December 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 08

0

Today Special Historical Events In Tamil | 08-12 | December 08

December 08 Today Special | December 08 What Happened Today In History. December 08 Today Whose Birthday (born) | December-8th Important Famous Deaths In History On This Day 08/12 | Today Events In History December 8th | Today Important Incident In History | மார்கழி 08 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 08-12 | மார்கழி மாதம் 08ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 08.12 Varalatril Indru Nadanthathu Enna| December 08 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 08/12 | Famous People Born Today 08.12 | Famous People died Today 08-12.

Today Special in Tamil 08-12
Today Events in Tamil 08-12
Famous People Born Today 08-12
Famous People died Today 08-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 08-12 | December 08

மரியாவின் அமல உற்பவம் விழாவாக கொண்டாடப்படுகிறது.
அன்னையர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பனாமா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 08-12 | December 08

1609ல் இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.
1825ல் முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசு) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது.
1854ல் இயேசுவின் தாய் மரியாள் பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் அமலோற்பவ அன்னை பற்றிய திருத்தந்தையின் தவறா வரம் ஒன்பதாம் பயசு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டது.
1881ல் ஆத்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 380 பேர் உயிரிழந்தனர்.
1907ல் ஐந்தாம் குசுத்தாவ் சுவீடன் மன்னராக முடிசூடினார்.
1914ல் முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச கடற்படை போக்லாந்து தீவுகளில் இடம்பெற்ற போரில் செருமனியக் கடற்படையைத் தோற்கடித்தது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் சாங்காய், மலாயா, [தாய்லாந்து]], பிலிப்பீன்சு, இடச்சு கிழக்கிந்தியா ஆகியவற்றின் மீது ஒரே நேரத்தில் தாக்குதலை ஆரம்பித்தன.
1941ல் பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை சப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா சப்பான் மீது போரை அறிவித்தது.
1941ல் பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு சப்பான் மற்றும் செருமனி மீது போரை அறிவித்தது.
1941ல் பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
1942ல் பெரும் இன அழிப்பு: உக்ரைனின் “டேர்னோப்பில்” என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் படையினர் கிரேக்கத்தில் மதப்பள்ளபொன்றைத் தாக்கி அங்கிருந்த மதகுருக்கள் உட்பட 22 பேரைப் படுகொலை செய்தனர்.
1953ல் ‘அணு அமைதிக்கே’ என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
1963ல் மேரிலாந்தில் அமெரிக்க விமானம் ஒன்று மின்னலால் தாக்கப்பட்டு வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.
1966ல் எரக்கிளியோன் என்ற கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஏஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் உயிரிழந்தனர்.
1969ல் கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 90 பேர் உயிரிழந்தனர்.
1971ல் 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: இந்தியக் கடற்படை கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது.
1972ல் சிகாகோவில் போயிங் 737 விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் உயிரிழந்தனர்.
1974ல் கிரேக்கத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மன்னராட்சியை இல்லாதொழிக்க மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
1980ல் பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1982ல் சுரிநாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
1985ல் சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
1987ல் பனிப்போர்: நடுத்தர-வீச்சு அணுவாயுதங்கள் தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்டு ரேகனும் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவும் வெள்ளை மாளிகையில் கையெழுத்திட்டனர்.
1987ல் பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.
1988ல் ஐக்கிய அமெரிக்க வான்படையின் ஏ-10 தண்டபோல்ட் 2 விமானம் செருமனியில் குடிமனைப் பகுதியில் வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.
1991ல் சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதெனவும், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் என்ற அமைப்பை உருவாக்குவதெனவும் உருசியா, பெலருஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
1998ல் அல்சீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004ல் தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம் உருவானது.
2010ல் எசுபேசுஎக்சு என்ற தனியார் நிறுவனம் பால்கன் 9 விண்கலத்தை இரண்டாவது தடவையும், டிராகன் விண்கலத்தை முதலாவது முறையும் விண்வெளிக்கு ஏவியது.
2010ல் சப்பானின் கார்க்கோசு விண்கலம் வெள்ளி கோளை 80,800 கிமீ தூரத்தில் கடந்தது.
2013ல் லிட்டில் இந்தியா கலவரம்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்ந்த விபத்தை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 08-12 | December 08

கிமு 65ல் உரோமைப் போர்வீரரும் கவிஞருமான‌ ஓராசு பிறந்த நாள். (இறப்பு-கிமு 8)
1542ல் ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பிறந்த நாள். (இறப்பு-1587)
1883ல் இந்தியத் துறவியும் யோகியுமான‌ ஆத்மானந்தர் பிறந்த நாள். (இறப்பு-1959)
1943ல் அமெரிக்கப் பாடகரும் கவிஞருமான‌ ஜிம் மோரிசன் பிறந்த நாள். (இறப்பு-1971)
1944ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் இராணுவ வீரருமான‌ சசிகுமார் பிறந்த நாள். (இறப்பு-1974)
1946ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ சர்மிளா தாகூர் பிறந்த நாள்.
1947ல் அமெரிக்க வானியலாளரான‌ மார்கரெட் கெல்லர் பிறந்த நாள்.
1947ல் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இயக்குநருமான‌ கங்கை அமரன் பிறந்த நாள்.
1948ல் சீன-அமெரிக்க மருத்துவ ஆய்வாளரான‌ கான்சுடன்சு டோம் நோகுசி பிறந்த நாள்.
1950ல் தமிழக அரசியல்வாதியான‌ செ. பெருமாள் பிறந்த நாள். (இறப்பு-2013)
1953ல் தமிழகத் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான‌ மனோபாலா பிறந்த நாள்.
1959ல் கொரிய அமெரிக்க மருத்துவரான‌ ஜிம் யோங் கிம் பிறந்த நாள்.
1960ல் மலேசிய அரசியல்வாதியான‌ லிம் குவான் எங் பிறந்த நாள்.
1966ல் கனடிய நடிகரான‌ டைலர் மானே பிறந்த நாள்.
1968ல் இலங்கை அரசியல்வாதியான‌ சிவஞானம் சிறீதரன் பிறந்த நாள்.
1976ல் இந்திய டென்னிசு வீராங்கனையான‌ நிருபமா வைத்தியநாதன் பிறந்த நாள்.
1978ல் அமெரிக்க நடிகரான‌ இயன் சோமர்ஹால்டர் பிறந்த நாள்.
1982ல் அமெரிக்க நடிகையான‌ நிக்கி மினாஜ் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 08-12 | December 08

1818ல் சுவீடன் வேதியியலாளரான‌ யோகான் கோட்லீப் கான் இறப்பு நாள். (பிறப்பு-1745)
1864ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரான ஜார்ஜ் பூல் இறப்பு நாள். (பிறப்பு-1815)
1903ல் ஆங்கிலேய உயிரியலாளரான‌ எர்பெர்ட் இஸ்பென்சர் இறப்பு நாள். (பிறப்பு-1820)
1978ல் இசுரேலின் 4வது பிரதமரான‌ கோல்டா மேயர் இறப்பு நாள். (பிறப்பு-1898)
1980ல் ஆங்கிலேயப் பாடகரான‌ ஜான் லெனன் இறப்பு நாள். (பிறப்பு-1940)
1982ல் ஈழத்து எழுத்தாளரும் பேச்சாளருமான‌ தேவன் யாழ்ப்பாணம் இறப்பு நாள். (பிறப்பு-1924)
1992ல் மலையாள நாடக மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான‌ தோப்பில் பாசி இறப்பு நாள். (பிறப்பு-1924)
1995ல் ஈழத்து எழுத்தாளரான‌ எஸ். அகஸ்தியர் இறப்பு நாள். (பிறப்பு-1926)
2002ல் தமிழகக் கவிஞரும் எழுத்தாளருமான‌ கு. இராமலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1922)
2014ல் தென்னிந்திய கருநாடக இசைப் பாடகரான‌ நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1927)
2014ல் இத்தாலிய பாடகரும் இசைக் கலைஞருமான‌ மாங்கோ இறப்பு நாள். (பிறப்பு-1954)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 07
Next articleDecember 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 09