February 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 02

0

Today Special Historical Events In Tamil | 02-02 | February 02

February 02 Today Special | February 02 What Happened Today In History. February 02 Today Whose Birthday (born) | February-2nd Important Famous Deaths In History On This Day 02/02 | Today Events In History February 2nd | Today Important Incident In History | மாசி 02 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 02-02 | மாசி மாதம் 02ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 02.02 Varalatril Indru Nadanthathu Enna| February 02 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 02/02 | Famous People Born Today 02.02 | Famous People died Today 02-02.

Today Special in Tamil 02-02
Today Events in Tamil 02-02
Famous People Born Today 02-02
Famous People died Today 02-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 02-02 | February 02

ஸ்டாலின்கிராத் சமர் வெற்றி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (உருசியா)
கண்டுபிடிப்பாளர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தாய்லாந்து)
உலக சதுப்பு நில நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 02-02 | February 02

880ல் பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார்.
962ல் புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார்.
1141ல் லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.
1822ல் பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
1848ல் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது.
1848ல் கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
1868ல் சப்பானிய பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையை தோக்குகாவா படைகளிடம் இருந்து கைப்பற்றி அதனை எரித்து சாம்பலாக்கினர்.
1878ல் துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.
1880ல் முதலாவது மின்சார வீதி விளக்குகள் அமெரிக்காவில் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
1899ல் ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1901ல் விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1920ல் எஸ்தோனியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
1946ல் அங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
1971ல் ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ராம்சர் சாசனம் ஈரானில் கையெழுத்திடப்பட்டது.
1971ல் உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.
1972ல் டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1982ல் சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1989ல் ஆப்கான் சோவியத் போர்: ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.
1990ல் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
1998ல் பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் உயிரிழந்தனர்.
2005ல் கனடிய அரசு 2005 சூலை 20 முதல் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கும் குடிமைத் திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
2012ல் பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 02-02 | February 02

1522ல் இத்தாலியக் கணிதவியலாளரான‌ லொடோவிக்கோ பெராரி பிறந்த நாள். (இறப்பு-1565)
1859ல் பிரித்தானிய உளநலவியலாளரான‌ ஹேவ்லாக் எல்லிஸ் பிறந்த நாள். (இறப்பு-1938)
1871ல் அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞரான‌ பா. வே. மாணிக்க நாயக்கர் பிறந்த நாள். (இறப்பு-1931)
1882ல் அயர்லாந்து எழுத்தாளரும் கவிஞருமான‌ ஜேம்ஸ் ஜோய்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1941)
1896ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியுமான‌ வெ. அ. சுந்தரம் பிறந்த நாள். (இறப்பு-1967)
1905ல் உருசிய-அமெரிக்க எழுத்தாளரும் மெய்யியலாளருமான‌ அய்ன் ரேண்ட் பிறந்த நாள். (இறப்பு-1982)
1913ல் சப்பானிய வேளாண் அறிஞரும் மெய்யியலாளருமான‌ மசனோபு புக்குவோக்கா பிறந்த நாள். (இறப்பு-2008)
1915ல் இந்திய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான‌ குஷ்வந்த் சிங் பிறந்த நாள். (இறப்பு-2014)
1933ல் பர்மாவின் 8-வது பிரதமரான‌ தான் சுவே பிறந்த நாள்.
1939ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ தாலே தோமஸ் மார்டென்சென் பிறந்த நாள். (இறப்பு-2014)
1947ல் ஈழத்து மெய்யியலாளரும் கல்வியாளருமான‌ சோ. கிருஷ்ணராஜா பிறந்த நாள். (இறப்பு-2009)
1949ல் இலங்கைத் துடுப்பாட்ட வீரரான‌ சுனில் வெத்திமுனி பிறந்த நாள்.
1977ல் கொலம்பியப் பாடகியும் நடிகையுமான‌ சக்கீரா பிறந்த நாள்.
1985ல் இலங்கைத் துடுப்பாட்ட வீரரான‌ உபுல் தரங்க பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 02-02 | February 02

1594ல் இத்தாலிய இசையமைப்பாளரான‌ கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா இறப்பு நாள். (பிறப்பு-1525)
1907ல் தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளரான‌ திமீத்ரி மெண்டெலீவ் இறப்பு நாள். (பிறப்பு-1834)
1914ல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்ணும் போராளியுமான‌ தில்லையாடி வள்ளியம்மை இறப்பு நாள். (பிறப்பு-1898)
1955ல் கனடிய-அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளரான‌ ஓஸ்வால்ட் அவேரி இறப்பு நாள். (பிறப்பு-1877)
1960ல் தமிழக ஆய்வாளரும் பதிப்பாசிரியரும் இதழாசிரியரும் சொற்பொழிவாளரும் கவிஞருமான‌ மு. இராகவையங்கார் இறப்பு நாள். (பிறப்பு-1878)
1970ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மெய்யியலாளரும் கணிதவியலாளருமான‌ பெர்ட்ரண்டு ரசல் இறப்பு நாள். (பிறப்பு-1872)
1982ல் இராஜஸ்தான் முதலமைச்சரான‌ மோகன் லால் சுகாதியா இறப்பு நாள். (பிறப்பு-1916)
1987ல் உருசிய இயற்பியலாளரும் வானியலாளருமான‌ ஆபிரகாம் செல்மனோவ் இறப்பு நாள். (பிறப்பு-1913)
2009ல் இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான‌ கே. கோவிந்தராஜ் இறப்பு நாள். (பிறப்பு-1949)
2010ல் மலையாளத் திரைப்பட நடிகரும் இயக்குனருமான‌ கொச்சி ஹனீஃபா இறப்பு நாள். (பிறப்பு-1948)
2013ல் புதுச்சேரி மாநிலத்தின் 9வது முதலமைச்சரான‌ ப. சண்முகம் இறப்பு நாள். (பிறப்பு-1927)
2014ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான‌ பிலிப் சீமோர் ஹாப்மன் இறப்பு நாள். (பிறப்பு-1967)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 01
Next articleFebruary 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 03