February 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 03

0

Today Special Historical Events In Tamil | 03-02 | February 03

February 03 Today Special | February 03 What Happened Today In History. February 03 Today Whose Birthday (born) | February-3rd Important Famous Deaths In History On This Day 03/02 | Today Events In History February 3rd | Today Important Incident In History | மாசி 03 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 03-02 | மாசி மாதம் 03ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 03.02 Varalatril Indru Nadanthathu Enna| February 03 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 03/02 | Famous People Born Today 03.02 | Famous People died Today 03-02.

Today Special in Tamil 03-02
Today Events in Tamil 03-02
Famous People Born Today 03-02
Famous People died Today 03-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 03-02 | February 03

கம்யூனிஸ்டுக் கட்சி நிறுவன நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (வியட்நாம்)
மாவீரர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 03-02 | February 03

1377ல் இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1451ல் சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார்.
1488ல் போர்த்துகலின் பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியரானார்.
1509ல் இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது.
1661ல் மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது.
1690ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1706ல் புரோஸ்டட் போரில் சுவீடன் படை சாக்சனி-போலந்து-உருசியக் கூட்டுப் படைகளை இரட்டை சுற்றி வளைப்பு உத்தியைப் பயன்படுத்தி வென்றது.
1781ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படை இடச்சின் கட்டுப்பாட்டில் இருந்த சின்டு யுசுடாசியசு என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றியது.
1783ல் ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.
1807ல் பிரித்தானியப் படை சர் சாமுவேல் ஓசுமுட்டி தலைமையில் மொண்டேவீடியோவைக் (இன்றைய உருகுவேயின் தலைநகர்) கைப்பற்றியது.
1830ல் கிரேக்கம் உதுமானியப் பேரரசிடம் இருந்து கிரேக்கம் முழுமையாக விடுதலை அடைவதற்கு ஏதுவான உடன்பாடு இலண்டனில் எட்டப்பட்டது.
1870ல் ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1876ல் பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1870ல் ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1894ல் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1913ல் ஐக்கிய அமெரிக்காவில் வருமான வரி அறவிடும் உரிமை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டது.
1916ல் கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது. ஏழு பேர் உயிரிழந்தனர்.
1917ல் முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனியுடனான தூதரக உறவைth thuNdiththathu.
1930ல் பிரித்தானிய ஆங்காங்கின் கவுலூனில் இடம்பெற்ற மாநாட்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1931ல் நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் உயிரிழந்தனர்.
1943ல் டோர்செசுடர் என்ற அமெரிக்கக் கப்பல் செருமனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில், 902 பேரில் 230 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க இராணுவ, கடற்படைகள் சப்பானிடம் இருந்து மார்சல் தீவுகளைக் கைப்பற்றின.
1945ல் இரண்டாம் உலகப் போர்: மணிலா நகரை சப்பானிடம் இருந்து கைப்பற்ற அமெரிக்காவும் பிலிப்பீன்சும் ஒரு மாதம் நீடித்த போரைத் தொடங்கின.
1945ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. 2,500 முதல் 3,000 வரையானோர் கொல்லப்பட்டனர்.
1966ல் சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
1969ல் யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.
1972ல் ஈரானைப் பெரும் பனிப்புயல் தாக்கியது. அடுத்த ஏழு நாட்களில் 4,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1984ல் அமெரிக்காவில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பெண்ணில் இருந்து மற்றொருவருக்கு கருமாற்றம் வெற்றிகரமாக நிறைவேற்ரப்பட்டது.
1984ல் சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
1989ல் பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெசுனர் பதவியிழந்தார்.
1998ல் இத்தாலியில் தாழப் பறந்த விமானம் ஒன்று கம்பிவட ஊர்தியொன்றின் கம்பிகளை அறுத்ததில், 20 பேர் உயிரிழந்தனர்.
1998ல் தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2006ல் அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
2007ல் பக்தாத் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர்.
2014ல் மாஸ்கோ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ர துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், 29 மாணவரக்ள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 03-02 | February 03

1504ல் இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினாலான‌ ஸ்கிபியோன் ரெபிபா பிறந்த நாள். (இறப்பு-1577)
1821ல் அமெரிக்க மருத்துவரும் கல்வியாளருமான‌ எலிசபெத் பிளாக்வெல் பிறந்த நாள். (இறப்பு-1910)
1893ல் அமெரிக்க வேதியியலாளரான லியோனோரா பில்கெர் பிறந்த நாள். (இறப்பு-1974)
1898ல் பின்லாந்துக் கட்டிடக் கலைஞரான‌ அல்வார் ஆல்ட்டோ பிறந்த நாள். (இறப்பு-1976)
1899ல் சீன எழுத்தாளரான‌ லாவ் ஷே பிறந்த நாள். (இறப்பு-1966)
1900ல் தமிழக வேதியியலாளரான‌ டி. ஆர். சேஷாத்ரி பிறந்த நாள். (இறப்பு-1975)
1930ல் கருநாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞரான‌ மணி கிருஷ்ணசுவாமி பிறந்த நாள். (இறப்பு-2012)
1933ல் பர்மிய அரசியல்வாதியும் பிரதமருமான‌ தான் சுவே பிறந்த நாள்.
1938ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ வஹீதா ரெஹ்மான் பிறந்த நாள்.
1944ல் தமிழக எழுத்தாளரும் கவிஞரும் தொழிற்சங்கவாதியுமான‌ கந்தர்வன் பிறந்த நாள். (இறப்பு-2004)
1963ல் இந்தியப் பொருளியல் அறிஞரும் கல்வியாளருமான‌ ரகுராம் கோவிந்தராஜன் பிறந்த நாள்.
1966ல் அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான‌ பிராங்க் கெரசி பிறந்த நாள்.
1983ல் தமிழக நடிகரான‌ சிலம்பரசன் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 03-02 | February 03

1468ல் அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்த செருமானியரான‌ யோகான்னசு கூட்டன்பர்கு இறப்பு நாள். (பிறப்பு-1398)
1855ல் அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வரான‌ டானியல் புவர் இறப்பு நாள்.
1883ல் செருமானிய இயக்குநரும் இசையமைப்பாளருமான‌ ரிச்சார்ட் வாக்னர் இறப்பு நாள். (பிறப்பு-1813)
1900ல் தமிழகக் கிறித்தவத் தமிழ்ப் புலவரான‌ எ. ஆ. கிருட்டிணப் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1827)
1915ல் ஆபிரிக்க விடுதலைப் போராளியான‌ யோன் சிலம்புவே இறப்பு நாள். (பிறப்பு-1871)
1919ல் அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளருமான‌ எட்வார்டு சார்லசு பிக்கரிங் இறப்பு நாள். (பிறப்பு-1846)
1924ல் அமெரிக்காவின் 28வது அரசுத்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான‌ ஊட்ரோ வில்சன் இறப்பு நாள். (பிறப்பு-1856)
1925ல் ஆங்கில மின்பொறியாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ ஆலிவர் ஹெவிசைடு இறப்பு நாள். (பிறப்பு-1850)
1964ல் ஈழத்து அரசியல்வாதியான‌ கதிரவேலு சிற்றம்பலம் இறப்பு நாள். (பிறப்பு-1898)
1969ல் தமிழகத்தின் 7வது முதலமைச்சரும் எழுத்தாளருமான‌ கா. ந. அண்ணாதுரை இறப்பு நாள். (பிறப்பு-1909)
1975ல் அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ வில்லியம் டி. கூலிட்ச் இறப்பு நாள். (பிறப்பு-1873)
1975ல் எகிப்தியப் பாடகியும் நடிகையுமான‌ உம் குல்தூம் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1987ல் பிரித்தானிய மார்க்சியப் புலமையாளரும் மானிடவியலாளருமான‌ ஜார்ஜ் தாம்சன் இறப்பு நாள். (பிறப்பு-1903)
2005ல் செருமானிய-அமெரிக்க உயிரியலாளரும் பறவையியலாளருமான‌ எர்ணஸ்ட் மாயர் இறப்பு நாள். (பிறப்பு-1904)
2016ல் இந்திய அரசியல்வாதியான‌ பல்ராம் சாக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1923)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 02
Next articleFebruary 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 04