யியலாளரும் இறைமறுப்பாளருமான‌ பசவ பிரேமானந்த் பிறந்த நாள். (இறப்பு-2009)
1938ல் மலேசியத் தமிழ் எழுத்தாளரான‌ அறிவானந்தன் பிறந்த நாள். (இறப்பு-2000)
1955ல் நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளரான‌ மோ யான் பிறந்த நாள்.
1965ல் அமெரிக்க இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ மைக்கேல் பே பிறந்த நாள்.
1975ல் தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும் திரைப்பட நடிகருமான‌ வடிவேல் பாலாஜி பிறந்த நாள். (இறப்பு-2020)
1981ல் அமெரிக்க நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ ஜோசப் கார்டன்-லெவிட் பிறந்த நாள்.
1981ல் அமெரிக்க நடிகையான‌ பாடகியான‌ பாரிஸ் ஹில்டன் பிறந்த நாள்.
1984ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாளரான‌ ஏ பி டி வில்லியர்ஸ் பிறந்த நாள்.
1984ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சதா பிறந்த நாள்.
1985ல் தமிழக நடிகரான‌ சிவகார்த்திகேயன் பிறந்த நாள்.
1991ல் ஆங்கிலேயப் பாடகரான‌ எட் சீரன் பிறந்த நாள்.
1991ல் ஆங்கிலேய நடிகையும் இயக்குநருமான‌ போனி ரைட் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 17-02 | February 17

1553ல் மைசூர் மன்னரான‌ மூன்றாம் சாமராச உடையார் இறப்பு நாள். (பிறப்பு-1492)
1600ல் இத்தாலியக் கணிதவியலாளரும் வானியலாளரும் மெய்யியலாளருமான‌ கியோர்டானோ புரூணோ இறப்பு நாள். (பிறப்பு-1548)
1673ல் பிரான்சிய நடிகரான‌ மொலியர் இறப்பு நாள். (பிறப்பு-1622)
1865ல் அமெரிக்க வானியலாளரான‌ ஜார்ஜ் பிலிப்சு பாண்டு இறப்பு நாள். (பிறப்பு-1825)
1874ல் பெல்ச்சிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ அடால்ப் குவெட்லெட் இறப்பு நாள். (பிறப்பு-1796)
1907ல் அமெரிக்க இராணுவ அதிகாரியும் பிரம்மஞான சபையின் நிறுவனருமான‌ என்றி ஆல்காட் இறப்பு நாள். (பிறப்பு-1832)
1909ல் அமெரிக்கப் பழங்குடித் தலைவரான யெரொனீமோ இறப்பு நாள். (பிறப்பு-1829)
1956ல் தமிழறிஞரும் பதிப்பாளருமான‌ எஸ். வையாபுரிப்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1891)
1986ல் இந்திய-அமெரிக்க மெய்யியலாளரான‌ ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1895)
1988ல் பீகாரின் 11வது முதலமைச்சரான‌ கர்ப்பூரி தாக்கூர் இறப்பு நாள். (பிறப்பு-1924)
1994ல் இலங்கைத் தமிழறிஞரும் கவிஞரும் வானொலி ஒலிபரப்பாளருமான‌ நாவற்குழியூர் நடராஜன் இறப்பு நாள். (பிறப்பு-1910)
1994ல் இந்திய அரசியல்வாதியான சிமன்பாய் படேல் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2010ல் ஈழத்துக் கலைஞரான‌ மணிமேகலை இராமநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1946)
2014ல் கருநாடக இசைப் பாடகரான ஆர். கே. ஸ்ரீகண்டன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2016ல் இலங்கை நாடகக் கலைஞரும் ஒப்பனைக் கலைஞரும் ஒளிப்பதிவாளரும் சிற்பக் கலைஞருமான‌ எஸ். ரி. அரசு இறப்பு நாள். (பிறப்பு-1926)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 13.10.2022 Today Rasi Palan 13-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleFebruary 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 18