December 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 07

0

Today Special Historical Events In Tamil | 07-12 | December 07

December 07 Today Special | December 07 What Happened Today In History. December 07 Today Whose Birthday (born) | December-7th Important Famous Deaths In History On This Day 07/12 | Today Events In History December 7th | Today Important Incident In History | மார்கழி 07 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 07-12 | மார்கழி மாதம் 07ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 07.12 Varalatril Indru Nadanthathu Enna| December 07 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 07/12 | Famous People Born Today 07.12 | Famous People died Today 07-12.

Today Special in Tamil 07-12
Today Events in Tamil 07-12
Famous People Born Today 07-12
Famous People died Today 07-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 07-12 | December 07

தேசிய வீரர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. (கிழக்குத் திமோர்)
கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
மரியாவின் அமல உற்பவம் விழாவாக கொண்டாடப்படுகிறது.
பேர்ள் துறைமுக நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய அமெரிக்கா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 07-12 | December 07

கிமு 43ல் உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார்.
574ல் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார்.
1703ல் பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1724ல் போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
1787ல் டெலவெயர் அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலமாக இணைந்தது.
1815ல் நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரான்சியத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1917ல் முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
1922ல் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.
1932ல் செருமனியில் பிறந்த சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு வருவதற்கு நுழைவாணை வழங்கப்பட்டது.
1936ல் ஆத்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் யாக் பிங்கிள்ட்டன் அடுத்தடுத்த நான்கு தேர்வுப் போட்டிகளில் சதம் எடுத்து சாதனை புரிந்தார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.
1941ல் பேர்ள் துறைமுகத் தாக்குதல்: சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
1946ல் அமெரிக்காவின் அட்லான்டா நகர உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.
1949ல் சீன உள்நாட்டுப் போர்: சீனக் குடியரசின் அரசு நாஞ்சிங்கில் இருந்து தாய்பெய்க்கு மாறியது.
1966ல் துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.
1971ல் பாக்கித்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
1972ல் அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் “அப்பல்லோ 17” சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.
1975ல் கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.
1982ல் அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் முதல் தடவையாக ஊசிமருந்து ஏற்றப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1983ல் எசுப்பானியாவில் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் உயிரிழந்தனர்.
1987ல் கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் உயிரிழந்தனர்.
1988ல் ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1988ல் யாசர் அரபாத் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார்.
1995ல் கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.
2015ல் சப்பானின் விண்கலம் அக்காத்சுக்கி வெள்ளிக் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
2016ல் பாக்கித்தான் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.
2017ல் ஆத்திரேலியாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 07-12 | December 07

903ல் பாரசீக வானியலாளரான‌ அல் சுஃபி பிறந்த நாள். (இறப்பு-986)
1542ல் ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பிறந்த நாள். (இறப்பு-1587)
1849ல் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான‌ பொன்னம்பலம் குமாரசுவாமி பிறந்த நாள். (இறப்பு-1906)
1883ல் சோவியத்-உருசிய வானியலாளரான‌ செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி பிறந்த நாள். (இறப்பு-1953)
1905ல் இடச்சு-அமெரிக்க வானியலாளரான‌ ஜெரார்டு குயூப்பர் பிறந்த நாள். (இறப்பு-1973)
1926ல் தமிழக அரசியல்வாதியான‌ கே. ஏ. மதியழகன் பிறந்த நாள். (இறப்பு-1983)
1928ல் அமெரிக்க மொழியியலாளரான‌ நோம் சோம்சுக்கி பிறந்த நாள்.
1929ல் ஈழத்துப் புதின எழுத்தாளரான‌ ந. பாலேஸ்வரி பிறந்த நாள். (இறப்பு-2014)
1932ல் அமெரிக்க ஊடகவியலாளரான‌ ரோஸ்மேரி ரோஜர்ஸ் பிறந்த நாள்.
1939ல் தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகியான‌ எல். ஆர். ஈஸ்வரி பிறந்த நாள்.
1993ல் தென்னிந்திய திரைப்பட நடிகையான‌ சுரபி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 07-12 | December 07

கிமு 43ல் உரோமை மெய்யியலாளரும் அரசியல்வாதியுமான‌ சிசெரோ இறப்பு நாள். (பிறப்பு-கிமு 106)
283ல் திருத்தந்தையான‌ யுட்டீக்கியன் இறப்பு நாள். (பிறப்பு-
1782ல் மைசூர் மன்னரான‌ ஐதர் அலி இறப்பு நாள். (பிறப்பு-1720)
1912ல் ஆங்கிலேய வழக்கறிஞரும் வானியலாளரும் கணிதவியலாளருமான‌ ஜார்ஜ் ஓவார்டு டார்வின் இறப்பு நாள். (பிறப்பு-1845)
1952ல் அமெரிக்க வானியலாளரான‌ பாரெசுட்டு இரே மவுள்டன் இறப்பு நாள். (பிறப்பு-1872)
1979ல் ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளரான‌ சிசிலியா பேய்னே கபோசுச்கின் இறப்பு நாள். (பிறப்பு-1900)
1984ல் உருசிய வேதியியலாளரான‌ நிகோலாய் இமானுவேல் இறப்பு நாள். (பிறப்பு-1915)
1985ல் ஆங்கிலேயக் கவிஞரும் எழுத்தாளரான‌ றொபேட் கிறேவ்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1895)
2006ல் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும் நீதிபதியுமான‌ பத்மநாதன் இராமநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1932)
2009ல் ஈழத்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமான‌ வை. அநவரத விநாயகமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1923)
2010ல் மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளரான‌ பான் இயூ தெங் இறப்பு நாள். (பிறப்பு-1942)
2011ல் தமிழக அரசியல்வாதியான‌ வி. பி. சிங்காரவேலு இறப்பு நாள். (பிறப்பு-1959)
2016ல் தமிழக நடிகரும் பத்திரிக்கையாளருமான‌ சோ இறப்பு நாள். (பிறப்பு-1934)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 06
Next articleDecember 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 08