Today Special Historical Events In Tamil | 04-02 | February 04
February 04 Today Special | February 04 What Happened Today In History. February 04 Today Whose Birthday (born) | February-4th Important Famous Deaths In History On This Day 04/02 | Today Events In History February 4th | Today Important Incident In History | மாசி 04 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 04-02 | மாசி மாதம் 04ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 04.02 Varalatril Indru Nadanthathu Enna| February 04 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 04/02 | Famous People Born Today 04.02 | Famous People died Today 04-02.
Today Special in Tamil 04-02
Today Events in Tamil 04-02
Famous People Born Today 04-02
Famous People died Today 04-02
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 04-02 | February 04
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (இலங்கை)
உலகப் புற்றுநோய் நாளாக கொண்டாடப்படுகிறது.
ஆயுதப் போராட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. (அங்கோலா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 04-02 | February 04
211ல் உரோமைப் பேரரசர் செப்டிமசு செவெரசு இறந்தார். தமக்கிடையே சண்டை பிடிக்கும் அவரது இரண்டு மகன்களின் கட்டுப்பாட்டில் பேரரசு வந்தது.
960ல் சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
1169ல் சிசிலியை நிலநடுக்கம் தாக்கியதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தோ அல்லது இறந்தோ போயினர்.
1488ல் பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் முதலாவது ஐரோப்பியக் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
1555ல் ஜான் ரொஜர்சு தீயிட்டுக் கொல்லப்பட்டார். இவரே இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கீழ் முதலாவது சீர்திருத்தத் திருச்சபை ஆங்கிலேயத் தியாகியானவர்.
1703ல் தோக்கியோவில் 46 சாமுராய்கள் தமது தலைவரின் இறப்பை ஈடு செய்யும் பொருட்டு சடங்குத் தற்கொலை செய்து கொண்டனர்.
1783ல் ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.
1789ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1794ல் முதல் பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும் 1802 இல் பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில் aடிமை முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.
1797ல் எக்குவதோரில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1810ல் கரிபியன் தீவுகளான குவாதலூப்பு பிரித்தானிய அரச கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
1834ல் இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக கொழும்பு ஒப்சேர்வர் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
1859ல் கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: மான்ட்கமரியில், பிரிந்து சென்ற ஆறு அமெரிக்க மாநிலங்கள் இணைந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கின.
1899ல் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் மணிலா சமருடன் ஆரம்பமாகியது.
1932ல் இரண்டாம் சீன-சப்பானியப் போர்: கார்பின், மஞ்சூரியா, சப்பானிடம் வீழ்ந்தன.
1936ல் முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.
1938ல் இட்லர் தன்னை செருமனியின் இராணுவ உயர் தளபதியாக அறிவித்தார்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: “மூன்று பெரும் தலைவர்கள்” (சர்ச்சில், ரூசவெல்ட், ஸ்டாலின்) உக்ரேனில் கிரிமியாவில் நடந்த யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.
1948ல் இலங்கை பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் இலங்கை மேலாட்சி என்ற பெயரில் விடுதலை அடைந்தது.
1957ல் இலங்கை விடுதலை நாளை திருகோணமலையில் துக்க நாளாக அனுட்டித்த தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் திருமலை நடராசன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
1961ல் அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது.
1966ல் நிப்போன் ஏர்வேய்சு விமானம் டோக்கியோ வளைகுடாவில் வீழ்ந்ததில் 133 பேர் உயிரிழந்தனர்.
1969ல் பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
1974ல் ஐரியக் குடியரசுப் படை போராளிகள் இங்கிலாந்து யோர்க்சயர் நகரில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றைக் குண்டு வைத்துத் தகர்த்ததில் ஒன்பது இராணுவத்தினரும் 3 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1975ல் சீனாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,041 பேர் உயிரிழந்தனர்.
1976ல் குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
1977ல் சிகாகோவில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 11 பேர் உயிரிழந்தனர், 180 பேர் காயமடைந்தனர்.
1978ல் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.
1992ல் ஊகோ சாவெசு தலைமையில் வெனிசுவேலாவில் அரசுத்தலைவர் கார்லோசு பேரெசுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1997ல் இசுரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் உயிரிழந்தனர்.
1998ல் ஆப்கானித்தானில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,323 பேர் உயிரிழந்தனர்.
2003ல் யுகோசுலாவியா அதிகாரபூர்வமாக செர்பியாவும் மொண்டெனேகுரோவும் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
2004ல் மார்க் சக்கர்பெர்க் முகநூல் என்ற சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.
2007ல் ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் உருசிய-இந்திய “பிரமாசு” ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
2007ல் வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
2015ல் டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் தாய்வான் தலைநகர் தாய்பெய்யில் கீலுங் ஆற்றில் விழுந்ததில் 43 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 04-02 | February 04
1811ல் பிரான்சிய கத்தோலிக்க குருவும் புனிதருமான பீட்டர் ஜூலியன் ஐமார்ட் பிறந்த நாள். (இறப்பு-1868)
1875ல் செருமானிய இயற்பியலாளரும் பொறியியலாளருமான லுட்விக் பிராண்டில் பிறந்த நாள். (இறப்பு-1953)
1891ல் இந்திய அரசியல்வாதியும் 2வது இந்திய மக்களவைத் தலைவரான மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் பிறந்த நாள். (இறப்பு-1978)
1893ல் ஆத்திரேலியத் தொல்லியலாளரும் புதை படிவ ஆய்வாளரும் உடற்கூறியலாளருமான ரேமாண்ட் டார்ட் பிறந்த நாள். (இறப்பு-1988)
1895ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகருமான பி. ஏ. சுப்பையா பிள்ளை பிறந்த நாள்.
1906ல் புளூட்டோவைக் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளருமான கிளைட் டோம்பா பிறந்த நாள். (இறப்பு-1997)
1913ல் அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளரான றோசா பாக்ஸ் பிறந்த நாள். (இறப்பு-2005)
1921ல் அமெரிக்க எழுத்தாளரான பெட்டி ஃப்ரீடன் பிறந்த நாள். (இறப்பு-2006)
1922ல் இந்துஸ்தானி இசைப் பாடகரான பீம்சென் ஜோஷி பிறந்த நாள். (இறப்பு-2011)
1943ல் தமிழக பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம் பிறந்த நாள்.
1943ல் பி நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கரும் கென் தாம்ப்சன் பிறந்த நாள்.
1948ல் நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவரான ராம் பரன் யாதவ் பிறந்த நாள்.
1962ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான ராஜசேகர் பிறந்த நாள்.
1971ல் அமெரிக்க நடிகரான ரோப் கோர்ட்றி பிறந்த நாள்.
1974ல் இந்திய நடிகையான ஊர்மிளா மடோண்த்கர் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 04-02 | February 04
1693ல் போர்த்துக்கீச இயேசு சபை குருவான ஜான் டி பிரிட்டோ இறப்பு நாள். (பிறப்பு-1647)
1747ல் இத்தாலியத் தமிழறிஞரும் கிறித்தவ மதப் பரப்புனருமான வீரமாமுனிவர் இறப்பு நாள். (பிறப்பு-1680)
1817ல் செச்சினிய முஸ்லிம் அரசியல் மற்றும் சமயத் தலைவருமான இமாம் ஷாமில் இறப்பு நாள். (பிறப்பு-1797)
1894ல் சாக்சபோனைக் கண்டுபிடித்த பெல்ஜியரான அடோல்ப் சக்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1814)
1928ல் நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளரான என்ட்ரிக் லொரன்சு இறப்பு நாள். (பிறப்பு-1853)
1934ல் ஒடிசா கவிஞரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான மதுசூதன் தாசு இறப்பு நாள். (பிறப்பு-1848)
1946ல் தென்னாப்பிரிக்க கட்டிடக் கலைஞரான எர்பெர்ட்டு பேக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1862)
1957ல் இலங்கை மலையக அரசியல்வாதியும் கல்வியாளரும் தொழிற்சங்கத் தலைவருமான பெரி. சுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1890)
1974ல் இந்திய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான சத்தியேந்திர நாத் போசு இறப்பு நாள். (பிறப்பு-1894)
1985ல் தமிழகப் பதிப்பாசிரியரும் நூலாசிரியருமான மே. வீ. வேணுகோபாலன் இறப்பு நாள். (பிறப்பு-1896)
1987ல் அமெரிக்க உளவியலாளரான கார்ல் ரோஜர்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1902)
2006ல் அமெரிக்க எழுத்தாளரான பெட்டி ஃப்ரீடன் இறப்பு நாள். (பிறப்பு-1921)
2007ல் தமிழக அரசியல்வாதியும் பேச்சாளருமான புளியங்குடி க. பழனிச்சாமி இறப்பு நாள். (பிறப்பு-1938)
2014ல் இந்திய பொருளியலாளருமான அனிருத் லால் நகர் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2015ல் ஈழத்து வில்லிசைக் கலைஞருமான சின்னமணி இறப்பு நாள். (பிறப்பு-1936)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan